Home
News

ரூ397 போதும்.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. சலுகையை வழங்கி அதிரடி காட்டிய BSNL.. வேலிடிட்டி?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் விதமாக அவ்வப்போது பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது. அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் அதிக வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் சலுகையை வழங்கி உள்ளது. இப்போது பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் சலுகைகளை பார்ப்போம்.

ரூ397 போதும்.. சலுகையை வழங்கி அதிரடி காட்டிய BSNL.. வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 150 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கிறது. எனவே பிஎஸ்என்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் தற்போது 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். அதேபால் இது ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் விளம்பர சலுகை ஆகும். மேலும் இந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம்.

பிஎஸ்எனஸ்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எமஎஸ், மற்றும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். ஆனால் இந்த இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள் போன்றவை 30 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதற்குப் பிறகு டேட்டா, எஸ்எம்எஸ், அழைப்பு நன்மைகள் வேண்டும் என்றால் மற்றொரு திட்டத்தில் தான் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஆனால் இந்த திட்டம் 180 நாட்கள் வேலிடிட்டி வழங்கும்.

குறிப்பாக சிம் கார்டை நீண்ட நாட்கள் செயலில் வைத்திருக்க இந்த பிஎஸ்எனஸ்எல் ரூ.397 ப்ரீபெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் வழங்கும் சில அசத்தலான திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 40Kbps ஆக குறைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள். குறிப்பாக இந்த திட்டம் கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் 54 நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அரினா மொபைல் கேமிங் சேவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ397 போதும்.. சலுகையை வழங்கி அதிரடி காட்டிய BSNL.. வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குத் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஸிங் மியூசிக் (Zing Music), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் (GameOn) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை 40கேபிபிஎஸ் என்கிற இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டாவையும் வழங்கும் இந்த திட்டம்.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் அடுத்த ஆண்டு தான் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL offers 30 days extra validity on Rs 397 prepaid plan: Check all details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X