Home
News

பிஎஸ்என்எல் அதிரடி : நாள் ஒன்றிற்கு 3ஜிபி, மேலும் 3 காம்போ திட்டங்கள்.!

ஜியோ ப்ரைம் சேவைகள் ரூ.309/- என்ற ஒரு விலை நிர்ணயத்தை பெற்றதுமே, இதர போட்டியாளர்கள் அந்த விலை நிர்ணயத்தை சுற்றி இன்னும் அதிக நன்மைக்களை வழங்கும் முனைப்பில் உள்ளன

By Muthuraj

பிஎஸ்என்எல் இப்போது அறிமுகம் செய்துள்ள புதிய திட்டங்கள் சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் கட்டண யுத்தத்தை வேறு ஒரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதில் சந்தேகமே வேண்டாம். பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த திட்டங்கள் இணைய பயனாளர்களால் வெறுமனே மறுக்க முடியாத, தவிர்க்க முடியாத திட்டங்களாய் உள்ளது.

ஜியோ நிறுவனம், என்ன விலையை நிர்ணயிக்கும் என்ற குழப்பம் தீர்ந்து இப்போது ரிலையன்ஸ் ஜியோ ப்ரைம் சேவைகள் ரூ.309/- என்ற ஒரு விலை நிர்ணயத்தை பெற்றதுமே, இதர போட்டியாளர்கள் அந்த விலை நிர்ணயத்தை சுற்றி இன்னும் அதிக நன்மைக்களை வழங்கும் முனைப்பில் உள்ளன. அந்த முனைப்பில் மிகப்பெரிய போட்டியை பிஎஸ்என்எல் சாதாரணமாக தூண்டியுள்ளது.

ரூ.339/-

ரூ.339/-

மறுசீரமைக்கப்பட்ட பிஎஸ்என்எல் திட்டமான ரூ.339/-ன் கீழ் இப்போது நாள் ஒன்றிற்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை பயனர்களால் பெறமுடியும்.

கட்டண திருத்தம்

கட்டண திருத்தம்

ஒரு மாத காலம் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் பிற நலன்களைக் கொண்டது. முன்பு 28 நாட்களுக்கு 2ஜிபி அளவிலான தரவு உடன் எந்த நெட்வொர்க் உடன் வரம்பற்ற அழைப்புகளை வழங்கிய ரூ.339/- திட்டம் இப்போது, ஒரு தினசரி 3ஜிபி தரவு எல்லை பயன்பாடு தொப்பி கொண்ட, எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற அழைப்புகளையும் வழங்கும்.

மூன்று புதிய காம்போ

மூன்று புதிய காம்போ

இந்த திட்டத்தோடு நில்லாமல், உலகின் சிறந்த டேட்டா மற்றும் குரல் அழைப்பு நன்மைகளை வழங்கும் நோக்கத்தில் பிஎஸ்என்எல் மேலும் மூன்று புதிய காம்போ திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஹார்ட்கோர் இணைய பயனர்

ஹார்ட்கோர் இணைய பயனர்

புதிதாய் அறிமுகமான 3 காம்போ திட்டங்களான தில் கோல் கே போல் (எஸ்ஸ்டிவி349), டிரிபிள் ஏஸ் (எஸ்டிவி333), டெஹ்லா பெர் (எஸ்டிவி395) ஹார்ட்கோர் இணைய பயனர்களுக்கானதாகும்.

தில் கோல் கே போல்

தில் கோல் கே போல்

ஜியோவின் தண் தணா தண் சலுகையை குறிவைத்து வெளியாகியுள்ள தில் கோல் கே போல் திட்டத்தின் கீழ் பயனர்கள் இப்போது நாள் ஒன்றிற்கு 2 ஜிபி அளவிலான தரவை பெற முடியும், உடன் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளையும் நிகழ்த்த முடியும்.

டிரிபிள் ஏஸ்

டிரிபிள் ஏஸ்

இரண்டாவது காம்போ பேக் ஆன டிரிபிள் ஏஸ் ரூ.333/- திட்டத்தின் கீழ் 90 நாட்களுக்கு, நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை பெற முடியும். இந்த திட்டம் எந்த டெலிகாம் ஆபரேட்டருடனும் ஒப்பிடாலும் சிறப்பான சலுகையாக, மிகச் சிறந்த தரவுத் திட்டமாக உள்ளது.

டெஹ்லா பெர்

டெஹ்லா பெர்

டெஹ்லா பெர் ரூ.395/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி அளவிலான டேட்டா உடன் 3000 நிமிடங்களுக்கான பிஎஸ்என்எல் டூ பிஎஸ்என்எல் இலவச நிமிடங்களை வழங்குகிறது மேலும் சுவாரஸ்யமாக மாதம் ஒன்றுக்கு 180 நிமிடங்கள் ஆஃப்-இன்-இன்டர்நெட் குரல் அழைப்புகளையும் ஒரு மாதத்திற்கு வழங்கிறது.

செல்லுபடி

செல்லுபடி

அதாவது 71 நாட்கள் அல்லது 10 வாரங்கள் செல்லுபடியாகும் இந்த திட்டத்தின் கீழ் பயனர்கள் நிமிடத்திற்கு 20 பைசா என்ற ஆஃப்-நெட் குரல் அழைப்பு கட்டணத்தை செலுத்துவார்கள் என்று அர்த்தம்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோவிற்க்கு பதிலடி கொடுத்தது ஏர்டெல்: 70ஜிபி டேட்டா 399ருபாய்.!

Best Mobiles in India

English summary
BSNL Now Offers 3 GB/Day With Rs 339 Monthly Plan, Launches 3 New Sizzling Combo Plans. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X