Home
News

நம்மள முடிச்சு விட்டீங்க.. வெறும் ரூ.150-க்கு 180 நாட்கள்.. BSNL இறக்கிய மாத செலவு திட்டம்.. வாய்ஸ், டேட்டா!

அவ்ளோதான் நம்மள முடிச்சு விட்டீங்க போங்கனு சொல்லும்படியான ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) பிஎஸ்என்எல் (BSNL) களமிறக்கி இருக்கிறது. மாத செலவு ரூ.150 போதும், உங்களுக்கு 180 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 90 ஜிபி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது.

இவ்வளவு மலிவான விலைக்கு திட்டம் கிடைப்பதால், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் விழி பிதுங்குகின்றன. 180 நாட்கள் அல்லது 160 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 2 திட்டங்களில் ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களையும் பிஎஸ்என்எல் தட்டித்தூக்கி இருக்கிறது.

நம்மள முடிச்சு விட்டீங்க.. ரூ.150-க்கு 180 நாட்கள்..  BSNL மாத செலவு!

இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ரூ.897ஆகவும், ரூ.997ஆகவும் இருக்கிறது. ஆகவே, முதலாவது திட்டம் மாதத்துக்கு வெறும் ரூ.150 செலவிலும், இரண்டாவது திட்டம் மாதத்துக்கு ரூ.199 செலவிலும் கிடைக்கிறது. இந்த விலைக்கு டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் போன்ற முக்கிய சலுகைகளை கொடுக்கிறது.

பிஎஸ்என்எல் 180 நாட்கள் வேலிடிட்டி ரூ 897 திட்டம் (BSNL 180 Days Validity Rs 897 Plan): இந்த பிஎஸ்என்எல் திட்டத்தில் 6 மாதங்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம். அதுவும் ரூ.1000 கூட செலவில்லாமல், அதைவிட மலிவான விலைக்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த 6 மாதங்களுக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

மற்ற டெலிகாம் நிறுவனங்களை போலவே அனைத்து நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வருகிறது. ஆகவே, 180 நாட்கள் முழுவதும் சிம் கார்டு ஆக்டிவாக இருக்கும். இது மற்ற டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அடிமட்ட விலையாகும்.

இந்த வாய்ஸ் கால்கள் சலுகைகள் போக எஸ்எம்எஸ் மற்றும் டேட்டா சலுகைகள் இருக்கிறது. இதில் எஸ்எம்எஸ் சலுகை தினசரிக்கும், டேட்டா சலுகை லம்ப்-சம்மாகவும் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. ஆகவே, 100 எஸ்எம்எஸ்களை தினசரிக்கு அனுப்பி கொள்ளலாம். ஆனால், டேட்டாவானது 90 ஜிபிக்கு மொத்தமாக கொடுக்கப்படுகிறது.

இந்த டேட்டா 180 நாட்கள் வேலிடிட்டிக்கு பொருந்தும். 1 ஜிபி, 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி என்று எப்போது டேட்டா தேவையோ அப்போது முழுவதும் பயன்படுத்தலாம். அதேபோல வேலிடிட்டிக்கு முன்பாக 90 ஜிபி டேட்டா முடிந்துவிட்டால், 40 கேபிபிஎஸ் ஸ்பீடில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் 160 நாட்கள் வேலிடிட்டி ரூ 997 திட்டம் (BSNL 160 Days Validity Rs 997 Plan): இந்த திட்டம் ரூ.100 கூடுதல் விலைக்கு கிடைப்பதால், அதற்கு ஏற்ப டேட்டா மற்றும் இதர சலுகைகள் அதிகமாக கிடைக்கின்றன. ஆகவே, 5 மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை அனைத்து நெட்வொர்க்குக்கும் செய்து கொள்ளலாம்.

இதில் லம்ப்-சம் டேட்டா கிடையாது. தினசரி டேட்டா சலுகை மட்டுமே கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டா (தினமும்) மற்றும் 40 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (2 ஜிபிக்கு பிறகு) பெற்று கொள்ளலாம். ஆனால், எஸ்எம்எஸ் சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே தினசரிக்கு 100 என்ற கணக்கில் கிடைக்கிறது.

இந்த டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்களுக்கு அடுத்தபடியாக பிஎஸ்என்எல் டியூன்ஸ் சலுகை மற்றும் ஜிங்க் மியூசிக் சலுகை கொடுக்கப்படுகிறது. மேலும், லைஸ்டன் பாட்காஸ்ட், கேமியம், சேலன்ஜர் அரினா கேம்ஸ், கேம்ஆன் அஸ்ட்ரோடெல் மற்றும் ஹார்டி கேம்ஸ் போன்ற சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவைக்கள் கிடைத்த பிறகும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மலிவாகவே இருக்க வாய்ப்புள்ளது. இதனாலேயே அந்த சேவைக்கு பிஎஸ்என்எல் கஸ்டமர்கள் மட்டுமல்லாமல் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டமர்களும் வெயிட்டிங் மோடில் இருந்து வருகின்றனர். அடுத்த சில மாதங்களில் பல்வேறு மாநிலங்களில் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
BSNL Offer 180 Days Validity Unlimited Voice Calls 90GB Data At Rs 897 Prepaid Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X