பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: 4 விதமான விலையில் கடன் வசதி திட்டம்!

|

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்க்கு நான்கு விதமான விலையில் டாக் டைம் லோன் எனப்படும் குரல் அழைப்பு கடன் வசதி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு விதமான குரல் அழைப்பு கடன் வசதி

நான்கு விதமான குரல் அழைப்பு கடன் வசதி

பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்) தனது வாடிக்கையாளர்களுக்கு நான்கு விதமான குரல் அழைப்பு கடனை வழங்குகிறது. பிஎஸ்என்எல் அறிவித்த இந்த சலுகையானது பேச்சு நேர கடன் வசதியாக வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பல்வேறு தரப்பு மக்களும் பணிக்கு செல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் பொருளாதாரம் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளது.

அவசரத்திற்கு ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை

அவசரத்திற்கு ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை

இதன்காரணமாக அவசரத்திற்கு ரீசார்ஜ் செய்ய முடியாத நிலை ஏற்படலாம்., கையில் பணப்பற்றா குறை காரணமாக தவித்து வரும் மக்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது. ரீசார்ஜ் செய்ய முடியாத சூழ்நிலையில் சிக்கும் வாடிக்கையாளர்களுக்கு 4 விதமான பேச்சு கடன் வசதி வழங்கப்படுகிறது.

மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!மாயன் சொன்ன பூமியின் இறுதிநாள் 2020 தான்! 8 வருடங்களுக்கு பிறகு நம்பமுடியாத கணக்கு!

அதிகபட்சமாக ரூ.50 வரை ரீசார்ஜ் செய்யலாம்

அதிகபட்சமாக ரூ.50 வரை ரீசார்ஜ் செய்யலாம்

பிஎஸ்என்எல் வழங்கும் இந்த பேச்சு நேர கடன் சலுகை வசதியின் கீழ், ஒன்லிடெக் அறிக்கையின்படி வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக ரூ.50 வரை ரீசார்ஜ் செய்யலாம். குரல் அழைப்பு கடன் வசதிகளானது ரூ.10, ரூ.20, ரூ.30 மற்றும் ரூ.50 என நான்கு விதத்தில் கிடைக்கிறது.

யுஎஸ்எஸ்டி குறியீட்டு எண்

யுஎஸ்எஸ்டி குறியீட்டு எண்

இந்த குரல் அழைப்பு கடனை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் யுஎஸ்எஸ்டி குறியீட்டு எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். இதில் தங்களுக்கு விரும்பிய தொகையைத் தேர்ந்தெடுக்கலாம். அழைக்க வேண்டிய யுஎஸ்எஸ்டி குறியூடு எண்ணானது *511*7# ஆகும்.

விரும்பும் கடன் தொகையை தேர்ந்தெடுக்கலாம்

விரும்பும் கடன் தொகையை தேர்ந்தெடுக்கலாம்

*511*7# என்ற எண்ணுக்கு டயல் செய்தவுடன் தங்களுக்கு ஒரு எஸ்எம்எஸ் வரும். அதில் தங்கள் விரும்பும் கடன் தொகையை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் ரிப்ளை செய்த பிறகு தங்களுக்கு தேவையாந கடன் சலுகை தொகை கிடைக்கும்.

குரல் அழைப்பு கடன் வசதி திட்டம்

குரல் அழைப்பு கடன் வசதி திட்டம்

இருப்பினும் குரல் அழைப்பு கடன் வசதி திட்டத்தின் கீழ் விவரங்கள் குறித்து பிஎஸ்என்எல் அறிவிக்கவில்லை என்றாலும் அதன் வாடிக்கையாளர்களுக்கு இந்த அறிவிப்பு நிச்சயமாக பெரிதளவு வரவேற்பு மற்றும் பாராட்டு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆரம்பத்தில் ரூ.10 மட்டுமே

ஆரம்பத்தில் ரூ.10 மட்டுமே

2016 ஆம் ஆண்டில் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுபோல் குரல் அழைப்பு கடன் சலுகை வழங்கியது. அப்போது ரூ.10 தொகையை எஸ்எம்எஸ் உதவியோடு சேர்த்து வழங்கியது. அதன்பின் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் போது ரூ.11 ஆக கடன் தொகைக்கு கழிக்கப்பட்டது.

இந்திய - சீன எல்லை மோதல்: கொதித்த இந்தியர்கள்! கூகுளில் தேடுவது இதுதான்.!இந்திய - சீன எல்லை மோதல்: கொதித்த இந்தியர்கள்! கூகுளில் தேடுவது இதுதான்.!

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யக் கூடிய திட்டம்

வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யக் கூடிய திட்டம்

தற்போதைய இந்த குரல் அழைப்பு கடன் சலுகையானது வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யக் கூடியபடி வழங்கப்படுகிறது. அதேபோல் வழங்கப்படும் கடன் தொகையானது ரீசார்ஜ் செய்த பிறகு எவ்வளவு கழிக்கப்படும் என விவரங்கள் தெரியவில்லை.

Best Mobiles in India

English summary
Bsnl offering its customers talk time loan under 4 plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X