Home
News

அள்ளிக்கொடுக்கும் BSNL.. மலிவு விலை.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எந்த திட்டம்? 4G சேவை எப்போது?

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். பிஎஸ்என்எல் நிறுவனம் கம்மி விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி கொண்ட இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் அதிக நன்மைகளை வழங்குகிறது. இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளைப் பார்க்கலாம்.

அள்ளிக்கொடுக்கும் BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 299 plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் . அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறியுள்ளது.

குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் மற்றும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் ஒடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே கம்மி விலையில் அதிக டேட்டா விரும்பும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அள்ளிக்கொடுக்கும் BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 347 plan) ஆனது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 54 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 108ஜிபி டேட்டா நன்மை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை இதில் உள்ளது. இத்துடன் கூடுதல் நன்மைகளாக M/s OnMobile Global Ltd வழங்கும் Progressive Web APP (PWA) இல் Challenge Arena மொபைல் கேமிங் சேவை, ஜிங் மியூசிக், பிஎஸ்என்எல் ட்யூன்ஸ், வாவ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

மேலும் சமீபத்தில் வெளியான தகவலின்படி, 2024 ஆகஸ்ட் மாதம் பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 4ஜி சேவைகள் முற்றிலும் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய சேவை பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தொடங்கப்படும் என்றும், பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 8 லட்சம் நுகர்வோரை பிஎஸ்என்எல் நிறுவனம் சேர்த்துள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை நாடு முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அள்ளிக்கொடுக்கும் BSNL.. தினமும் 3ஜிபி டேட்டா.. எந்த திட்டம்?

ஆனாலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை ஆனது 4ஜி இயக்கப்பட்ட சிம்களில் மட்டும் வேலை செய்யும் என்று கூறப்படுகிறது. எனவே பயனர்கள் தங்களது பழைய சிம் கார்டை அகற்றிவிட்டு புதிய சிம் கார்டை பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக 4ஜி சேவையை வழங்குவதற்கு பிஎஸ்என்எல் நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) மற்றும் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி நிறுவனமான C-DOT ஆகியவற்றை உள்ளடக்கிய உள்நாட்டுக் கூட்டமைப்புடன் இணைந்துள்ளது. மேலும் 4ஜி அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களில் இந்நிறுவனம் 5ஜி சேவையைக் கூட அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL offer 3GB data per day on low cost prepaid plan: 4G service to launch in August 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X