Home
News

BSNL அதிரடி: லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்டு பில்கள் மீது 50% தள்ளுபடி..

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் புதிய அதிரடி அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது, இந்த புதிய அறிவிப்பின் படி, பி.எஸ்.என்.எல் லேண்ட்லைன், பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்டு சந்தாதாரர்கள் அவர்களின் நிலுவைத் தொகை கட்டணத்திலிருந்து பாதியை மட்டும் செலுத்தினால் போதும் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்று BSNL தெரிவித்துள்ளது.

பில் பாக்கிகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு

பில் பாக்கிகளை சரி செய்ய ஒரு வாய்ப்பு

லேண்ட்லைன், பிராட்பேண்ட் அல்லது போஸ்ட்பெய்ட் மொபைல் பில் பாக்கிகளைக் கொண்ட டெல்கோவின் சந்தாதாரர்கள், அதன் கட்டணத்தில் பாதியை மட்டும் செலுத்தி, BSNL நிறுவனத்திடமிருந்து 'நிலுவைத் தொகை இல்லை' (No due) சான்றிதழை வாங்கிக்கொள்ளலாம். ஆனால், இதில் சில நிபந்தனைகள் உள்ளது. வெவ்வேறு வகை சந்தாதாரர்களுக்கு வேறு அளவு தள்ளுபடியை நிறுவனம் வழங்கியுள்ளது.

குறிப்பிட்ட குறுகிய கால சலுகை

குறிப்பிட்ட குறுகிய கால சலுகை

இந்த குறிப்பிட்ட சலுகை மார்ச் 31, 2021 வரை மட்டுமே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம். இந்த சலுகைக்காக பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் வெவ்வேறு வகைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர், மேலும் ஒவ்வொரு வகையிலும் அதனுடன் தொடர்புடைய தனித்துவமான தள்ளுபடி உள்ளது. அரசு நடத்தும் டெல்கோ தனது வாடிக்கையாளர்களை ஐந்து பிரிவுகளாகப் பிரித்துள்ளது.

இவர்களுக்கு 10% தள்ளுபடி மட்டுமே

இவர்களுக்கு 10% தள்ளுபடி மட்டுமே

முதல் வகை சந்தாதாரர்களுக்கு ஒரு வருடம் வரை நிலுவைத் தொகை மார்ச் 31, 2020 வரை நிலுவையில் உள்ளது என்றால், அவர்களின் பில்களில் எந்த சதவீத தள்ளுபடியும் வழங்கப்படாது. ஒரு வருடத்திற்கு மேல், ஆனால் இரண்டு வருடங்களுக்கும் குறைவான தேதியைக் கொண்ட நிலுவைத் தொகை பில்களைக் கொண்ட சந்தாதாரர்கள் தங்கள் பில்களின் மேல் 10% தள்ளுபடி பெறுவார்கள்.

இவர்களுக்கு 25% முதல் 30% வரை தள்ளுபடி

இவர்களுக்கு 25% முதல் 30% வரை தள்ளுபடி

2 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 3 வருடங்களுக்கும் குறைவான தேதியுடன் நிலுவை தொகை பில்கள் வைத்திருக்கும் சந்தாதாரர்கள் தங்களின் மொத்த நிலுவைத் தொகையில் 25% தள்ளுபடி பெறுகிறார்கள். அடுத்தபடியாக 3 ஆண்டுகளுக்கு மேல், ஆனால் 5 வருடங்களுக்கும் குறைவான கட்டணத்துடன் பில் வைத்திருக்கும் சந்தாதாரர்களுக்குத் தள்ளுபடி 30% ஆக உயர்கிறது.

இவர்களுக்கு தான் 50% தள்ளுபடி

இவர்களுக்கு தான் 50% தள்ளுபடி

இறுதியாக, 5 வருடங்களுக்கும் மேல் பில்கள் நிலுவையில் உள்ள சந்தாதாரர்களுக்கு அவர்களின் ஒட்டுமொத்த நிலுவைத் தொகையின் மேல் 50% தள்ளுபடி வழங்கப்படும். இது சாதாரண சந்தாதாரர்கள் அல்லது டெல்கோவின் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது. இந்த தள்ளுபடிகள் அரசு அல்லது அரசு நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முதற்கட்டமாக கொல்கத்தா பகுதியில்

முதற்கட்டமாக கொல்கத்தா பகுதியில்

இந்த குறிப்பிட்ட கால சலுகை இப்போது முதற்கட்டமாக கொல்கத்தா பகுதியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நல்ல முன்னேற்றம் இருந்தால் நாட்டின் அனைத்து இடங்களிலும் இந்த சலுகை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியாக இருந்தாலும் இந்த திட்டத்திற்கு நிச்சயம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Offering 50% Discount On Landline, Broadband, And Postpaid Subscribers to Clear Due Bills : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X