நொந்துபோன ஜியோ, ஏர்டெல்.. ரூ.107, ரூ.108 திட்டங்களில் கூடுதல் சலுகையை வழங்கிய BSNL.. யாரு விடுவா?
ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi), ஏர்டெல் (airtel) நிறுவனங்கள் ப்ரீபெய்ட்ட கட்டணங்களை உயர்த்தியதால் இப்போது பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிக மக்கள் இணைந்து வருகின்றனர். அதுவும் பிஎஸ்என்எல் நிறுவனம் மலிவு விலையில் அதிக நன்மையைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதோடு வரும் மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவை வழங்க உள்ளது பிஎஸ்என்எல்.
அடுத்த வருடம் 5ஜி சேவையும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். எனவே தான் இந்நிறுவனத்தில் நிறுவனத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ஜியோ, ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் ஒரு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் சலுகையை வழங்கி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.107 ப்ரீபெய்ட் திடடம் (Bsnl Rs 107 prepaid recharge plan) தான் கூடுதல் சலுகை வழங்கியுள்ளது. அதாவது மற்ற டெலிகாம் நிறுவனம் இதேபோன்ற விலையுள்ள திட்டங்களில் 20 நாள் அல்லது அதற்கும் குறைவான வேலிடிட்டி தான் வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மட்டும் 35 நாட்கள் வேலிடிட்டி வழங்கி உள்ளது.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா, 200 நிமிட வாய்ஸ் கால்கள், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் (BSNL Tunes) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக மலிவு விலையில் ஒரு மாதம் வேலிடிட்டி வேண்டும் என எதிர்பார்க்கும் மக்கள் இதில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதே அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.108 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Bsnl Rs 108 prepaid recharge plan) ஆனது அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டதில் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
மேலும் சமீபத்தில் 4ஜி மற்றும் 5ஜி சேவையின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia). அதாவது வரும் அக்டோபர் இறுதிக்குள் 80,000 டவர்களும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மீதமுள்ள 21,000 டவர்களுகம் நிறுவப்படும் என்று தெரிவித்தார். அதாவது மார்ச் 2025-க்குள் ஒரு லட்சம் டவர்களில் 4ஜி நெட்வொர்க் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது நாடு முழுவதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முழுமையாக 4ஜி சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த டவர்கள் அமைக்கும் பணி முடிந்ததும், 4ஜி தளங்களை 5ஜி நெட்வொர்க்காக மாற்றுவது பிஎஸ்என்எல்-ன் வேலையாக இருக்கும். அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் 4ஜி-ஐ செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் அனைத்து உபகரணங்களும் இந்தியாவில் இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.
தற்போது 5ஜி திட்டம் சோதனை கட்டத்தில் உள்ள நிலையில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிஎஸ்என்எல 5ஜி-ஐ பயன்படுத்தி வீடியோகால் சேவையை முதல் முறையாகப் பரிசோதித்துப் பார்த்தார். டெல்லியில் உள்ள c-dot கேம்பஸில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த வீடியோ காலில் பெண் ஒருவருடன் 5ஜி சேவையின் செயல்திறன் குறித்துப் பேசினார். இதன் மூலம் பிஎஸ்என்எல் 5ஜி தொழில்நுட்பத்தின் செயல் திறன் உறுதியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications