Home
News

BSNL அதிரடி! வெள்ளம் காரணமான தூத்துக்குடி கஸ்டமர்களுக்கு FREE டாக்டைம் அறிவிப்பு!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் டிசம்பர் 29 ஆம் தேதி வரையிலாக இலவச டாக்டைம் (Free Talktime) சலுகையை அறிவித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டை வரவேற்பதற்கான பிஎஸ்என்எல்-ன் நியூ இயர் ஆஃபர் (2024 New Year Offer) என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

இது குறிப்பிட்ட பிஎஸ்என்எல் கஸ்டர்மார்களுக்கு மட்டுமே அணுக கிடைக்கும் ஒரு பிரத்யேக சலுகையாகும். பிஎஸ்என்எல்-ன் இந்த ஃப்ரீ டால்க்டைம் ஆஃபர் இது யாருக்கு எல்லாம் கிடைக்கும்? எவ்வளவு மதிப்பிலான இலவச டால்க்டைம் கிடைக்கும்? இந்த திடீர் சலுகைக்கு பின்னால் உள்ள காரணம் என்ன? இதோ விவரங்கள்:

BSNL அதிரடி! வெள்ளம் காரணமான தூத்துக்குடி கஸ்டமர்களுக்கு FREE டாக்டைம்

எவ்வளவு மதிப்பிலான இலவச டால்க்டைம் கிடைக்கும்? அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல், அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.200 மதிப்புள்ள இலவச டாக்டைமை வழங்குகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, இது அனைத்து பிஎஸ்என்எல் பயனர்களுக்குமான ஒரு சலுகை அல்ல. இதுவொரு பிரத்யேக சலுகையாகும்.

யாருக்கு எல்லாம் கிடைக்கும்? தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களால் மட்டுமே ரூ.200 மதிப்புள்ள இலவச டாக்டைம் சலுகையை பெற முடியும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு (Prepaid Customers) டிசம்பர் 25 முதல் டிசம்பர் 29 வரை இந்த சலுகை அணுக கிடைக்கும்.

BSNL அதிரடி! வெள்ளம் காரணமான தூத்துக்குடி கஸ்டமர்களுக்கு FREE டாக்டைம்

ஏன் தூத்துக்குடி? வெள்ளம் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே இந்த சலுகைக்கான முக்கிய பின்னணியாகும்.. இப்பகுதியில் பிஎஸ்என்எல் நிறுவனமானது இன்ட்ரா-சர்க்கிள் ரோமிங்கை (Intra-circle roaming - ICR) வழங்குகிறது, இதன் வழியாக மற்ற டெலிகாம் ஆப்ரேட்டர்களின் வாடிக்கையாளர்கள் வெளி உலகத்துடன் இணைந்திருக்க பிஎஸ்என்எல்-ன் நெட்வொர்க்கை பயன்படுத்தலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் ஏதேனும் நியூ இயர் ஆஃபரை அறிவித்துள்ளதா? தற்போது வரையிலாக பிஎஸ்என்எல் நிறுவனம் எந்த விதமான புத்தாண்டு சலுகைகளையும் அறிவிக்கவில்லை. வரும் நாட்களில் அறிவிக்கப்படலாம். இப்போதைக்கு ஜியோ நிறுவனம் மட்டுமே நியூ இயர் ஆஃபரை அறிவித்துள்ள ஒரே டெலிகாம் நிறுவனமாகும்.

BSNL அதிரடி! வெள்ளம் காரணமான தூத்துக்குடி கஸ்டமர்களுக்கு FREE டாக்டைம்

அதுவும் பெரிய அளவிலான ஆஃபர் எதையும் அறிவிக்கவில்லை; புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்யவில்லை. மாறாக ஏற்கனவே உள்ள ஒரு திட்டத்தின் மீது எக்ஸ்ட்ரா வேலிடிட்டியை மட்டுமே அறிவித்துள்ளது. அந்த திட்டத்தின் மதிப்பு ரூ.2999 ஆகும். தற்போது இது 24 நாட்கள் என்கிற கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது.

ஜியோ ரூ.2999 ரீசார்ஜின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டத்தின் வழக்கமான வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். நியூ இயர் ஆஃபரின் கீழ் 24 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக ரூ.2999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (தற்போது மொத்தம் 389 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது.

BSNL அதிரடி! வெள்ளம் காரணமான தூத்துக்குடி கஸ்டமர்களுக்கு FREE டாக்டைம்

மேலும் இது தினமும் 2.5 ஜிபி அளவிலான ஹை-ஸ்பீட் டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்ட டேட்டா லிமிட் தீர்ந்த பிறகும் கூட இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். ஆனால் அந்த டேட்டாவின் இன்டர்நெட் ஸ்பீட் 64 கேபிபிஎஸ் ஆக இருக்கும்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால்கலை வழங்கும் இந்த திட்டம், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்கும். மேலும் பெரும்பாலான ஜியோ திட்டங்களின்கீழ் கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையானது இந்த திட்டத்திலும் கிடைக்கும். கடைசியாக ரூ.2,999-ன் கீழ் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ க்ளவுட் போன்ற ஜியோ ஆப்ஸ் தொகுப்பிற்கான இலவச சந்தாவும் கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திடமும் ரூ.2999 ரீசார்ஜ் உள்ளது! இது 395 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் 3ஜிபி டெய்லி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது. அதாவது ஜியோவை விட 'பெட்டர்' ஆன நன்மைகளை வழங்குகிறது. ஆனால் ஜியோவோ பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் இல்லாத 4ஜி மற்றும் 5ஜி ஸ்பீடை வழங்குகிறது.

Source: TelecomTalk

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL Offer Rs 200 Free Talktime For Thoothukudi District Customers Until Dec 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X