ஏழைக்கு ஏத்த 4G சேவை.. ரூ.199-க்கு 28 நாட்கள்.. 2GB டெய்லி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2.2 கோடி கஸ்டமர்கள்!
நாடு முழுவதும் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை (BSNL 4G Service) பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்கிவைத்தார். இப்போது, மொத்தமாக 2.2 கோடி கஸ்டமர்கள் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். மொத்தமாக 97,500 4ஜி டவர்களில் கிட்டத்தட்ட 93 சதவீதத்துக்கும் மேலான டவர்களில் இப்போது 4ஜி சேவை கிடைக்க தொடங்கிவிட்டது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களைவிட மலிவான விலைக்கு 4ஜி திட்டங்களை பிஎஸ்என்எல் வைத்திருக்கிறது.
இந்த பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் மற்ற நிறுவனங்களை போல முக்கியமான நகரங்களில் மட்டுமே கொடுக்கப்படவில்லை. நெட்வொர்க் கிடைக்காத கிராமப்புறங்கள், தொலைத்தூர மலை கிராமங்கள் போன்றவற்றில் கிடைக்கிறது. அதிலும் மலிவான விலைக்கு திட்டங்களை கொடுக்கிறது. மற்ற நிறுவனங்களில் குறைந்தபட்சம் 126 மில்லியன் 4ஜி கஸ்டமர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், பிஎஸ்என்எல்லில் வெறும் 22 மில்லியன் 4ஜி கஸ்டமர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இது குறைவாக தோன்றலாம். ஆனால், இந்த நிறுவனம் கொடுக்கும் மலிவான விலை காரணமாக வரும் நாட்களில் 4ஜி கஸ்டமர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கிறது. அதேபோல செகண்டரி சிம் கார்டாக பிஎஸ்என்எல்லை பயன்படுத்தினாலும், சிம் ஆக்டிவுக்கு பெரிதாக செலவு ஏற்படாது.
ஜியோ நிறுவனத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியில் தினசரிக்கு 4ஜி டேட்டா கொடுக்கும் மலிவு விலை திட்டமாக ரூ.299 ரீசார்ஜ் இருக்கிறது. இதில் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. அதேபோல ஏர்டெல் நிறுவனத்திலும் ரூ.299 விலைக்கு தினசரி டேட்டாவுடன் ஆரம்ப விலை 4ஜி திட்டம் கிடைக்கிறது.
ஆனால், தினசரிக்கு 1 ஜிபி டேட்டா மட்டுமே இதில் கிடைக்கிறது. அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் சலுகையை கொடுக்கிறது. மேலும், வோடபோன் ஐடியாவிலும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி டேட்டா கொடுக்கும் திட்டமாக ரூ.299 விலை கொண்ட திட்டம் கிடைக்கிறது. இதில் மட்டும் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது.
அதாவது, 1 ஜிபி டேட்டா தினசரிக்கு 4ஜி வேகத்தில் கிடைக்கும். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்களும் கிடைக்கும். இதில் 5ஜி டேட்டா கிடைக்க காரணம், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 5ஜி சேவையை தொடங்கிய பல ஆண்டுகள் பிறகு வோடபோன் ஐடியா 5ஜி சேவையை தொடங்கியது.
இதனாலேயே ஆரம்ப சலுகையாக இதை கொடுத்து இருக்கிறது. ஆனால், இதுவும் மற்ற தனியார் நிறுவனங்களை போலவே சலுகையை கொடுக்கிறது. ஆனால், பிஎஸ்என்எஸ் அப்படி கிடையாது. இதைவிட ரூ.100 விலை குறைவாக 4ஜி திட்டத்தை கொடுக்கிறது. அதிலும் டேட்டாவை அதிகமாக கொடுக்கிறது. அதாவது ரூ.199 விலைக்கே 4ஜி திட்டம் கிடைக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.199 திட்ட விவரங்கள் (BSNL Rs.199 Plan Details): மற்ற நிறுவனங்களின் திட்டங்களில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மலிவான 4ஜி திட்டத்தில் அதிகபட்சம் 1.5 ஜிபி டேட்டா மட்டுமே தினசரிக்கு கிடைக்கிறது. இருப்பினும், விலை ரூ.299ஆக இருக்கிறது. ஆனால், இந்த பிஎஸ்என்எல் ரூ.199 திட்டத்தில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு கிடைக்கிறது.
ஆகவே, மொத்தமாக 56 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. இதுபோக அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகையும் இதில் கிடைக்கிறது. இது மற்ற நிறுவனங்களைவிட பாதிக்கு மேலும் மலிவான விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications