Home
News

BSNL-க்கு கும்பிடு.. வெறும் ரூ.800-க்கு இறங்கிய 300 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் திக்குமுக்காடும்படி மத்திய தொலைத்தொடர்பு துறையின் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களை கொடுக்கிறது. இப்போது, வெறும் ரூ.800-க்கும் கம்மியான அடிமட்ட விலையில் 300 நாட்கள் வேலிடிட்டியை கொடுத்து ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு சிம் ஆக்டிவ் கொடுக்கிறது இந்த 300 நாட்கள் வேலிடிட்டி திட்டம். இந்த அடிமட்ட விலைக்கு மற்ற டெலிகாம் நிறுவனங்களில் திட்டங்களே கிடையாது. வெறும் சிம் ஆக்டிவ் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டேட்டா (Data) சலுகையையும் கொடுத்து பட்ஜெட் கஸ்டமர்களை குளிர செய்துள்ளது.

BSNL-க்கு கும்பிடு.. வெறும் ரூ.800-க்கு இறங்கிய 300 நாட்கள் வேலிடிட்டி

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.797ஆக இருக்கிறது. இந்த விலைக்கு 300 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால் ரீசார்ஜ் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. இருப்பினும், வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகைகளை 300 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்த முடியாது. அதாவது, இதில் சிம் ஆக்டிவ் 300 நாட்களுக்கும் இருக்கும். வேறு பேஸ் திட்டம் தேவைப்படாது.

பிஎஸ்என்எல் 300 நாட்கள் வேலிடிட்டி திட்டம் (BSNL 300 Days Validity Plan): இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்துக்கு (BSNL Prepaid Plan) 60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த நாட்களுக்கு பிறகு பிஎஸ்என்எல் கஸ்டமர்களுக்கு சிம் ஆக்டிவ் (SIM Active) சலுகையானது, 10 மாதங்களுக்கு தொடர்ந்து இருக்கும்.

வேறு திட்டங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. இந்த 60 நாட்கள் சலுகைகளை பார்க்கையில், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகைகளும் வருகின்றன. டேட்டாவை பார்க்கையில் 2 ஜிபி கிடைக்கிறது. 60 நாட்களுக்கும் தினசரி லிமிட்டில் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த 2 ஜிபி தினசரி டேட்டாவுக்கு ஃபேர் யூசேஜ் பாலிசி (Fair Usage Policy) டேட்டா கிடைக்கிறது. 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை அன்லிமிடெட் கணக்கில் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த 40 கேபிபிஎஸ் டேட்டாவும் அந்த 60 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும். அதன்பிறகு மீதம் இருக்கும் நாட்களுக்கு போஸ்ட் டேட்டா சலுகை கிடைக்காது.

இந்த 60 நாட்களில் 100 எஸ்எம்எஸ் வீதம் தினசரிக்கு கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, பிஎஸ்என்எல் சிம் கார்டை செகண்டரி சிம் கார்டாக வைத்து கொள்ள பக்கா ஆப்ஷன். ஏனென்றால், சிம் ஆக்டிவ் கிடைக்க வெறும் 797 செலவு செய்தால் போதும் வருடம் முழுவதும் இன்கம்மிங் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதுபோல மற்ற நிறுவனங்களில் இல்லை.

ஒருவேளை உங்களுக்கு இதேபோல மலிவு விலையில் அதிக டேட்டாவுடன் திட்டம் வேண்டுமானால், ரூ 897 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் 90 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும்.

முந்தைய திட்டத்தை போலவே இதிலும் 90 ஜிபிக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம். ஆனால், 180 நாட்கள் முழுவதும் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த ஆறு மாதங்களில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, நேஷனல் ரோமிங் கால்களை செய்து கொள்ள முடியும். இதிலும் எஸ்எம்எஸ் சலுகைகள் இருக்கிறது.

ஆகவே, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வீதம் 180 நாட்களுக்கும் செய்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்ற நிறுவனங்கள் கொடுக்க முடியாத விலைக்கு இருக்கின்றன. வரும் நாட்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் கிடைத்துவிட்டால், இதைவிட லாபகரமான ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கப்போவது இல்லை. ஆகவே, இதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Offers 300 Days Validity Prepaid Plan With Unlimited Voice Calls 2GB Data For Under Rs 800
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X