Home
News

மார்க்கெட் இனி BSNL கையில்.. வெறும் ரூ.400 க்கு 150 நாள் வேலிடிட்டி.. டெய்லி 2GB டேட்டா, வாய்ஸ் கால், 100 SMS!

ரூ.400 க்கு வெறும் 28 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டியை கொடுக்கும் தனியார் டெலிகாம் நிறுவனங்களுக்கு மத்தியில், அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது.. அதே ரூ.400 க்கு 150 நாட்கள் வேலிடிட்டியை வழங்கும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை கையில் வைத்துக்கொண்டு, ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. அதென்ன திட்டம்? இதோ விவரங்கள்:

4ஜி நெட்வொர்க்கை (4G Network) தீவிரமாக விரிவுபடுத்தும், மறுகையில் 5ஜி சேவைகளின் (5G Services) உடனடி தொடக்கத்திற்கான உத்திகளை வகுத்து வந்தாலும் கூட தன்வசம் இருக்கும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டங்களின் மீது பிஎஸ்என்எல் நிறுவனம் ஒருபோதும் கைவைப்பதில்லை. அப்படியான ஒரு திட்டம் தான் ரூ.397 ப்ரீபெய்ட் பிளான்!

மார்க்கெட் இனி BSNL கையில்.. வெறும் ரூ.400 க்கு 150 நாள் வேலிடிட்டி!

இது பிஎஸ்என்எல் சேவையின் கீழ் கிடைக்கும் மிகவும் பிரபலமான எக்ஸ்டென்டட் வேலிடிட்டி (Extended validity) பிளானாகும். அதாவது இந்த ப்ரீபெய்ட் திட்டம் 150 நாட்கள் என்கிற மொத்த வேலிடிட்டியை கொண்டிருக்கும். ஆனால் முதல் 30 நாட்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை வழங்கும். அதவாய்டு பிஎஸ்என்எல்-ஐ ஒரு செகண்டரி சிம் கார்டு ஆக பயன்படுத்தும் பயனர்களுக்கு அந்த நம்பரை ஆக்டிவ்வாக வைத்துக்கொள்ள ரூ.397 ஒரு பெஸ்ட் ஆப்ஷன் ஆக இருக்கும்.

முதல் 30 நாட்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பொறுத்தவரை, ரூ.397-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் நாடு முழுவதும் உள்ள எந்தவொரு மொபைல் நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற வாய்ஸ் கால்களை செய்யலாம. கூடுதலாக முதல் 30 நாட்களுக்கு டெய்லி 2ஜிபி அளவிலான டேட்டாவையும் பெறுவார்கள்.

டேட்டா லிமிட்டை மீறிய பிறகு, அதாவது தினமும் ஒதுக்கப்பட்ட 2ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 40 கேபிஎஸ் ஆக குறைக்கப்படும். மேலும், சேவையின் முதல் மாதத்திற்கு பயனர்கள் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் பெறுவார்கள்.

பிஎஸ்என்எல் குறித்த மற்ற முக்கியமான செய்திகளை பொறுத்தவரை, 2ப்024 தீபாவளி பண்டிகை கால சலுகையாக, பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் (BSNL SelfCare App) வழியாக ரூ.499 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 3ஜிபி போனஸ் டேட்டா கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதோடு நவம்பர் 7 ஆம் தேதி வரை கிடைக்கும் இன்னொரு தீபாவளி தள்ளுபடி சலுகையும் உள்ளது. அது ரூ.1999 ப்ரீபெய்ட் திட்டத்தின் மீதான ரூ.100 விலை குறைப்பாகும். தற்போது இது ரூ.100 தள்ளுபடியுடன் ரூ.1899-க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஒட்டுமொத்தமாக (நீண்ட காலத்திற்கு பிறகு) பிஎஸ்என்எல் சரியான பாதையில் சென்றுகொண்டு இருக்கிறது.

தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்களை செய்துவருவதும் இங்கே குறிப்பிடத்தாக்கது. சமீபத்தில் புதிய பிஎஸ்என்எல் லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. கூடுதலாக, ஏழு புதிய பிஎஸ்என்எல் சேவைகளும் அறிமுகம் செய்யப்பட்டது. எல்லாவற்றை விட முக்கியமாக வணிக ரீதியிலான 4ஜி சேவைகளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த பிஎஸ்என்எல் தயாராக உள்ளது.

மேலும் அடுத்த 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்யவும் பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதற்காக பிஎஸ்என்எல் அதன் மொபைல் நெட்வொர்க் உள்கட்டமைப்பை வலுப்படுத்த மொத்தம் 100,000 புதிய மொபைல் டவர்களை இன்ஸ்டால் செய்ய திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவாக (ஜியோ, ஏர்டெல், வோடாபோனை போல விலை உயர்வை அறிவிக்காததாலும்) இந்நிறுவனம் 2.5 மில்லியன் புதிய பயனர்களை சேர்த்துள்ளது.

இந்த இடத்தில் இன்னும் சில புள்ளி விவரங்களையும் பகிர விரும்புகிறோம். முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ 4 மில்லியன் பயனர்களை இழந்துள்ளதும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 2.4 மில்லியன் பயனர்களை இழந்துள்ளதும் மற்றும் வோடபோன் ஐடியாவானது 1.9 மில்லியன் பயனர்களை இழந்துள்ளதும். அதாவது தனியார் டெலிகாம் நிறுவனங்களில் இருந்தபயனர்கள் பிஎஸ்என்எல்-க்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்!

Best Mobiles in India

English summary
BSNL Offer Total of 150 Days Validity With Rs 397 Plan 2GB Daily Data Voice Call SMS For 1st 30 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X