கூடுதல் டேட்டா அறிவிப்பு; அடித்து நொறுக்கிய பிஎஸ்என்எல்; ஆடிப்போன ஜியோ.!
சில நாட்களுக்கு முன்பு, ஜியோ அதன் டபுள் டமாக்கா வாய்ப்பின் கேள் கூடுதலாக 1.5ஜிபி அளவிலான டேட்டாவை அறிமுகப்படுத்தியது,
அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) ஆனது, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஒரு புதிய கூடுதல் தரவு வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்பின் கீழ் பிஎஸ்என்எல் திட்டங்களுக்கு கிடைக்கும் நன்மைகளுடன் சேர்த்து இனி கூடுதலான 2 ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும்.
சில நாட்களுக்கு முன்பு, ஜியோ அதன் டபுள் டமாக்கா வாய்ப்பின் கேள் கூடுதலாக 1.5ஜிபி அளவிலான டேட்டாவை அறிமுகப்படுத்தியது, அதன்படி, தற்போது இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளுக்கு மேல், நாள் ஒன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.

இனி இந்த திட்டங்களின் தினசரி நன்மைகளுடன் சேர்த்து.!
அதேபோன்றதொரு நன்மையை பிஎஸ்என்எல் அதன் ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ 999/- ஆகிய ப்ரீபெய்ட் வரம்பற்ற காம்போ திட்டங்களுக்கு அறிவித்துள்ளது. அதாவது இனி இந்த திட்டங்களின் தினசரி நன்மைகளுடன் சேர்த்து 2 ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா கிடைக்கும்.

கூடுதல் 2 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.!
மேலும் பிஎஸ்என்எல்-ன் 3ஜி டேட்டா நன்மையை வழங்கும் திட்டங்களான ரூ.187, ரூ.333, ரூ.349, ரூ.444- மற்றும் ரூ.448/- ஆகியவைகளும் கூட கூடுதல் 2 ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். ஜியோவின் கூடுதல் டேட்டா வாய்ப்பானது மூன்று வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கும் நிலைப்பாட்டில், பிஎஸ்என்எல்-ன் இந்த வாய்ப்பானது மொத்தம் 60 நாட்களுக்கு அணுக கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பு.

5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே.!
இந்த வாய்ப்பானது ஜூன் 18, 2018 முதல் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் உறுதிப்படுத்தியுள்ளது. கூடுதல் டேட்டாவை தவிர குறிப்பிட்டுள்ள திட்டங்களின் இதர நன்மைகளில் எந்த மாற்றமும் கிடையாது. ரூ.186, ரூ.429, ரூ.485, ரூ.666/- மற்றும் ரூ.999/- ஆகிய 5 ப்ரீபெய்டு வரம்பற்ற காம்போ திட்டங்களுமே தினசரி அல்லது வாராந்திர வரம்பில்லாத வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்குகின்றன.

தினசரி வரம்பிற்கு பின்னர் 40கேபிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ்.!
குறிப்பாக ரூ.189/- மற்றும் ரூ.999/- என்கிற பிஎஸ்என்எல் திட்டங்கள் ஆனது ஜியோ மற்றும் ஏர்டெல் உடன் கடுமையாக போட்டியிடும் வண்ணம் தினசரி வரம்பிற்கு பின்னர் 40கேபிபிஎஸ் என்கிற வேகத்தின் கீழ் "உண்மையான" வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. நன்மைகளை பொறுத்தமட்டில், ரூ.186/- ப்ரீபெய்ட் கட்டணத் திட்டம் இப்போது 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது ரீசார்ஜ் தேதி முதல் இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

3.5 ஜிபி அளவிலான டேட்டா.!
பிஎஸ்என்எல்-ன் ரூ.429/- திட்டமானது, ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்ட ஆதாயத்தை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 81 நாட்களுக்கு செல்லுபடியாகும். நிறுவனத்தின் பிரபல ரூ.666/- திட்டமானது 120 நாட்களுக்கு செல்லுபடியாகும் மற்றும் ஒரு நாளைக்கு 3.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இறுதியாக, ரூ.999 திட்டமானது 180 நாட்களுக்கும், நாள் ஒன்றிற்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.!
இந்த வாய்ப்பானது 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் விளம்பர திட்டம் என்பதை ஒரு குறிப்பு செய்யுங்கள். அதாவது இன்று (ஜூன் 18, 2018) முதல் அடுத்த 60 நாட்கள் கழித்து, இந்த வாய்ப்புகள் அணுக கிடைக்காது. மேலும் பல ஜியோ, ஏர்டெல், ஐடியா செல்லுலார், வோடாபோன் இந்தியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் நிறுவனங்களின் சமீபத்திய அறிவிப்புகளை பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெலிகாம் பிரிவின் கீழ் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications