Home
News

BSNL போட்டப்போடு.. மாதம் வெறும் ரூ.99 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. 3GB டேட்டா!

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் மூக்கில் விரல் வைக்கும்படி மாதம் வெறும் ரூ.99 செலவில் 365 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பிஎஸ்என்எஸ் (BSNL) நிறுவனம் கொடுக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு விவரங்களை பார்ப்போம்.

இந்த பிஎஸ்என்எல் வருடாந்திர திட்டத்தில் (BSNL Yearly Plan) கம்மி விலைக்கு அதிக நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுவதால், வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ்களில் (SMS) சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இருப்பினும், நாள்தோறும் அனைத்து சலுகைகளையும் பயன்படுத்த முடிகிறது.

BSNL போட்டப்போடு.. மாதம் வெறும் ரூ.99 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி!

பிஎஸ்என்எல் ரூ 1198 திட்ட விவரங்கள் (BSNL Rs 1198 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்கள் வீதம் 12 மாதங்களுக்கு சலுகைகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. அதாவது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு மாதாந்தோறும் 300 நிமிடங்களுக்கு லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கும்.

அதோபோல மாதத்துக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் 30 எஸ்எம்எஸ் சலுகைகள் வழங்கப்படுகிறது. இதே போல மாதாமாதம் தொடர்ந்து சலுகைகளை கொடுக்கப்படும். அப்படி 12 மாதங்களுக்கு மேற்கூறிய 3 சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். ஆகவே, ஒரு மாதத்துக்கு ஒதுக்கப்பட்ட சலுகைகளை முன்கூட்டியே பயன்படுத்திவிட்டால், அதன் பின் கட்டணம் வசூலிக்கப்படும்.

ஆனால், மாதந்தோறும் 300 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகைகள் என்பது பல வாடிக்கையாளர்களுக்கு போதுமானாதாகவே இருக்கிறது. அதேபோல டேட்டாவும் அதிகமாக தேவைப்படாத வாடிக்கையாளர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டம் மிகுந்த சலுகைகள் கொண்டதாகவே இருக்கிறது. ஏனென்றால், இந்த திட்டத்துக்கு மதாந்திரம் ரூ.99ஆக மட்டுமே தேவைப்படுகிறது.

மேலும், இந்த திட்டத்தில் மூலம் ஆண்டு முழுவதும் சிம் ஆக்டிவாக இருப்பதால், அதற்கான கூடுதல் செலவு செய்ய வேண்டியது கிடையாது. ஆகவே, எப்படி பார்த்தாலும் இந்த திட்டம் கம்மி விலையில் லாபம் தரக்கூடிய திட்டமாகவே இருக்கிறது. உங்களுக்கு தினசரி டேட்டா வேண்டுமானால், ரூ.2399 விலை கொண்ட திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் ரூ 2399 திட்ட விவரங்கள் (BSNL Rs 2399 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நாள்தோறும் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. அதுபோக கூடுதல் வேலிடிட்டி மற்றும் ஓடிடி சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, இந்த திட்டத்துக்கு 395 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

இந்த நாட்களில் தினசரி 2 ஜிபி டேட்டா சலுகை வீதம் மொத்தமாக 790 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 40 கேபிபிஎஸ் வேகத்தில் ஃபேர் யூசேஜ் பாலிசியின் (Fair Usage Policy) டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபிக்கு பிறகும் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்தலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் போக ஹர்டி கேம்ஸ், சேலஞ்சர் அரினா கேம்ஸ், லைஸ்டின் பாட்காஸ்ட் மற்றும் ஜிங்க் மியூசிக் (Zing Music) ஆகிவற்றின் சந்தா கிடைக்கும்.

இந்த திட்டத்தில் ஓடிடி சலுகைகளை பார்க்கையில், வாவ் எண்டர்டெயின்மென்ட் (WOW Entertainment) கிடைக்கிறது. ஆகவே, இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமானது, அனைத்து சலுகைகளையும் கொடுக்கிறது. இதற்காக மாதம் செலவை பார்த்தால், ரூ.184 மட்டுமே இருக்கிறது. ஆகவே, நல்ல சலுகை கொண்டதாகவே இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Offers 365 Days Validity, 3GB Data, Voice Calls For Just Rs 1198 Plan Check Yearly Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X