ஒரே ஒரு ரீசார்ஜ்: ஒரு வருடத்திற்கு கவலை இருக்காது.! அசத்தும் BSNL ப்ரீபெய்ட் திட்டம்.!
தனியார் டெலிகாம் நிறுவனங்களை விட பல அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல் நிறுவனம். குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவை வழங்கிவிட்டன. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் இதுவரை 4ஜி சேவையை கூட வழங்கவில்லை என்பது மிகப் பெரிய பின்னடைவாக இருக்கிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் குறைந்த விலையில் பல அசத்தலான திட்டங்களை வைத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். அதுவும் இந்நிறுவனத்தின் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்திற்கு இப்போதும் கூட நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி தரும் ஒரு அசத்தலான திட்டத்தை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டத்தைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தின் கீழ், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்ற பல சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டம் 600ஜிபி மொத்த டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு (அதாவது 600ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு) இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

இதுதவிர பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 30 நாட்களுக்கு பிஆர்பிடி ரிங்டோன், 30 நாட்களுக்கு ஈரோஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் 30 நாட்களுக்கு லோக்துன் கன்டென்ட் போன்றவைகள் இலவசமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வரம்பற்ற டேட்டா நன்மை மற்றும் வாய்ஸ் கால் நன்மைகளை விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. மேலும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் வழங்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.
பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இந்த டேட்டா உபயோகத்திற்குத் தினசரி வரம்பு இல்லை. இருப்பினும், 50ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறையும். மேலும் BSNL ட்யூன்ஸ், EROS now பொழுதுபோக்கு
சேவைகளுக்கான அணுகலுடன் வருகிறது பிஎஸ்என்எல் ரூ.247 ப்ரீபெய்ட் திட்டம்.
பிஎஸ்என்எல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 52 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் என்டர்டெயின்மென்ட் சேவைகள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.769 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகளையும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். அதேபோல் பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், ஈரோஸ் நவ் என்டர்டெயின்மென்ட் சேவைகள், ஹார்டி மொபைல் சேவைகள், Lystn இசை, Zing மற்றும் நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications