இதுதான் தள்ளுபடி: 425 நாட்களுக்கும் தினசரி 3 ஜிபி டேட்டா: பிஎஸ்என்எல் அதிரடி அறிவிப்பு

|

இந்திய அரசுக்குச் சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், அதன் 4ஜி சேவை இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் துவங்குவதற்காகப் பலகட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் எப்போது இந்த 4ஜி சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்புடன் பயனர்கள் காத்திருக்கின்றனர்.

4ஜி சேவை சோதனை

4ஜி சேவை சோதனை

சென்னை உட்படக் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற பல்வேறு நகரங்களில் தனது 4ஜி சேவைக்கான சோதனையைச் பிஎஸ்என்எல் நிறுவனம் செய்து வருகிறது.

ரூ.1,999 திட்டம் அறிமுகம்

ரூ.1,999 திட்டம் அறிமுகம்

பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த திட்டம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், அரசு நடத்தும் தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான பிஎஸ்என்எல் ரூ.1,999 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் இன்று (டிசம்பர் 25) முதல் ஜனவரி 31, 2020 வரை கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஹா கெத்து., 1 நிமிடத்திற்கு 95 பேர் இந்த உணவை தான் ஆர்டர் செய்கிறார்கள்: ஸ்விகி அறிக்கைஆஹா கெத்து., 1 நிமிடத்திற்கு 95 பேர் இந்த உணவை தான் ஆர்டர் செய்கிறார்கள்: ஸ்விகி அறிக்கை

425 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா

425 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா

ஒரு நாளைக்கு 3 ஜிபி கூடுதல் டேட்டா, ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ்களை 425 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் பிஎஸ்என்எல் டிவி சந்தா ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது. செல்போனில் பேசுவதற்கான நேரங்களாக ரூ. 450 மற்றும் ரூ. 250 திட்டம் ஆகியவைகளும் வழங்கப்படுகிறது. அதோடு, ரூ. 500, ரூ. 450, ரூ. 250, ரூ. 275 ஆகிய விலையில் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பல்வேறு திட்டங்கள்

பல்வேறு திட்டங்கள்

ரூ. 365 திட்டம் 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இதில் வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி, ரோமிங் அழைப்புகள் உள்ளன. மேலும், பயனர்கள் தனிப்பயனாக்கப்பட்ட ரிங் பேக் டோன் (பிஆர்பிடி) அணுகலைப் பெறலாம். அதேசமயம், ரூ. 97 திட்டம், இது ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டம் 18 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

4 ஜி சேவையை கேரளாவில் அறிமுகம் செய்ய முடிவு

4 ஜி சேவையை கேரளாவில் அறிமுகம் செய்ய முடிவு

இந்த நிலையில் பிஎஸ்என்எல் 4 ஜி சேவைகளை கேரளாவில் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு அந்த பகுதியில் 3700 டவர்களை அமைக்கும். தனது 4 ஜி சேவைகளை 2020 ஆம் ஆண்டில் இந்தியா முழுவதும் தொடங்கவுள்ளது. எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் இடையேயான இணைப்புக்கு ஒப்புதல் அளித்து ஆபரேட்டரை புதுப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

யாருக்கு பாதிப்பு?- இன்று முதல் ஒன்று சேரும் 6 கிரகங்கள்: விளைவு என்ன?யாருக்கு பாதிப்பு?- இன்று முதல் ஒன்று சேரும் 6 கிரகங்கள்: விளைவு என்ன?

தனியார் நிறுவனத்துடன் போட்டிப்போட முடிவு

தனியார் நிறுவனத்துடன் போட்டிப்போட முடிவு

இந்த திட்டத்தின் மூலம் தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா போன்ற அனைத்து நிறுவனங்களுடனும் போட்டியிட ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
BSNL Offering 1,275GB Data With Its Rs.1,999 Plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X