நாள் ஒன்றுக்கு 22ஜிபி டேட்டா தரும் திட்டத்தை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.! வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளனர், குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் சிறப்பான திட்டங்களை வைத்துள்ளது இந்நிறுவனம். பின்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது.

இந்நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் BSNL 22GB CULஎன்ற பிராட்பேண்ட் திட்டத்தில் தினசரி 22ஜிபி டேட்டா நன்மையை வழங்கியுள்ளது.குறிப்பாக ரூ.1,299-விலையில் அறிமுகமான இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பின் பலனும் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,299-பிராட்பேண்ட் திட்டத்தில் 10Mbps வரையிலான வேகத்தில், தினசரி 22 ஜிபி தரவை பயன்படுத்தலாம்.டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு இணைய வேகம் 2Mbps ஆக குறையும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,299-பிராட்பேண்ட் திட்டம் ஆனது அந்தமான் மற்றும் நிக்கோபார் (Andaman and Nicobar)தவிர அனைத்து இடங்களிலும் கிடைப்பதாக டெலிகாம் வலைதளம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தை தேர்வுசெய்ய வாடிக்கையாளர்களுக்கு நான்கு
விதமான கட்டண விருப்பங்கள் உள்ளது. ஆனால் அவை அனைத்திலும் ஒரே மாதியான நன்மைகளை பெறமுடியும்.

அதாவது முதல் விருப்பத்தில் இதற்காக நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,299 செலுத்தி, இந்த திட்டத்தை பெறலாம், இது ஒரு நிலையான மாதாந்திர கட்டணம் செலுத்தும் விருப்பம் ஆகும்.இரண்டாவதாக ஆண்டு சந்தா எடுக்க வேண்டும், அதன்படி 15,588 ரூபாயில் வருடாந்திர கட்டணம் திட்டத்தை வாங்கலாம், மாத வாடகையுடன் ஒப்பிடும்போதுஇ ஆண்டு சந்தா 2,598 ரூபாய் உங்களுக்கு சேமிப்பு ஆகும்.

கடைசியாக மூன்றாவது மற்றும் நான்காவது விருப்பங்கள் முறையே 2 ஆண்டு மற்றும் 3 ஆண்டு முன்கூட்டியே கட்டணம் செலுத்தும் திட்ட சலுகையும் உள்ளன, இதில் பயனர்களிடம் ரூ.31,176 மற்றும் ரூ.46,764 வசூலிக்கப்படும்.

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஒரு ஆண்டு மற்றும் இரண்டு ஆண்டு திட்டங்களை வாடிக்கையாளர்கள் வாங்கும் பட்சத்தில், 1 மாத மற்றும் 3 மாத இலவச சேவையைப் பெறமுடியும். பின்பு மூன்று பிராட்பேண்ட் திட்டத்துடன் பயனர்கள் 4மாத இலவச சேவையைப் பெறமுடியும்.

மேலும் இந்த அட்டகாச திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் முகவரியுடன் 1ஜிபி இலவச கிளவுட் சேமிப்பிடத்தையம் பெறுவார்கள்,பின்பு இதன்மூலம் பயனர் விரும்பினால், அவர் ஆண்டுக்கு ரூ.2000 செலுததி நிலையான ஐபி முகவரி கூட பெறமுடியும். பிஎஸ்என்எல் திட்டத்தில் வரம்பற்ற அழைப்புகளை பெறமுடியும், இதற்காக ஒவ்வொரு இணைப்பையும் கொண்ட லேண்ட்லைன் தொலைபேசியும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications