மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல்: ஆனால் இதைபின்பற்ற வேண்டும்.!

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்கு போட்டியாக பல்வேறு புதிய புதிய திட்டங்களை கொண்டுவந்துகொண்டே தான் இருக்கிறது. அன்மையில் பிஎஸ்என்எல் நிறுவனம் பேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து வைஃபை வழியாக டேட்டாவை வழங்க முடிவு செய்திருக்கிறதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை மாவட்டத்திலும் 4ஜி

மதுரை மாவட்டத்திலும் 4ஜி

ஏற்கனவே தமிழகத்தில் கோவை, சேலம், திருச்சி, ஆகிய மாவட்டங்களுக்கு 4ஜி சேவையை வழங்கிவரும் பிஎஸ்என்எல்நிறுவனம் தற்சமயம் மதுரை மாவட்டத்திலும் 4ஜி சேவையை துவங்கிவிட்டது.

படிப்படியாக 4ஜி சேவையை துவங்கியுள்ளது

குறிப்பாக இந்தியாவில் இருக்கும் இருக்கும் அனைத்து தனியார் நெட்வொர்க் நிறுவனங்களும் 4ஜி சேவைகளுக்கு இணையசேவையை வழங்க, அரசு நெட்வொர்க் நிறுவனமான பிஎஸ்என்எல் தற்போது அனைத்து இடங்களிலும் படிப்படியாக 4ஜி சேவையை துவங்கியுள்ளது.

ரூ.6,999-விலையில் மிரட்டலான 32-இன்ச் எல்இடி டிவி அறிமுகம்.!ரூ.6,999-விலையில் மிரட்டலான 32-இன்ச் எல்இடி டிவி அறிமுகம்.!

139பேஸ் டவர்கள்

139பேஸ் டவர்கள்

மேலும் மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட 139பேஸ் டவர்கள் வழியாக 4ஜி சேவை மக்களுக்கு வழங்கப்படும் என்று உறுதிஅளித்துள்ளார் மதுரை பிஎஸ்என்எல் பொது மேலாளர் ராஜம். குறிப்பாக மதுரையில் இருக்கும் பிஎஸ்என்எல் பயனர்கள் தங்களின் 3ஜி சிம்மை மாற்றி 4ஜி சிம்மை பெற்றால் மட்டுமே இந்த சேவைகளை தொடர்ந்து பெற முடியும் எனக் கூறப்பட்டுள்ளது.

 2ஜி வாடிக்கையாளர்

2ஜி வாடிக்கையாளர்

மதுரை மண்டலத்தில் வரும் வருமான வகை மாவட்டங்களான தேனி, திண்டுக்கல்,சிவகங்ககை, ராமாநாதபுரம் ஆகியமாவட்டங்களில் 2ஜி வாடிக்கையாளர் எந்த வகையான பிரச்சனையும் இன்றி தங்களின் பயன்பாட்டை தொடர இயலும்
என்பது குறிப்பிடத்தக்கது.

உயிர் பலிக்கு முற்றுப்புள்ளி: மனித கழிவுகளை அகற்ற வந்தாச்சு ரோபோ 2.0..!உயிர் பலிக்கு முற்றுப்புள்ளி: மனித கழிவுகளை அகற்ற வந்தாச்சு ரோபோ 2.0..!

 38 ஆயிரம் நபர்களே

38 ஆயிரம் நபர்களே

3ஜி சேவையை பயன்படுத்தும் 68 ஆயிரம் வாடிக்கையாளர்களில் 38 ஆயிரம் நபர்களே 4ஜி சிம்களுக்கு அப்டேட் ஆகியுள்ளனர். அவர்கள் நெட்வொர்க் ஃப்ளக்சுவேசனை எதிர் கொள்வதை தடுக்க முன்பே எஸ்.எம்.எஸ்கள் மற்றும் கால்கள் மூலமாக தகவல்கள்அளிக்கப்பட்டுவிட்டது என்றும், பின்பு 4ஜி சேவைகளுக்கான டேரிஃபில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 0452-255-0000 பிஎஸ்என்எல்

0452-255-0000 பிஎஸ்என்எல்

இருந்தபோதிலும் மதுரை மாவட்டத்திற்கு வெளியே இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை மதுரையில் பெற வேண்டும் என்றால் கண்டிப்பாக 4ஜி சிம்களை பெறவேண்டும் என்றும். தல்லாகுளம், கிழக்கு மாசி வீதி, வடக்கு சித்திரை வீதி,எல்லிஸ் நகர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் பி.எஸ்.என்.எல். சேவை மையங்களில் 4ஜி சிம்கார்ட்களை பெற்றுக் கொள்ளலாம். 0452-255-0000 பிஎஸ்என்எல்
சேவைகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் இந்த எண்ணுக்கு அழைத்து பேசிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேவை மூலம் சிறந்த வாய்ஸ் கால் அழைப்பு மற்றும் சிறந்த டவுன்லோடு வேகம் பெற முடியும்.

Best Mobiles in India

English summary
BSNL Offers 4G Services in Madurai: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X