பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்தால் 4% கமிஷன்.! அதிரடி அறிவிப்பு.! பெறுவது எப்படி?

|

பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து அருமையான சலுகையை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் மற்ற பிஎஸ்என்எல் எண்களை ரீசார்ஜ் செய்யும் நுகர்வோருக்கு 4சதவிகிதம் தள்ளுபடி அளிப்பதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகை மே 31-ம் தேதி வரை அணுக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக அறிவித்துள்ள இந்த சலுகை அப்னோ கி மடாட் சே ரீசார்ஜ் என்று அழைக்கப்படுகிறது.

எண்ணை ரீசார்ஜ்

சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், பிஎஸ்என்எல் பயனருக்கு மற்றொரு பிஎஸ்என்எல் எண்ணை நண்பராகவோ அல்லது குடும்பத்தினராகவோ ரீசார்ஜ் செய்ய உதவுகிறது. மேலும் குறிப்பிட்ட எண்ணை ரீசார்ஜ் செய்யும்போது,ரீசார்ஜ் நிகழ்த்தும் பிஎஸ்என்எல் பயனருக்கு நான்கு சதவீத தள்ளுபடி கிடைக்கும், இது கேஷ்பேக் ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பறக்காதபோது விமானங்கள் எங்கு செல்கின்றன? வைரல் ஆனா வீடியோ!பறக்காதபோது விமானங்கள் எங்கு செல்கின்றன? வைரல் ஆனா வீடியோ!

அனுமதிக்கும்

மேலும் இந்நிறுவனம் மகர் பைத் ரீசார்ஜ் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இது பயனர்கள் ஒருபிஎஸ்என்எல் அதிகாரியிடம் ரீசார்ஜ் செய்யுமாறு கோரிக்கை விடுக்க அனுமதிக்கும். இதற்காக சந்தாதாரர் கட்டணமில்லா
எண் ஆன 5670099 ஐ அழைத்து, ரீசார்ஜ் செய்யுமாறு கோர வேண்டும்.

நீட்டித்துள்ளது என்பது

ஆனால் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் இதுபோன் சலகையை ஏற்கனவே அறிவித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது Work@Home விளம்பர பிராட்பேண்ட் திட்டத்தின் செல்லுபடியை மே 19 வரை நீட்டித்துள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.

வழங்குவதற்காக

கடந்த மாதம் இந்த திட்டத்தை பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய அணுகலை வழங்குவதற்காக அறிவித்தது. இந்த லாக்டவுன் விளைவாக அறிவிக்கப்பட்டுள்ள நாடு தழுவிய சமூக தொலைதூரத்தைஊக்குவிப்பதற்கும்,
சந்தாதாரர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய ஊக்குவிப்பதற்கும் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.

திட்டம் அனைத்

குறிப்பாக இந்த திட்டம் அனைத்து பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்களும் 10எம்பிபிஎஸ் வரையிலான பதிவிறக்கவேகம் கொண்ட 5ஜிபி டேட்டா/நாள் நன்மையை வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த விளம்பர பிராட்பேண்ட் திட்டத்தை ஆரம்பத்தில் ஏப்ரல் 19-ம் தேதி வரை மட்டுமேஅணுக கிடைக்கும் என்று கூறி இருந்தது. ஆனால் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்
"வொர்க்@ஹோம்" விளம்பர பிராட்பேண்ட் திட்டத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி மே 19வரை திட்டத்தின் கிடைக்கும் தன்மையைக் காட்டும் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனது அந்தமான்

இந்த அருமையான திட்டம் ஆனது அந்தமான், நிக்கோபார் வட்டம் உட்பட அனைத்து வட்டங்களிலும் அணுக கிடைக்கிறது,
குறிப்பாக வொர்க்@ஹோம் பிராட்பேண்ட் திட்டமானது தினசரி 5ஜிபி டேட்டா ஒதுக்கீட்டை 10எம்பிபிஎஸ் வேகத்தின் கீழ் வழங்கும். பின்பு இந்த வரம்பை மீறிய பின்னர் இணைய வேகமானது 1Mbps ஆக குறையும். குறிப்பாக இதற்கு எந்த மாத கட்டணமும், பாதுகாப்பு வைப்பு தொகையும் தேவையில்லை, எனவே தற்போதுள்ள வாய்ஸ் கால் சந்தாவில் எந்த மாற்றங்களும் இருக்காது மற்றும்
லேண்ட்லைன் திட்டத்தின்படி அழைப்பு கட்டணங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்கள் கட்டணமில்லா

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் பிஎஸ்என்எல் லேண்ட்லைன் சந்தாதாரர்கள் கட்டணமில்லா எண் 1800-345-1504-ஐ டயல் செய்வதன் மூலம் இந்த புதிய பிராட்பேண்ட் திட்டத்தை பெறமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL offers 4% discount for recharging other BSNL numbers: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X