Home
News

மார்ச் 31 கடைசி.. 4ஜி கஸ்டமர்களுக்கு ப்ரீ டேட்டா.. பழைய சிம் மாத்தனும்.. பிஎஸ்என்எல் 4G சேவை.. என்னென்ன வருது!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) அதன் 4ஜி சேவையை ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கும் நேரத்தில் இலவச டேட்டா சலுகையை அறிவித்திருக்கிறது. இந்த சலுகையை பெற மார்ச் 31ஆம் தேதிக்குள் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் இதை செய்தால் வேண்டும்.

இந்தியாவில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியபோது, ஜியோ நிறுவனம் முதலில் ப்ரீ டேட்டாவை கொடுத்து முக்கால்வாசி கஸ்டமர்களை தன்பக்கம் சாய்த்துவிட்டது. இதே ப்ரீ டேட்டா திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் கையில் எடுத்திருக்கிறது. 4ஜி சிம் கஸ்டமர்களுக்கு ப்ரீ டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. அதோடு கடைசி தேதியையும் குறிப்பிட்டுள்ளது.

மார்ச் 31 கடைசி.. 4G கஸ்டமர்களுக்கு ப்ரீ டேட்டா.. பழைய சிம் மாத்தனும்!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனத்துக்கு மொத்தம் ரூ. 89,047 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியானது, 4ஜி சேவைகளை வழங்கும் பணிக்கு பயன்படுத்தப்பட்டது.

அதன்பின்பு, தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும், பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்கான பணிகள் கால்களில் சக்கரம் கட்டிவிட்டதை போல வேகமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் வரும் ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே செயல்படுத்தப்படும் என்று பிஎஸ்என்எல் தமிழ்நாடு தலைமைப் பொதுமேலாளர் தமிழ்மணி முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் அவர்களது 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை 4ஜி சிம் கார்டாக மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் பிஎஸ்என்எல் சேவை மையங்கள் மற்றும் பிஎஸ்என்எல் சிம் மேளாக்களில் இலவசமாக சிம் கார்டை மாற்றி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் முழுவீச்சில் 4ஜி சிம் கார்டு அப்கிரேட் (BSNL 4G SIM Upgrade) பணிகளில் ஈடுபடவில்லை. இவர்களை ஓட்டுமொத்தமாக தன்பக்கம் ஈர்க்க ப்ரீ டேட்டா சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் கையில் எடுத்துள்ளது. 4ஜி சிம் அப்கிரேட் செய்யும் கஸ்டமர்களுக்கு 4ஜிபி ப்ரீ டேட்டா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மார்ச் 31 கடைசி.. 4G கஸ்டமர்களுக்கு ப்ரீ டேட்டா.. பழைய சிம் மாத்தனும்!

இந்த சலுகையானது, மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே கொடுக்கப்படும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே, உடனடியாக 4ஜி சிம்மை அப்கிரேட் செய்தால், 4ஜிபி ப்ரீ டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். அதேபோல 4ஜி சிம் அப்கிரேடுக்கு எந்தவொரு கட்டணமும் கிடையாது.

இதனால், எந்தவொரு செலவும் இன்றி ப்ரீ டேட்டா சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த பிஎஸ்என்எல் 4ஜிபி ப்ரீ டேட்டா (BSNL 4GB Free Data) சலுகையானது, முதலில் கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல வரும் நாட்களில் மற்ற மாநிலங்களிலும் ப்ரீ டேட்டா அறிவிப்பை பிஎஸ்என்எல் நிறுவனம் கொடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, இமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் 3,500 பிஎஸ்என்எல் 4ஜி சைட்கள் (BSNL 4G Sites) நிறுவப்படுகின்றன. இவை வரும் காலங்களில் 1 லட்சம் சைட்களாக அதிகரிக்கப்பட இருக்கின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்து பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி டவர்களும் 4ஜி டவர்களாக மேம்படுத்தப்பட்டு விட்டன. இதுபோக 200-க்கும் மேற்பட்ட பகுதிகளில் புதிய 4ஜி சேவை டவர்களும் நிறுவப்பட்டு இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான டவர்கள் சோதனை ஓட்டத்தை முடித்து விட்டதாக டெலிகாம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே, ஏப்ரல் மாதத்தில் இருந்து தமிழ்நாட்டில் 4ஜி சேவைகள் கிடைக்கப்போவது உறுதியாகிவிட்டது. இதனால், இன்றளவும் 2ஜி, 3ஜி சிம் கார்டுகளை மாற்றாமல் வைத்திருக்கும் பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் உடனடியாக 4ஜிக்கு அப்கிரேட் செய்து கொள்வது நல்லது. ஏனென்றால், ப்ரீ டேட்டா உள்பட பல்வேறு சலுகைகளுக்காக மட்டுமல்லாமல், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த 4ஜி சேவையை பயன்படுத்தவதற்காக நேரம் இப்போது வந்துவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Offering 4GB Free Data For 2G 3G SIM Cards To 4G SIM Upgrade Customers till March 31 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X