பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டம் என்னென்ன?
ஆர்.கே. மிட்டல் தெரிவித்தது என்னவென்றால் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் பல்வேறு சேவைகளை வழங்கிவருவதாக கூறினார்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் முன்னர் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்திருந்தது. தற்போது அதைவிட சிறந்த திட்டங்களை ஜூலை 1ஆம் தேதி அறிவித்தது. இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் பயன்படும் என பிஎஸ்என்எல் நிறுவனம் தகவல் தெரிவித்தது.
தற்போது அறிவித்துள்ள இந்த திட்டம் பொறுத்தமட்டில் 6மடங்கு டேட்டாவை பிஎஸ்எனஎல் வழங்கும் என செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் பிஎஸ்என்எல் குறிப்பிட்ட இன்டர்நெட் வேகம் மட்டுமே கிடைக்கிறது.

பிஎஸ்என்எல்:
பிஎஸ்என்எல் நிறுவனம், தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் போட்டியிடும் முயற்ச்சியாக இப்போது 6மடங்கு அதிக டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்த திட்டம் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்குப் பயன்படும் விதமாக உள்ளது.

பிஎஸ்என்எல் ரிசார்ஜ்:
பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்டு ரிசார்ஜ் பொறுத்தமட்டில் ரூ.99-க்கு ரிசார்ஜ் செய்தால் 250எம்பி டேட்டா அதிகமாக கிடைக்கும்எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.225-க்கு ரிசார்ஜ்செய்தால் 1ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ரூ.325-க்கு ரிசார்ஜ் செய்தால் 2ஜிபி டேட்டா வரை கூடுதலாக கிடைக்கும்.

ரூ.525-ரிசார்ஜ்:
போஸ்ட்பெய்டு ரூ.525-ரிசார்ஜ் பொறுத்தமட்டில் 3ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும். மேலும் ரூ.725-ரிசார்ஜ்செய்தால் 5ஜிபி டேட்டா கூடுதலாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே. மிட்டல்:
பிஎஸ்என்எல் இயக்குனர்ஆர்.கே. மிட்டல் தெரிவித்தது என்னவென்றால், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் பல்வேறு சேவைகளை வழங்கிவருவதாக கூறினார்.


Click it and Unblock the Notifications