Home
News

பிஎஸ்என்எல் ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழு நன்மைகள் என்னவென்று தெரியுமா?

பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது புதிய ரூ.108 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ரூ.108 திட்டம் சென்னை மற்றும் தமிழ்நாடு பகுதிகளில் மட்டுமே கிடைக்குமென்று பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. இந்த புதிய திட்டத்தின் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.

புதிய ரூ.108 திட்டம்

புதிய ரூ.108 திட்டம்

இந்த புதிய ரூ.108 திட்டத்தின் கீழ், பயனர்கள் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்பு சேவை வழங்கப்படுகிறது. நாள் ஒன்றிற்கு 500 மெசேஜ் மற்றும் 1 ஜிபி டேட்டா என அனைத்து சேவைகளும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.

புதிய திட்டம் யாருக்கெல்லாம் செல்லுபடி

புதிய திட்டம் யாருக்கெல்லாம் செல்லுபடி

இருப்பினும், இந்த புதிய திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டின் மற்ற இடங்களில் அறிமுகம் செய்யவில்லை என்பதும், டெல்லி மற்றும் மும்பையில் போன்ற நகரங்களில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள திட்டத்திலிருந்து பிற திட்டங்களுக்கு மாற்ற விரும்பும் பயனர்களுக்கும் இந்த திட்டம் செல்லுபடியாகும்.

180 நாள் வேலிடிட்டி பெறுவதற்கு சாத்தியம்

180 நாள் வேலிடிட்டி பெறுவதற்கு சாத்தியம்

புதிய ரூ.108 திட்டத்தின் சிறப்பு உண்மையில் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் மட்டுமே என்று குறிப்பிட்டிருந்தாலும் பயனர்கள் இத்திட்டத்தை 180 நாட்கள் வேலிடிட்டிக்கு செல்லுபடி செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது. பிஎஸ்என்எல் பயனர்கள் மற்றொரு நீட்டிப்பு திட்டம் அல்லது வரம்பற்ற காம்போ திட்டத்திற்கு மாறினால் 180 நாள் வேலிடிட்டியை பெறமுடியும் என்று டெலிகாம்டால்க் வலைத்தளம் தெரிவித்துள்ளது.

வரம்பு அமைப்புகள் உள்ளதா?

வரம்பு அமைப்புகள் உள்ளதா?

குறிப்பாக இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 1 ஜிபி டேட்டா முடிந்தபின் பயனர்களுக்கு 80 கே.பி.பி.எஸ் வேகத்தில் இணையம் வழங்கப்படும். அதேபோல் நாடு முழுவதும் அனைத்து நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற குரல் அழைப்பை வழங்கியுள்ளது. இருப்பினும் ஒரு நாள் வரம்பு என்று 250 நிமிடங்கள் மட்டுமே தினமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
BSNL New Rs.108 Prepaid Scheme And It's Benifits : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X