முழுசா 300ஜிபி.. பிஎஸ்என்எல்-ன் ஸ்பெஷல் பிளான் நாளையோடு ஓவர்.. முந்துங்கள்.!
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சிறப்பு மற்றும் விளம்பர திடமான ரூ.786/பி- ஆனது, நாளை அதாவது ஜூன் 26 அன்று காலாவதியாகிறது.
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-ன் சிறப்பு மற்றும் விளம்பர திடமான ரூ.786/பி- ஆனது, நாளை அதாவது ஜூன் 26 அன்று காலாவதியாகிறது. ஆக இதை ரீசார்ஜ் செய்துகொள்ள விரும்பும் பயனர்கள் இன்றே முந்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வழக்கம் போல இந்த ஆண்டும் ரமலான் பண்டிகையையொட்டி அதே விலையிலான (ரூ.786) புதிய திட்டம் ஒன்றை பிஎஸ்என்எல் அறிவித்தது. இந்த ரமலான் சிறப்பு திட்டமானது ஜூன் 12, 2018 தொடங்கி அணுக கிடைக்கும் மற்றும் இது ஒரு பான்-இந்தியா அடிப்படையில் செயல்படும் திட்டமாகும். அதாவது இந்த திட்டம் அறிமுகமான தேதியிலிருந்து 15 நாட்களுக்கு (ஜூன் 26 வரை) மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று அர்த்தம்.

300 ஜிபி அளவிலான டேட்டா.!
மேலும், இந்த முறை, பிஎஸ்என்எல் கடந்த ஆண்டுகளில் வெளியானதை விட சிறந்த நன்மைகளை வழங்குகிறது. நன்மைகளை பொறுத்தவரை, இந்த திட்டம் ரூ.786/- ஆனது நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான டேட்டா என மொத்த செல்லுபடியாகும் காலத்திற்கு 300 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

வரம்பற்ற குரல்.!?
அதாவது இதன் செல்லுபடி காலம் 150 நாட்கள் ஆகும். கடந்த ஆண்டை விட நன்மைகளில் மேம்பாடுகள் இருந்தாலும் கூட, 150 நாட்கள் என்கிற செல்லுபடி காலத்தில் எந்த மாற்றமும் இல்லை. ரூ.786/-ன் அழைப்பு நன்மைகளை பொறுத்தவரை, நாடு முழுவதும் எந்த நெட்வொர்க்குக் உடனாகவும் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ் மொத்தம்.!?
கூடுதல் சிறப்பு என்னவெனில் இந்த திட்டத்தின் கீழ் டெல்லி மற்றும் மும்பை வட்டாரங்களும் வரும். பொதுவாக தில்லி மற்றும் மும்பை வட்டாரங்களுக்கு அதன் கட்டணத் திட்டங்களுடன் இலவச குரல் அழைப்புகளை பிஎஸ்என்எல் வழங்காது. ஆனால், இந்த திட்டத்தில் அப்படியில்லை. குரல் அழைப்பு நன்மையுடன் சேர்த்து இந்த ப்ரீபெய்ட் கட்டண கட்டணத் திட்டமானது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளை அளிக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 15,000 எஸ்எம்எஸ்கள் அணுக கிடைக்கும்.

செல்லுபடி.!?
இறுதியாக, டேட்டா நன்மைகளை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். முன்னர் குறிப்பிட்டப்படி இது 150 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதாவது இந்த பிஎஸ்என்எல் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனருக்கும் மொத்தம் 300 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ஜூன் 12, 2018 முதல் ஜூன் 26, 2018 வரையிலாக மொத்தம் 15 நாட்களுக்குள் மட்டுமே தான் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடியாக போட்டியிடுகிறது.!
இந்தியாவில் உள்ள எந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும், பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆப் மூலம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பிஎஸ்என்எல் திட்டமானது ஜியோவின் ரூ.1,999/- திட்டத்துடன் நேரடியாக போட்டியிடுகிறது. ஜியோவின் ரூ.1,999/- ஆனது 125 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை 180 நாட்களுக்கு வழங்குகிறது. எப்படி பார்த்தாலும் ஜியோவை விட மலிவான விலை மற்றும் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான டேட்டா.!
ரமலானுக்கு மட்டுமின்றி பிஎஸ்என்எல் கால்பந்து உலக கோப்பை போட்டிக்கான சிறப்பு திட்டமான பிஎஸ்என்எல் பிபா ரூ.149/ திட்டத்தையும் அறிவித்துள்ளது. இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 4 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் பல தொலைத்தொடர்பு செய்திகள் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவுடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications








