Home
News

BSNL தான் கிங்கு.. அள்ளி அள்ளிக் கொடுக்கும் BSNL.. தினமும் 3GB டேட்டா.. இந்தியாவின் மலிவு விலை பிளான்ஸ்..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு மிகமிக மலிவான விலையில் தினசரி 3GB டேட்டா நன்மையை வாரி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ரூ. 300 கூட விலை இல்லாமல், தினமும் 3GB டேட்டா நன்மையை வழங்கும் ஒரே இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமாக பிஎஸ்என்எல் (BSNL) மட்டும் இயங்கி வருகிறது. இது எந்த திட்டம்? இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன? மற்றும் மற்ற விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு தினசரி டேட்டாவின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தினமும் 1GB டேட்டா நன்மை, தினசரி 1.5GB டேட்டா நன்மை, தினமும் 2GB டேட்டா நன்மை தினசரி 2.5GB டேட்டா நன்மைகள் என்று டெலிகாம் நிறுவனங்கள் பல வகையிலான டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்களை வழங்கி வருகின்றன. ஆனாலும் கூட, டேட்டாவின் தேவை தீர்ந்தபாடில்லை. இதை சரி செய்யவே, டெலிகாம் நிறுவனங்கள் தினசரி 3GB டேட்டா நன்மை திட்டங்களை அறிமுகம் செய்துள்ளன.

BSNL தான் கிங்கு.. அள்ளி அள்ளிக் கொடுக்கும் BSNL.. தினமும் 3GB டேட்டா

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) போன்ற டெலிகாம் ஆபரேட்டர்களின் இந்த திட்டங்கள் சற்று விலை உயர்ந்தவையாக இருக்கிறது. இருப்பினும் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் மலிவு விலையில் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்குகின்றன. உங்களுக்கு தினசரி கிடைக்கும் டேட்டா நன்மை போதவில்லை என்றால், பிஎஸ்என்எல் வழங்கும் அதீத டேட்டா நன்மை கிடைக்கும் இந்த தினசரி 3GB டேட்டா நன்மை திட்டங்களை ட்ரை செய்து பாருங்கள்.

இந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மை விபரங்கள் இதோ. இதில் முதல் திட்டமாக பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL RS 299 Prepaid Plan) திகழ்கிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் 30 நாட்களாக வழங்கப்பட்டுள்ளது. இந்த 30 நாள் வேலிடிட்டி காலத்திற்கு தினசரி 3GB டேட்டா நன்மையை இத்திட்டம் வழங்குகிறது.

மலிவு விலையில் தினசரி 3GB டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு அசத்தலான திட்டமாக அமைகிறது. நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90GB டேட்டா நன்மை கிடைக்கும். இதுமட்டுமின்றி, இந்த திட்டதுடன் கிடைக்கும் தினசரி 3GB டேட்டா நன்மை தீர்ந்த பிறகு, இணைய வேகம் உங்களுக்கு 40 Kbps ஆக குறைக்கப்பட்டு, அன்லிமிடெட் டேட்டா நன்மையையும் பயன்படுத்த கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில்அன்லிமிடெட் லோக்கல் வாய்ஸ் கால்ஸ் நன்மை (Unlimited Local Voice Calls), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) போன்ற நன்மைகளும் 30 நாட்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் கூட கிடைக்கப் பெறுகிறது. இத்தனை நன்மைகள் கிடைத்தாலும், இதில் உள்ள ஒரே ஒரு குறை என்றால், இந்த திட்டத்தில் ஓடிடி (OTT) நன்மைகள் எதுவும் கிடைக்காது.

அடுத்தபடியாக, பிஎஸ்என்எல் வழங்கும் தினசரி 3GB டேட்டா நன்மை திட்டம் என்றால், அது பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 599 Prepaid plan) தான். இந்த BSNL 599 Plan ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஏறக்குறைய இந்த திட்டம் உங்களுக்கு 3 மாதங்களுக்கு நெருக்கமான வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது.

இந்த பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 252GB டேட்டா நன்மையை அனுபவிக்க முடியும். முந்தைய திட்டம் போலவே, உங்களுக்கு வழங்கப்படும் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இந்த திட்டம் உங்களுக்கு 40 Kbps வேகத்தில் இணைய சேவையை தடையில்லாமல் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தினசரி கிடைக்கும் 3GB டேட்டா நன்மையுடன், இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) நன்மைகளை வழங்குகிறது.

இந்த ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. முந்தைய திட்டம் போலவே இந்த திட்டத்துடன் OTT நன்மை மற்றும் பிற இலவச கூடுதல் நன்மைகள் என்று எதுவும் சேர்க்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிஎஸ்என்எல் இறுதியாக தினசரி 3GB டேட்டா நன்மையை நீண்ட காலத்திற்கு வழங்கும் திட்டமாக பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தை (BSNL Rs 2999 prepaid plan) வைத்துள்ளது.

இந்த திட்டம் தினசரி 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது. நீண்ட கால நன்மை என்று இந்த திட்டத்தை குறிப்பிட காரணம், இந்த திட்டம் 1 வருடம் முழுக்க உங்களுக்கு தினசரி 3GB டேட்டா நன்மையை தடையின்றி வழங்குகிறது. அதாவது, 365 நாட்களுக்கு தினமும் இந்த திட்டம் 3GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்ட பயனர்களுக்கு மொத்தமாக 1095GB டேட்டா நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த பிஎஸ்என்எல் ரூ.2999 திட்டத்தின் தினசரி டேட்டா நன்மையான 3GB ஹை ஸ்பீட் டேட்டா நன்மை தீர்ந்த பிறகு, இந்த திட்டம் 40 Kbps வேகத்தில் நீண்ட காலத்திற்கு அன்லிமிடெட் டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல், இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை 365 நாட்களுக்கு செல்லுபடியாகும் படி வழங்குகிறது. இந்த திட்டம் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) நன்மையை வழங்குகிறது.

இத்துடன் இந்த பிஎஸ்என்எல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம், அதன் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. தினசரி 3GB டேட்டா நன்மையை எதிர்பார்க்கும் மக்கள் இந்த பிஎஸ்என்எல் திட்டங்களை கருத்தில்கொள்ளலாம். 1 வருடம் முழுக்க குறைந்த செலவில் தினசரி 3GB டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினமும் 100 SMS நன்மைகளை எதிர்பார்க்கும் மக்களுக்கு BSNL Rs 2999 Plan சிறப்பானது.

Best Mobiles in India

English summary
BSNL Offers 3GB Daily Data Benefit Plan Starts From Rs 299 To Rs 2999 Check Details Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X