பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் 5ஜிபி இலவச டேட்டா.! இவர்களுக்கு மட்டுமே.! பெறுவது எப்படி?
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனம் தனது லேண்ட்லைன் பயனர்களுக்கு 5ஜிபி அதிகவேக டேட்டாவை ஒரு வருட வேலிடிட்டியுடன் இலவசமாக வழங்குவதாக கூறியுள்ளது.

ஆனால் இந்த இலவச சலுகை குஜராத் வட்டத்திற்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் அனைத்துஇடங்களுக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தபோதிலும் பிராட்பேண்ட் இணைப்பைப் பயன்படுத்தாத அத்தகைய லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த 5ஜிபி இலவச டேட்டாவை பிஎஸ்என்எல் வைஃபை ஹாட்ஸ்பாட் சேவை மூலம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

- குறிப்பாக இந்த சேவையைப் பெற, இந்த சலுகை பயனர்கள் தங்கள் வைஃபை-யை இயக்கி நிறுவனத்தின் SSID சேவைகளைத்தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அடுத்து உங்களது ஸ்மார்ட்போனில் வைஃபை திறந்து இங்கு வரும் பிஎஸ்என்எல் Wi-Fi SSIDயுடன் இணைக்கவும்.
- பின்பு இது மூன்று விருப்பங்கள் உள்ள ஒரு பக்கத்தைத் திறக்கும் Public Wifi, BSNL users மற்றும் Landline கிடைக்கும்.
- மேலும் இந்த சலுகையைப் பயன்படுத்தும் பயனர்கள் Landline என்ற விருப்பத்தைத் தட்ட வேண்டும், பின்பு உங்களின் லேண்ட்லைன் நம்பரில் STD கோடைக் கொண்டு உள்ளிடவும் மற்றும் Get PIN யில் தட்டவும்.
- அடுத்து உங்கள் ரெஜிஸ்டர் மொபைல் நம்பரில் ஒரு ஒரு PIN வரும்,அதை போட்டு Login செய்ய வேண்டும். பின்னர் இலவசமாக கிடைக்கும் 5ஜிபி டேட்டாவை அனுபவிக்க முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 34,260 வைஃபை ஹாட்ஸ்பாட்களை வழங்குகிறது. இவை இந்தியாவின் 28,856 வெவ்வேறு இடங்களில் உள்ளன. 5ஜிபி டேட்டா முடிந்ததும் லேண்ட்லைன் பயனர்கள் ஹாட்ஸ்பாட் திட்டத்தையும் வாங்கலாம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் வட இந்தியாவில் 9855 பிஎஸ்என்எல் வைஃபை ஹாட்ஸ்பாட்கள் உள்ளன. இதுதவிர பிஎஸ்என்எல் ப்ரான்ச் பிராந்தியத்தில் 5403 வைஃபை ஹாட்ஸ்பாட்களையும் மேற்கு வட்டத்தில் 9492 வைஃபை ஹாட்ஸ்பாட்களையும் தெற்கு வட்டத்தில் 7482 வைஃபை ஹாட்ஸ்பாட்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் ஐந்து வைஃபை ஹாட்ஸ்பாட் திட்டங்களை வழங்குகிறது. பிஎஸ்என்எல் வைஃபை திட்டங்கள் ரூ.9, ரூ.19, ரூ.39, ரூ.59, மற்றும் ரூ.69 விலையிலானவை என்பது குறப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications