Home
News

30 நாட்கள் வேலிடிட்டி தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்கள்: இதோ பட்டியல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக பிஎஸ்எல்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் மற்ற தனியார் நிறுவனங்களை விட கம்மி விலையில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

 பிஎஸ்என்எல் நிறுவனம் பல புதிய

விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனம் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. மேலும் இப்போது 30 நாட்கள் வேலிடிட்டி தரும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஸ்என்எல் எஸ்டிவி-147

பிஸ்என்எல் எஸ்டிவி-147

பிஎஸ்என்எல் எஸ்டிவி-147 என்று அழைக்கப்படும் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 10ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்ததிட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் இலவச BSNL ட்யூன்களைப் பெறமுடியும். அதேபோல் இந்தபிஎஸ்என்எல் ரூ.147 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் எஸ்டிவி_247

பிஎஸ்என்எல் எஸ்டிவி_247

பிஎஸ்என்எல் எஸ்டிவி_247 என்று அழைக்கப்படும் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி அளவிலான மொத்த டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் 50ஜிபி டேட்டாவை தவிர பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவை, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, எஸ்எம்எஸ் நன்மை, உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

 பிஎஸ்என்எல் எஸ்டிவி-299

பிஎஸ்என்எல் எஸ்டிவி-299

பிஎஸ்என்எல் எஸ்டிவி-299 என்று அழைக்கப்படும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். குறிப்பாக இந்த திட்டம் மிகவும்பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் சமீபத்தில் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்த இரண்டு திட்டங்களைப் பார்ப்போம்.

 ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் டேட்டா தீர்ந்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். குறிப்பாக ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம். அதேபோல் ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

 ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டம் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம்.

Best Mobiles in India

English summary
BSNL offers 30 day prepaid plans at affordable prices: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X