30 நாட்கள் செல்லுபடி கொண்ட 2ஜிபி இலவச டேட்டா: பிஎஸ்என்எல் அறிவிப்பு.!
இந்த வாய்ப்பு முடிந்த 30 நாட்களுக்கு பிறகு, சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து இணையத்தைப் பெற கூடுதல் தரவுத் தொகுப்புகள் அல்லது திட்டங்களை வாங்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.
அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஸ்மார்ட்போன் பயனர்களுக்கான புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

அதன் ஜிஎஸ்எம் மொபைல் சேவைகளின் கீழ் தொடங்கப்பட்டுள்ள இந்த இலவச டேட்டா திட்டமானது நேற்று (ஜனவரி 05, 2017) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஒரு விளம்பர வாய்ப்பாகும், இந்த வாய்ப்பின் கீழ் வாடிக்கையாளர்கள் 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை பெறுவார்கள்.

3ஜி திறன் கொண்ட புதிய பிஎஸ்என்எல் ஜிஎஸ்எம்
இந்த பிஎஸ்என்எல் வாய்ப்பானது 3ஜி திறன் கொண்ட புதிய பிஎஸ்என்எல் ஜிஎஸ்எம் தரவு சந்தாதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த வாய்ப்பு முடிந்த 30 நாட்களுக்கு பிறகு, சந்தாதாரர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து இணையத்தைப் பெற கூடுதல் தரவுத் தொகுப்புகள் அல்லது திட்டங்களை வாங்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது.

இலவச டேட்டா வாய்ப்பு
பிஎஸ்என்எல் நிறுவனத்தின்படி, இந்த புதிய விளம்பர ஊக்குவிப்பானது அரசாங்கத்தின் டிஜிட்டல் இந்தியாவின் முன்முயற்சியை அடிப்படையாகக் கொண்டது. இணையத்தை சந்திக்கும் முதல் சந்தாதாரர்களுக்கு இந்த இலவச டேட்டா வாய்ப்பு உதவுமென நம்பப்படுகிறது.

ரூ.499/- என்கிற மிக மலிவான விலையில் டி1
கடந்த மாதம், பிஎன்என்எல் நிறுவனம் டிடெல் உடன் தனது பங்களிப்பை அறிவித்து, ரூ.499/- என்கிற மிக மலிவான விலையில் டி1 என்று அழைக்கப்படும் ஒரு புதிய பீச்சர் மொபைலை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. ரூ.153/- என்கிற கட்டணத் திட்டத்துடன் டிடெல் டி 1 பீச்சர் மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 365 நாட்கள் என்ற கிடைப்பதற்கான செல்லுபடி
இந்த பிரத்யேக திட்டத்தின் ந65 நாட்கள் என்ற கிடைப்பதற்கான செல்லுபடின்மைகளை பொறுத்தமட்டில் ரூ.103/- பேச்சுநேரம்பி கிடைக்கும். இதில் பிஎஸ்என்எல்-டூ -பிஎஸ்என்எல் நிமிடத்திற்கு 15 பைசாவும், மற்ற நெட்வர்க்குகளுக்கு நிமிடத்திற்கு 40 பைசாவ வும் வசூலிக்கப்படும். இந்த திட்டம் 365 நாட்கள் என்ற கிடைப்பதற்கான செல்லுபடியைக் கொண்டு வருகிறது மற்றும் 28 நாட்களுக்கு செல்லுபடியான தனிப்பட்ட திட்டமாகவும் வருகிறது.

ஒற்றை சிம் ஸ்லாட்
டி1 பீச்சர் போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், 1.44 அங்குல மோனோக்ரோம் டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த தொலைபேசி ஒற்றை சிம் ஸ்லாட்டைக் கொண்டுள்ளது மற்றும் இது 650எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. டார்ச் லைட், ஃபோன் புக், எஃப்எம் ரேடியோ, ஸ்பீக்கர் மற்றும் வைப்ரேஷன் மோட் போன்ற பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் வருகிறது.


Click it and Unblock the Notifications