BSNL: STV_185 மற்றும் STV_347 உடன் ரூ.1,50,000 மதிப்புள்ள பரிசு.. ரூ.50,000 மதிப்புள்ள வவுச்சர் பரிசும் உண்டா?
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட STV பேக்கள் (சிறப்பு கட்டண வவுச்சர்கள்) உடன் இப்போது கேமிங் ரசிகர்களுக்கு அற்புதமான பரிசுகளை வழங்குகிறது. BSNL இடம் இருந்து கிடைக்கும் அந்த மாபெரும் பரிசுகள் BSNL இல் இரண்டு வவுச்சர்களில் இருந்து மட்டுமே கிடைக்கிறது. BSNL வெளியிட்டுள்ள தகவலின் படி, STV_185 மற்றும் STV_347 உடன் பரிசை வெல்லும் வாய்ப்பு இப்போது கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் பரிசுகளின் மதிப்பு எவ்வளவு என்பதைப் பார்க்கலாம்.

ரூ. 1,50,000 மதிப்புள்ள பரிசு.. ரூ. 50,000 மதிப்புள்ள வவுச்சர் பரிசும் உண்டா?
பிஎஸ்என்எல் அறிவித்துள்ள அறிவிப்பின் படி, இந்த STV_185 மற்றும் STV_347 என்ற சிறப்பு கட்டண திட்டங்கள் மூலம் பயனர்களுக்கு ரூ. 1,50,000 மதிப்புள்ள பரிசுகளை வெல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. இத்துடன் கூடுதலாக ரூ. 50,000 மதிப்புள்ள வவுச்சர்களையும் பயனர்கள் பெற்று ரீசார்ஜ் செய்யலாம் என்று ஒரு போஸ்டரில் BSNL நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் சேலஞ்சஸ் அரீனா கேம்ஸின் பலனைத் தொகுத்து, இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டன. இந்தத் திட்டங்களில் ஒன்றின் மூலம் பயனர்கள் பெறும் நன்மைகளைப் பார்ப்போம்.

BSNL STV_185 திட்ட விவரங்கள்
BSNL STV_185 ஆனது 28 நாட்களுக்கு ஒரு குறுகிய செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் 1GB தினசரி டேட்டாவை பெறுகிறார்கள். இத்துடன் தினமும் 100 SMS மற்றும் BSNL ட்யூன்களுடன் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையையும் வழங்குகிறது. முற்போக்கான வலைப் பயன்பாட்டில் (PWA) Challenges Arena Mobile Gamingக்கான இலவச சந்தாவையும் இந்த திட்டம் பயனர்களுக்கு வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL STV_347 திட்ட விவரங்கள்
BSNL அதன் STV_347 திட்ட பயனர்களுக்கு 56 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில், அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் தினசரி 2GB டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் சேர்த்து இந்த திட்டம் அதன் பயனர்களுக்குத் தினமும் 100 SMS மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் PWA இல் உள்ள Challenges Arena மொபைல் கேமிங்கின் சந்தாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமிங்கை விரும்பும் பயனர்களுக்குப் பெரிய பரிசு
இந்த இரண்டு திட்டங்களும் தற்போது கேமிங்கை விரும்பும் பயனர்களுக்குப் பெரிய பரிசுகளை வழங்குகின்றன. மதிப்பின் அடிப்படையில் கூட, இந்த இரண்டு திட்டங்களும் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடமிருந்து பெறுவதை விட மிகக் குறைவான தொகைக்கு டேட்டா மற்றும் செல்லுபடியை வழங்குகின்றன என்பது கவனிக்கத்தக்கது. நீங்களும் ஒரு கேமர் ரசிகர் என்றால், இந்த திட்டங்களை கவனிப்பது அதிக பயனை வழங்கும்.

இந்த திட்டத்தை எங்கிருந்து பெறலாம்?
இந்தத் திட்டங்களுடன் நீங்கள் ரீசார்ஜ் செய்ய விரும்பினால், BSNL இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது iOS மற்றும் Android சாதனங்களுக்கான நிறுவனத்தின் புதிய மொபைல் செயலியான 'Selfcare'-ஐயும் பதிவிறக்கம் செய்து ரீசார்ஜ் செய்யலாம். BSNL Selfcare ஆனது Google Play Store இல் உள்ள வாடிக்கையாளர்களால் மிகவும் உயர்வாக மதிப்பிடப்பட்டுள்ள புதிய பயன்பாடாகும். மேலும் இது Vodafone Idea இன் மொபைல் செயலியில் நீங்கள் பார்ப்பது போன்ற நவீன UI ஐக் கொண்டுள்ளது.

BSNL Selfcare ஆப்ஸ் நன்மைகள்
இந்த புதிய ஆப்ஸ் மூலம் BSNL தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கூடுதல் திட்டங்களையும் நீங்கள் பார்க்கலாம், இது அதன் இணையதளம் மற்றும் மொபைல் ஆப்ஸ் மூலம் ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகளை வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. BSNL Selfcare ஆப்ஸ் மூலம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாகக் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்துடன் சலுகைகளும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications