Home
News

BSNL வாரி வழங்கும் '600ஜிபி டேட்டா' ப்ரீபெய்ட் திட்டம்.. விலை இவ்வளவு தான் ஆனா நன்மை ஏராளம்

குறைந்த விலையில் அதிக நாள் வேலிடிட்டி, குறைச்சல் இல்லாத டேட்டா, ஆலிமிடெட் வாய்ஸ் கால் நன்மை, போனால் போகட்டும் என்றும் தினசரி 100 SMS கிடைத்தால் கூட போதும் என்ற அளவில் தான் நமது மக்களின் எதிர்பார்ப்பு ப்ரீபெய்ட் திட்டங்களின் மீது இருக்கிறது. இவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற ஒரு திட்டம் BSNL இடமிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான BSNL நிறுவனம், அதன் பயனர்களுக்காக இப்படி ஒரு அசத்தலான திட்டத்தை வழங்குவது பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது.

மக்களின் எதிர்பார்ப்பைச் சரியாகப் பூர்த்தி செய்யும் BSNL திட்டம்

மக்களின் எதிர்பார்ப்பைச் சரியாகப் பூர்த்தி செய்யும் BSNL திட்டம்

நாட்டில் உள்ள வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனமும் இப்படி ஒரு மிரட்டலான ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் பயனர்களுக்காக வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL), அதன் பயனர்களுக்குப் பல நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இருப்பினும் BSNL வழங்கும் ஒரு குறிப்பிட்ட திட்டத்தின் நன்மைகள் மக்களின் எதிர்பார்ப்பைச் சரியாகப் பூர்த்தி செய்கிறது. அந்த திட்டத்தைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

குறைந்த விலையில் அதிக நாள் செல்லுபடியுடன் 600 ஜிபி டேட்டா

குறைந்த விலையில் அதிக நாள் செல்லுபடியுடன் 600 ஜிபி டேட்டா

இந்த திட்டத்தின் மூலம் பயனர்களுக்கு ஏராளமான பிற நன்மைகளுடன் மொத்தத் தரவையும் பெறுகிறார்கள் என்பதே இந்த திட்டத்தின் சிறப்பு. BSNL இன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ள மற்றொரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இத்திட்டம் உங்களுக்குத் தேவையான அனைத்து நன்மைகளையும் நீண்ட நாள் செல்லுபடியுடன் குறைந்த விலையில் வழங்குகிறது. குறிப்பாக இது 600 ஜிபி டேட்டாவை உங்களுக்கு வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

பிஎஸ்என்எல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்

நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த ப்ரீபெய்ட் BSNL திட்டம் ரூ.1999 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் மொத்தம் 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் இப்போது நாட்டில் உள்ள பல வட்டங்களில் ரீசார்ஜ் செய்யக் கிடைக்கிறது. BSNL இலிருந்து வரும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்கும் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினமும் 100 SMS மற்றும் 600 ஜிபி மொத்த டேட்டா கிடைக்கிறது.

சரியாக தான் கேட்டீர்கள் வரம்புயில்லாமல் 600ஜிபி டேட்டா

சரியாக தான் கேட்டீர்கள் வரம்புயில்லாமல் 600ஜிபி டேட்டா

ஆம், நீங்கள் கேட்டது சரிதான், இந்தத் திட்டத்தின் மூலம் அதன் பயனர்கள் 600ஜிபி மொத்த டேட்டாவைப் பெறுகிறார்கள். இதற்குத் தினசரி வரம்பு என்று எதுவுமில்லாத காரணத்தினால், மக்கள் இதைப் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்றைய காலத்தில், பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்கள் தினசரி டேட்டா வரம்புகளான 1.5 ஜிபி, 2 ஜிபி அல்லது 3 ஜிபி உடன் மட்டுமே வருகின்றன. ஆனால், இந்த திட்டத்தில், அந்த வரம்பு 600 ஜிபிக்கு செல்கிறது.

600 ஜிபி டேட்டாவையும் ஒரே நாளில் கூடப் பயன்படுத்தலாமா?

600 ஜிபி டேட்டாவையும் ஒரே நாளில் கூடப் பயன்படுத்தலாமா?

இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் 600 ஜிபி டேட்டாவை பயனர் எப்போது பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பது அவர்களுடைய விருப்பமாகும். 600 ஜிபி டேட்டாவையும் ஒரே நாளில் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்தலாம் அல்லது ஆண்டு முழுவதும் நிலைக்கும் படி பிரித்துப் பக்குவமாகக் கூட பயன்படுத்தலாம். ஏதுவாக இருப்பினும் அதன் பயனர் விருப்பமே. இந்த திட்டத்தின் முக்கிய சிறப்பே, பயனர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில்,

இதுமட்டுமில்லை இன்னும் கூடுதல் நன்மைகள் கூட இருக்கு

இதுமட்டுமில்லை இன்னும் கூடுதல் நன்மைகள் கூட இருக்கு

தங்களுக்குத் தேவைப்படும் போது ஏராளமான தரவைப் பயன்படுத்த முழு சுதந்திரம் இதில் கிடைக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த 600 ஜிபி அளவிலான டேட்டாவை பயனர் பயன்படுத்தி முடித்த பிறகு, இணைய வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படும். இத்துடன் கூடுதல் சலுகையாக, பயனர்களுக்கு 30 நாட்களுக்கு PRBT நன்மை, 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் நன்மை மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் உள்ளடக்க நன்மை போன்ற நன்மைகளும் கிடைக்கிறது.

யாருக்கெல்லாம் இந்த திட்டம் பெஸ்ட்

யாருக்கெல்லாம் இந்த திட்டம் பெஸ்ட்

இந்த திட்டம் உங்களுக்குச் சிறந்த பலன்களை வழங்கினாலும், PAN-India 4G நெட்வொர்க்கிற்குள் இது இல்லை என்பதே ஒரு குறைபாடு. ஒவ்வொரு பயனரும் BSNL இன் சிம்மைத் தங்கள் சாதனத்தில் இரண்டாம் நிலையாக வைத்திருந்தால், வருடாந்திரத் திட்டத்திற்குச் செல்ல முடியாது. ஆனால், BSNL இன் சிம்மை தங்கள் சாதனத்தில் முதன்மை சிம்மாக வைத்திருப்பவர்களுக்கு, இந்த திட்டம் சிறப்பானது. குறிப்பாக, நீங்கள் நிறுவனத்திடமிருந்து நீண்ட கால விருப்பத்தைத் தேடுகிறீர்களானால், இது உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் ஆகும்.

Best Mobiles in India

English summary
BSNL Offers 600GB Data For One Year with 365 Days Validity Plan For Just Rs 1999 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X