Home
News

Jio, Airtel SIM கதையை முடிச்சு விட்ட BSNL.. ரூ.51 க்கு 28 நாள், டெய்லி 2GB, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்!

இந்திய அரசுக்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, ஒரு சிறப்பு விளம்பர சலுகையை அறிவித்துள்ளது. இதன் கீழ், வாடிக்கையாளர்கள் ரூ.51 க்கு பிஎஸ்என்எல் சிம் இணைப்பை பெறலாம். இந்தச் சலுகை, நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களிடம் கிடைக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.51 விளம்பர சிம் சலுகையின் விரிவான விவரங்கள்: பிஎஸ்என்எல் கார்ப்பரேட் ஆனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ஒரு பதிவின்படி, புதிய இணைப்பை தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ப்ரீபெய்ட் பேக்கேஜ் வழங்கப்படும். இந்த திட்டத்துடன் ஒரு இலவச சிம் மற்றும் 28 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டியும் கிடைக்கும்.

Jio, Airtel SIM கதையை முடிச்சு விட்ட BSNL.. ரூ.51 க்கு 28 நாள்!

பயனர்களை தனது நெட்வொர்க்கில் சேர ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக இந்த சலுகையை தொலைத்தொடர்பு நிறுவனம் முன்வைத்துள்ளது.பிஎஸ்என்எல் இந்த விளம்பரப் பிரச்சாரத்திற்கு, "நெட்வொர்க்கை ஆன் செய்யுங்கள் - ஒரு எளிய தொடக்கம், நெட்வொர்க் உங்களுடையதாகிறது" என்கிற வாசகத்தை வழங்கியுள்ளது.

மேலும் (விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளபடி) இந்த சிறப்பு சலுகை மே 22 ஆம் தேதி முதல் ஜூன் 30, 2026 வரை செல்லுபடியாகும். ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், இந்த விளம்பர காலத்தில் தங்களுக்கு அருகிலுள்ள பிஎஸ்என்எல் சேவை மையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையத்திற்கு சென்று இந்த சலுகையை பெற்றுக்கொள்ளலாம்.

"நெட்வொர்க்கை இயக்க வெறும் ரூ. 51 மட்டுமே தேவை. அன்லிமிடெட் கால்கள், ஒரு நாளைக்கு 2ஜிபி அதிவேக டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் கூடிய உங்கள் இலவச பிஎஸ்என்எல் சிம்மை பெறுங்கள் - இது ஒரு சிறந்த தொடக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்தச் சலுகை ஜூன் 30, 2026 வரை செல்லுபடியாகும்" என்று பிஎஸ்என்எல் கார்ப்பரேட் ஆனார் எக்ஸ் தள பதிவில் பகிர்ந்துள்ளது.

பிஎஸ்என்எல்-ன் மற்றொரு சமூக ஊடக பதிவானது,பிஎஸ்என்எல் தான் வழங்கும் சேவையின் தரத்தை சிறப்பித்து காட்டியதுடன், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அனுபவத்தில் எந்தவிதமான தனித்துவமும் இல்லை என்பதையும் வலியுறுத்தியுள்ளது. குறிப்பாக, இந்த தொலைத்தொடர்பு நிறுவனம் தனது அனைத்து திட்டங்களிலும் இயல்பான பிரீமியம் அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.

"தரம் என்பது ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கானதாக இருக்கக்கூடாது. அதனால் தான் ஒவ்வொரு பிஎஸ்என்எல் திட்டமும், அதிக விலையின்றி ஒரு பிரீமியம் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நம்பகமானது. சீரானது. ஒவ்வொரு இந்தியருக்காகவும் உருவாக்கப்பட்டது" என்று பிஎஸ்என்எல் கார்ப்பரேட் ஆனது ஒரு எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளது.

வோடபோன் ஐடியாவின் (Vi) சேவை தரம் குறித்த சமீபத்திய பிராண்டிங் முயற்சிகளை தொடர்ந்து, பிஎஸ்என்எல் நிறுவனமும் தரம் மற்றும் பிரீமியம் பயனர் அனுபவத்தை முக்கிய வேறுபடுத்தும் காரணிகளாக முன்னிறுத்த தொடங்கியுள்ளது போல் தெரிகிறது. ஏர்டெல் தனது 5ஜி ஸ்டாண்ட்அலோன் (எஸ்ஏ) நெட்வொர்க்கில் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கான தனது முன்னுரிமை சேவையில் கவனம் செலுத்தி வரும் வேளையில் பிஎஸ்என்எல் இப்படி கூறியுள்ளது

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பான் இந்தியா அடிப்படையிலான 4ஜி நெட்வொர்க்கை இன்னும் விரிவுபடுத்தும் பணியில் தான் உள்ளது என்பதும், தற்போது மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவைகளை வழங்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL New Special promotional offer Free SIM Card Daily 2GB Data Voice SMS 28 Days Validity For Rs 51
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X