பிஎஸ்என்எல் பயனர்களுக்கு இதுதான் குட் நியூஸ்: ரூ.197 திட்டம்: 2ஜிபி டேட்டா: 54நாள் வேலிடிட்டி.!
பிஎஸ்என்எல் நிறவனம் தொடர்ந்து மலிவான விலையில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக புதிய சலுகைகளும் அறிவித்து வருகிறது பிஎஸ்என்எல்
நிறுவனம்.

ஆனால் ஜியோ நிறுவனமோ அன்மையில் பல்வேறு திட்டங்களை நீக்கிய வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும், இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கேப்பு கிடைக்கும் இடைத்தில் எல்லாம் ஆப்பு வைப்பது போல புதிய திட்டங்களையும், சலுகைகளையும்அறிவித்து வருகிறது பிஎஸ்என்எல் நிறவனம்.

பிஎஸ்என்எல் ரூ.197 திட்டம்
அதன்படி தற்போது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.197-திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் தனசரி 2ஜிபி டேட்டாவீதம் 54நாட்களுக்கு வழங்குகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் 54நாட்கள் என்ற வேலிடிட்டி நன்மைகளுடன் வெளிவருகிறது. இந்த திட்டத்தில் PRBT என்கிற நன்மையை பயனர்கள் பெறுவார்கள். ஆனால் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அழைப்பு நன்மைகள் எதுவும் கிடையாது.

ஏர்டெல் நிறுவனத்துடன் ஒப்பிடுகையில்...
குறிப்பாக தனியார் தொலைதொடர்பு ஆப்ரேட்டர்கள் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை ரூ.399 மற்றும் ரூ.400 என்கிற விலையில் வழங்குகின்றனர். உதரணமாக ஏர்டெல் நிறுவனம் ஒரு நாளைக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை 56நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வழங்கும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது, அந்த திட்டத்தின் விலை ரூ.399-ஆகும்.
ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் வழங்கப்பட்டாலும் கூட, பிஎஸ்என்எல் நிறுவனம்வழங்கும் 2ஜிபி டேட்டாவை விட குறைவான டேட்டாவையே வழங்குகிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறந்த திட்டம்
பஎஸ்என்எல் நிறுவனத்தின் சிறந்த திட்டம் எனப்படும் ரூ.548-திட்டமானது ஒரு நாளைக்கு 5ஜிபி அளவிலான டேட்டாவைவழங்குகிறது. இந்த திட்டதின் வேலிடிட்டி 90நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் கால் அழைப்பு வசதி மற்றும் எஸ்எம்எஸ் வசதி வழங்கப்படவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.939 மற்றும் ரூ.448 திட்டங்கள்
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் ரூ.939 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 250நிமிட அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பிஆர்பிடி மற்றும் ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 80நாட்கள் ஆகும்.

பிஎஸ்என்எல் ரூ.448 திட்டம் ஆனது 84நாட்கள் வேலிடிட்டி வசதியுடன் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் ஒருநாளைக்கு 2ஜிபி அளவிலான டேட்டா, 250நிமிட அழைப்பு நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications