தினசரி 2ஜிபி டேட்டா-வரம்பற்ற குரல் அழைப்பு: 365நாட்கள் வேலிடிட்டி.!பிஎஸ்என்எல்-ன் பலே சலுகை.!

|

அதன் ஆன்லைன் கட்டண தளத்திற்காக எஸ்பிஐ உடன் கைகோர்த்த பிறகு, பிஎஸ்என்எல் நிறுவனம் தற்பொழுது தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக PV 365 என்ற புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த PV-365 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் வரம்பற்ற அழைப்பு, டேட்டா மற்றும் மெசேஜ் நன்மைகளைப் பயனருக்கு வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கூடுதல் நன்மை கிடைக்கும் திட்டங்களின் விபரங்களைப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் PV-365 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் PV-365 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த PV-365 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.365 என்ற விலையில் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் என்று 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இருப்பினும், டேட்டா வேகம் 80Kbps ஆகக் குறைக்கப்பட்டிருக்கிறது, மேலும் குரல் அழைப்பிற்குத் தினசரி FUP வரம்பும் உள்ளது.

இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகை

இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும் சலுகை

இந்த சலுகை இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும், அதே நேரத்தில் திட்டம் 365 நாட்கள் இருக்கும். இதுமட்டுமின்றி, இத்துடன் ஆன்லைன் தளம் மற்றும் CtopUp வழியாக ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு போன் ரிங் பேக் டோன் என்ற (PRBT) சேவை கிடைக்கும். உங்கள் போன் வழி மெசேஜ் அல்லது USSDமுறைப்படியும் இந்த நன்மையை நீங்கள் பெறலாம்.

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ வெடித்தது! காரணத்தை கேட்டு அதிர்ந்து போன உரிமையாளர்!சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ வெடித்தது! காரணத்தை கேட்டு அதிர்ந்து போன உரிமையாளர்!

பிஎஸ்என்எல் ரூ.247 திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.247 திட்டம்

பிஎஸ்என்எல் 247 ரூபாய் மதிப்பிலான திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு சலுகையோடு கூடுதல் டேட்டா வசதியும் கிடைக்கிறது. இத்திட்டத்தின் கீழ் தினசரி 3 ஜிபி டேட்டா தரவும், நாள் ஒன்று 250 நிமிட FUP வரம்பற்ற குரல் அழைப்புகளை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் என்ற சலுகையோடு 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது.

வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முயற்சி

வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க முயற்சி

தங்களது வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. யாரும் போர்டல் மாறிவிடாமல் தக்க வைத்துக் கொள்ள இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கலாம் எனத் தொலைத் தொடர்பு வட்டார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 பாரத் இன்ஸ்டா பே

பாரத் இன்ஸ்டா பே

பிஎஸ்என்எல் நிறுவனம் எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து பாரத் இன்ஸ்டா பே என்ற யுபிஐ அடிப்படையிலான டிஜிட்டல் பேமண்ட் தளத்தை அறிமுகம் செய்துள்ளது.ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் யுபிஐ அடிப்படையிலான கட்டண தளமான Bharat InstaPayவை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஎஸ்என்எல் அதிகாரிகள் கருத்து

பிஎஸ்என்எல் அதிகாரிகள் கருத்து

இதுகுறித்து பிஎஸ்என்எல் அதிகாரிகள் கூறுகையில், இந்த நிறுவனம் உருவாக்கிய புதிய கட்டண வசதி அதன் கூட்டாளர்களுக்கு, குறிப்பாக ப்ரீபெய்ட் விற்பனையாளர்களுக்கு அதன் விற்பனை சேவையை உடனடியாக வாங்க உதவும்.

எஸ்பிஐ மூலம் இயக்கப்படும்

எஸ்பிஐ மூலம் இயக்கப்படும்

இந்த டிஜிட்டல் கட்டண தளமானது எஸ்பிஐ மூலம் இயக்கப்படும் பிஎஸ்என்எல்லின் ஒரு புதிய முயற்சியாகும். இது பிஎஸ்என்எல்லின் அனைத்து வகையான சேனல் கூட்டாளர்களுக்கும் நிறுவனத்தின் அனைத்து கட்டண பரிவர்த்தனைகளையும் டிஜிட்டல் முறையில் 24/7 என்ற அடிப்படையில் மேற்கொள்ள உதவுகிறது என பிஎஸ்என்எல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு சேவைகளை வாங்குவதற்கு காத்திருக்க வேண்டாம்

தொலைத் தொடர்பு சேவைகளை வாங்குவதற்கு காத்திருக்க வேண்டாம்

இந்த சேவை அறிமுகத்திற்கு முன்பு பிஎஸ்என்எல் கூட்டு விற்பனையாளர்கள் நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து தொலைத் தொடர்பு சேவைகளை வாங்குவதற்கு கட்டணம் செலுத்துவதற்கும் காத்திருக்க வேண்டிய சூழநிலை நிலவியது. குறிப்பாக விடுமுறை நாட்கள் எனப்படும் வார இறுதி நாட்களில் இது கூடுதல் தாமதமானது குறிப்பிடத்தக்கது.

24/7 என்ற நேர அடிப்படையில் Bharat InstaPay

24/7 என்ற நேர அடிப்படையில் Bharat InstaPay

இந்த Bharat InstaPay அறிமுகத்தின் மூலம் 24/7 என்ற நேர அடிப்படையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய பாரத் இன்ஸ்டாபே அதன் கூட்டாளர்களுக்கு உதவும் என்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இனி விடுமுறை நாட்களிலும் திட்டங்களை வாங்கலாம்.

பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அறிக்கை

பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அறிக்கை

இதுகுறித்து பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது கூட்டாளர்களுக்கான பிஎஸ்என்எல்லின் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கூட்டாளர்களின் வணிகத்தை விரைவான வேகத்தில் வளர்க்கவும் உதவும் என தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல் சேனல் பார்ட்னர்களுக்கு டிஜிட்டல் ஐடி

பிஎஸ்என்எல் சேனல் பார்ட்னர்களுக்கு டிஜிட்டல் ஐடி

பிஎஸ்என்எல்-ன் ஐடி தளமானது எஸ்பிஐ வங்கி தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் டிஜிட்டல் பேமண்ட்களை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு பிஎஸ்என்எல் சேனல் பார்ட்னர்களுக்கும் டிஜிட்டல் ஐடி வழங்கப்படும்.

எந்த ஊழியர்களின் தலையீடும் இல்லாமல் இயங்கலாம்

இது பிஎஸ்என்எல் கூட்டாளர்களுக்கு பெரிதளவு பயணளிக்கும். Bharat InstaPay போர்டல், அப்படியானால், அனைத்து பரிவர்த்தனைகளும் 24/7 அடிப்படையில் எந்த ஊழியர்களின் தலையீடும் இல்லாமல் மேற்கொள்ளப்படும் திட்டமாகும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
BSNL Offering 2GB Data Per Day With Rs. 365 Prepaid Plan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X