Home
News

பிஎஸ்என்எல் ரூ.39 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்? எத்தனை நாட்கள் வேலிடிட்டி?

பிஎஸ்என்எல் நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதுவும் இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.40-க்கு கீழ் ஒரு திட்டத்தில் அதிக டேட்டா நன்மையை வழங்கி உள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.39 திட்டத்தில் (BSNL Rs 39 Plan) 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே ஆகும். குறிப்பாக இது டேட்டா பேக் ஆகும். ஆகவே இதைப் பயன்படுத்த, உங்களுக்கு ஒரு செயலில் உள்ள ப்ரீபெய்ட் திட்டம் தேவைப்படும். மேலும் இந்த திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட டேட்டாவை பயன்படுத்திய பிறகு, டேட்டா வேகம் 40 Kbps ஆக குறைந்துவிடும்.

பிஎஸ்என்எல் ரூ.39 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்?

அதாவது ஒரே நாளில் அதிக பயன்பாட்டிற்கான டேட்டா வவுச்சரை தேடும் பயனர்களுக்கு இது ஒரு மிகச் சிறந்த திட்டம் ஆகும். மேலும் பிஎஸ்என்எல் ரூ.19 விலையில் ஒரு டேட்டா பேக் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டம் 1 நாள் வேலிடிட்டி உடன் 2ஜிபி டேட்டாவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் வேலிடிட்டி நன்மையை வழங்கியது. இப்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்தில் 47 நாட்கள் கூடுதலாக வேலிடிட்டி கிடைக்கும். ஆகவே நீங்கள் இப்போது பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 412 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்பட்ட கூடுதல் வேலிடிட்டி சலுகை ஆனது குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதுவும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் ரூ.39 ப்ரீபெய்ட் திட்டம்.. என்னென்ன நன்மைகள்?

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை குறித்த தகவல்களும் வெளியானது. சென்னை பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் சுதாகரராவ் வெளியிட்ட தகவலின்படி, சென்னை பிஎஸ்என்எல் வட்டாரத்தில் செயல்படும் 1,902 செல்போன் கோபுரங்களில், இதுவரை 1,214 கோபுரங்கள் 4ஜி சேவைக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள கோபுரங்களையும் அடுத்த 6 மாதங்களுக்குள் 4ஜி சேவைக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்தவுடன், தற்போது செல்போன் சேவையில் நிலவி வரும் இடையூறுகள் பெருமளவில் சரிசெய்யப்படும்.

இதைதொடர்ந்து தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்குள் பிஎஸ்என்எல். நிறுவனத்தின் 5ஜி (5G) சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 5ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Offers 20GB Data for Under Rs 40: Check This Affordable Data Voucher
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X