பிஸ்என்எல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அதிர்ஷம் - 50% கேஷ்பேக் அறிவிப்பு.!
ரூ.250/-க்கும் குறைவான விலை மதிப்பு கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு அதிகபட்சமக இந்த போன்பே கேஷ்பேக் ஆஃபர் வாய்ப்பின் மூலம் ரூ.50/- கிடைக்கும். மற்றும் அதற்கு மேலான ரீசார்ஜ்களுக்கு ரூ.75/- கிடைக்குமென்பத
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 'பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக் ஆஃபர் என்கிறவொரு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 50% வரை கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

ரூ.250/-க்கும் குறைவான விலை மதிப்பு கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு அதிகபட்சமக இந்த போன்பே கேஷ்பேக் ஆஃபர் வாய்ப்பின் மூலம் ரூ.50/- கிடைக்கும். மற்றும் அதற்கு மேலான ரீசார்ஜ்களுக்கு ரூ.75/- கிடைக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

போன்பே பயன்பாட்டின் வழியாக மட்டுமே
உதாரணமாக பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் பயனர்கள் ரூ.100/- மதிப்பிலான ரீசார்ஜ் செய்தால் ரூ.50/-க்கான கேஷ்பேக் வாய்ப்பை பெறலாம். இதை போன்பே பயன்பாட்டின் வழியாக மட்டுமே நிகழ்த்தமுடியுமென்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு முறையும் கிடைக்காது
உடன் போன்பே பயன்பாட்டை பயன்படுத்தி நிகழ்த்தும் முதல் ரீசார்ஜுக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் வாய்ப்பு கிடைக்கும் என்பதையும், ஒவ்வொரு முறையும் கிடைக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது. வேலட், கிரெடிட் கார்டு, டெபிட் கார்ட் அல்லது நிகர பேங்கிங் மூலம் கேஷ்பேக்கை பெறலாம்.

வரம்பற்ற தரவு + ரோமிங் குரல் அழைப்பு
சமீபத்தில் பிஎஸ்என்எல் தனது புதிய "கூல்" என்கிற அற்புதமான திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த புதிய கூல் திட்டத்தின் வாயிலாக வரம்பற்ற தரவு அணுகலுடன் சேர்த்து வரம்பற்ற உள்ளூர் மற்றும் எந்த நெட்வொர்க்குக்கும் உடனான ரோமிங் குரல் அழைப்புகளையும் அனுபவிக்கலாம். மேலும் செல்லுபடியாகும் காலம் வரையிலாக நாள் ஒன்றிற்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறலாம்.

84 நாட்களுக்கு செல்லுபடி
ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் விலை நிர்ணயம் ரூ.1099/- ஆகும்.. அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தனது 4ஜி சேவைகளை நாட்டில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அது 4ஜி சேவைகளை தொடங்கியும் உள்ளதென்பது இங்கு குறிப்பிடத்தக்கது

டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது
மேற்குறிப்பிட்டுள்ளபடி இந்த புதிய 'கூல்' வாய்ப்பின் கீழ், செல்லுபடியாகும் தேதி வரை ஒவ்வொரு நாளும் வரம்பற்ற தரவுகளை அனுபவிக்கலாம். இதன் அர்த்தம் டேட்டாவிற்கு எந்தவிதமான வரம்பும் கிடையாது. மறுகையில் குரல் அழைப்பும் வரம்புகளின்றி கிடைக்கும்.

நாடு முழுவதிலும் கிடைக்கின்றது
இந்த சலுகையின் கீழ் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சந்தாதாரர்கள், தனிப்பட்ட ரிங்கிங் பேக் டோனுக்கான (Personalised Ring Back Tone - PRBT) அணுகலையும் பெறுவார்கள். கூடுதல் சிறப்பம்சமாக இந்த "கூல்" வாய்ப்பானது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அனைத்து வட்டங்களிலும், நாடு முழுவதிலும் கிடைக்கின்றது.


குரல் அழைப்புகள் மற்றும் தரவு
இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட ரூ.1,595/- என்கிற வரம்பற்ற திட்டமானது அதன் குரல் அழைப்புகள் மற்றும் தரவுகளை வரம்பின்றி மொத்தம் ஒருமாத காலத்திற்கு அளிக்கிறது. அதே நேரத்தில் இதன் எஸ்எம்எஸ் சலுகையில் மட்டும் வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும்
உத்தியோகபூர்வ பிஎஸ்என்எல் வலைத்தளத்தின்படி, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1595/- திட்டம் கிடைக்கும். ஒருவேளை இந்த திட்டத்தின்கீழ் இணையும் புதிய வாடிக்கையாளராக இருந்தால் ரூ.500/- என்கிற செக்யூரிட்டி டெபாசிட் வசூலிக்கப்படும்.

எந்தவொரு எல்லையும் கிடையாது
இந்த திட்டத்தின் மூலம் வழங்கப்படும் நன்மைகளை பற்றி பேசனினால், இது வரம்பற்ற ஆன்-நெட் மற்றும் ஆஃப்-நெட் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இங்கு இரண்டு நன்மைகள் உள்ளன: முதலாவதாக, அழைப்புகள் உண்மையிலேயே வரம்பற்றவை, எந்தவொரு எல்லையும் கிடையாது.

வேக கட்டுப்பாடு இல்லாத தரவு நன்மை
இரண்டாவதாக, பயனர் ஒரு லேண்ட்லைன் எண்ணுக்கு கூட குரல் அழைப்புகளை நிகழ்த்தலாம். உடன் எந்தவொரு வரம்பும் மற்றும் வேக கட்டுப்பாடும் இல்லாத தரவு நன்மையையும் அனுபவிக்கலாம். இதுபோல் எந்த வரம்பும் இல்லாமல் காம்போ அழைப்புகளை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனம் பிஎஸ்என்எல் தான்.

250 எஸ்எம்எஸ்
எஸ்எம்எஸ் நன்மைகளை பொறுத்தமட்டில், இந்த திட்டம் ஒரு பில்லிங் சுழற்சியின்கீழ் 250 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் பல பிஎஸ்என்எல், பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா, டெலினார் போன்ற நிறுவனங்களின் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications