இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது நம்ம பிஎஸ்என்எல்.!

|

அன்மையில் தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது பிஎஸ்என்எல். அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக

பிராட்பேண்ட் சேவையை வழங்க இன்று முடிவு செய்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.

இலவச பிராட்பேண்ட் சேவையை வழங்குவதாக அறிவித்துள்ளது நம்ம பிஎஸ்என்எல்.!

குறிப்பாக லேண்ட்லைன் சேவையை பயன்படுத்துவோருக்கு டேட்டா பலன்களுடன் கூடிய பிராட்பேண்ட சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. பின்பு புதிய சலுகை பிஎஸ்என்எல் சேவை வழங்கப்படும் அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும்

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆக்டிவேட்

ஆக்டிவேட்

இப்போது அறிவிக்கப்பட்ட இந்த இலவச சேவையை ஆக்டிவேட் செய்து கொள்ள வாடிக்கையாளர்கள் கட்டணமில்லா

தொலைபேசி எண்ணறிக்கு அழைப்பு விடுக்க வேண்டும். ரிலையன்ஸ் ஜியோவின் பிராட்பேண்ட் சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்ற நிலையில் தான், பிஎஸ்என்எல் தனது அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது.

லேண்ட்லைன்

லேண்ட்லைன்

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்களது லேண்ட்லைன் பயன்படுத்தி 18003451504 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைப்பு விடுத்து பிராட்பேண்ட் சேவைக்கு முன்பதிவு செய்து கொள்ள முடியும்..

கட்டணமின்றி பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்

கட்டணமின்றி பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும்

முன்பதிவு செய்தபின்பு வாடிக்கையாளர்களின் முகவரியில் கட்டணமின்றி பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும் என்று

தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் சேவையை பயன்படுத்துவோர் இதற்கென தனி

கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், அந்த வகையில் புதிய சலுகை வந்தபின்பு இந்த கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இலவச பிராட்பேண்ட் சேவையுடன் மேலும் சில இலவசங்களை வழங்குகிறது பிஎஸ்என்எல்.

25 சதவிகிதம் கேஷ்பேக்

25 சதவிகிதம் கேஷ்பேக்

அதன்படி இந்த இணைப்பின் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒவ்வொரு மாதம் 5ஜிபி டேட்டாவினை இலவசமாக வழங்குகிறது. 5ஜிபி டேட்டா தீர்ந்தபின்பு, பிஎஸ்என்எல் லேண்ட்லைன் பயனர்கள் கூடுதல் டேட்டாவிற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். மேலும் இத்துடன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஆண்டு சலுகைகளை வாங்கும் போது 25 சதவிகிதம் கேஷ்பேக் வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL-offering-free-broadband-service-to-its-landline: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X