பிஎஸ்என்எல்: நாள் ஒன்றிற்கு 4ஜிபி டேட்டா; விலையை கேட்டு அம்பானிக்கே வேர்த்து போச்சு.!
அதன் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான ரூ.149/- என்கிற விளம்பர திட்டத்தை, பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) நிறுவனமானது, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவை சிறந்த முறையில், தனது சொந்த வழியில் எதிர்த்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 2018 ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான ரூ.149/- என்கிற விளம்பர திட்டத்தை, பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் நன்மைகள் என்ன.? இது எப்படி ஜியோவுடன் போட்டியிடுகிறது என்பதை பற்றி விரிவாக காணலாம்.

என்ன விலை.?
நிகழப்போகும் புதிய பிபா உலகக் கோப்பை ஸ்பெஷல் டேட்டா பேக் ஆன ரூ.149/- ஆனது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான தரவு நன்மையை வழங்கும். இந்த திட்டமானது 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.

எங்கெல்லாம் அணுக கிடைக்கும்.?
வழக்கம் போல பிஎஸ்என்எல்-ன் சேவைகள் இல்லாத மும்பை மற்றும் தில்லி தவிர, நாட்டிலுள்ள இதர அனைத்து தொலைத் தொடர்பு வட்டங்களிலும் நாளை தொடங்கி 31 நாட்களுக்கு இந்த திட்டம் செல்லுபடியாகும். இந்த திட்டத்துடன் எந்த விதமான குரல் அழைப்பு அல்லது எஸ்எம்எஸ் நன்மைகளும் கிடைக்காது. அதாவது இதுவொரு டேட்டா ஒன்லி பேக் ஆகும். பெயரில் கூட டேட்டா எஸ்டிவி என்று கூறியே அறிமுகப்படுத்தப்படுகிறது.

இது பிஎஸ்என்எல்-க்கு புதிது அல்ல.!
ஒரு பெரிய விளையாட்டு நிகழ்வின் போது புதிய மற்றும் ஸ்பெஷல் கட்டணத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது ஒன்றும் பிஎஸ்என்எல்-க்கு புதிது அல்ல, வழக்கமா ஒன்று தான். கடந்த ஏப்ரல் மாதத்தில், பிஎஸ்என்எல் ரூ.248/- பேக் அறிமுகமானது. அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை மொத்தம் 51 நாட்களுக்கு வழங்கியது. இப்போது ரூ.149/- ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாளை முதல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.!
துரதிருஷ்டவசமாக, பிஎஸ்என்எல்-ன் இந்த புதிய திட்டமானது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்க மட்டுமே கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை ரீசார்ஜ் செய்ய ஆர்வம் கொண்ட நிறுவனத்தின் ப்ரீபெய்ட் பயனர்கள் பிஎஸ்என்எல் போர்ட்டில் அல்லது பிற ரீசார்ஜ் போர்ட்டல் மூலம் நாளை முதல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

ஜியோதான் இதற்கும் காரணம்.!
ஜியோ அதன் அனைத்து ரீசார்ஜ் திட்டங்களின் மீதும் கூடுதலாக 1.5ஜிபி டேட்டா அறிவித்ததை அடுத்து, பிஎஸ்என்எல் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது. நேற்று ரிலையன்ஸ் ஜியோ அதன் ப்ரீபெய்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை அறிமுகம் செய்தது. அந்த வாய்ப்பானது, (திட்டத்திற்கு ஏற்றபடி) நாள் ஒன்றிற்கு கிடைக்கும் டேட்டா நன்மையுடன் சேர்த்து கூடுதலாக 1.5ஜிபி டேட்டாவை தினசரி அடிப்படையில் குறிப்பிட்ட காலம் வழங்கும். இவ்வழியாக ஜியோவின் 1ஜிபி அளவிலான 4ஜி தரவின் மதிப்பானது ரூ.1.77 /-ஆக குறைந்துள்ளது.

1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது..!
ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு திட்டமாகும். அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய நீடிக்கும்.

எந்தெந்த திட்டங்கள்.?
இந்த வாய்ப்பானது ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- தொடங்கி ரூ.799/- திட்டம் வரை அணுக கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு ரூ.149/ திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்தது. தற்போது ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது.

1.5 ஜிபிக்கு பதிலாக முறையே 3 ஜிபி.!
இருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே - இந்த நன்மைகளை அடக்கிய - ரீசார்ஜ் செய்ய நீடிக்கும். வேறென்ன திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது என்று கேட்டால் நிறுவனத்தின், 1.5ஜிபி டேட்டா திட்டங்களான ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449/- ஆகியவைகள் தற்போது ரீசார்ஜ் செய்ய 3ஜிபி வழங்கும்.

2 ஜிபிக்கு பதிலாக முறையே 3.5 ஜிபி.!
மறுகையில், ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு தரும் ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்கள் ஆனது தற்போது ரீசாயிஜ் செய்ய ஒரு நாளைக்கு 3.5 ஜிபி தரவும் வழங்கும். இதேபோல நாள் ஒன்றிக்கு 3ஜிபி வழங்கும் ரூ.299/- ஆனது (28 நாட்களுக்கு செல்லுபடியாகும்) தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 4.5 ஜிபி தரவை வழங்கும்.

4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி.!
அதிகபட்ச டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களான ரூ.509 மற்றும் ரூ.799 திட்டம் இப்போது 4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி-ஐ வழங்கும். மேற்கூறப்பட்ட அனைத்து திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை குறிப்பு செய்யுங்கள்.

ரூ.100/- கேஷ்பேக்.?!
இந்த கூடுதல் டேட்டா நன்மைகள் தவிர்த்து, ஜியோ அதன் ரூ.300/-க்கும் மேற்பட்ட ரீசார்ஜ்ஜின் மீது ரூ.100/- கேஷ்பேக் வாய்ப்பையும், மற்றும் ரூ.300/-க்கு குறைவான விலை கொண்ட ரீசார்ஜ்களில் 20% தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பெற மைஜியோ பயன்பாட்டின் மூலம் மட்டுமே ரீசார்ஜ்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், பண பரிமாற்றம் ஆனது போன்பே (PhonePe) வழியாகத்தான் நடக்க வேண்டும் என்பதையும் குறிப்பு செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications