பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் புதிய சலுகை: 1095ஜிபி டேட்டா: என்ன திட்டம்? வேலிடிட்டி?

|

அன்மையில் ஜியோ, ஏர்டெல் ஐடியா போன்ற நிறுவனங்கள் தங்களின் விலை உயர்ந்த திட்டங்களை கொண்டுவந்தது, ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தனது விலைகளை உயர்த்தவில்லை, தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனம் பட்ஜெட் விலையில் பல்வேறு புதிய திட்டங்கள் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது.

 ரூ.108 முதல் தொடங்கி ரூ.1,999 வரை

ரூ.108 முதல் தொடங்கி ரூ.1,999 வரை

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் இந்நிறுவனம் அனைத்து வாடிக்கையாளர்களையும் கருத்தில் கொண்டு அருமையான திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த அருமையான திட்டங்கள் ரூ.108 முதல் தொடங்கி ரூ.1,999 வரை செல்கின்றன. அதில் இப்போது ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் ஒரு திட்டத்தை பற்றி தான் நாம் பார்க்கப்போகிறோம்.

விலை ரூ.1,699

விலை ரூ.1,699

அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் 3ஜிபி டேட்டா திட்டத்தின் விலை ரூ.1,699-ஆகும். இது வருகிற டிசம்பர் 31-ம்வரை இயங்கும் நிறுவனத்தின் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபரின் ஒரு பகுதியாகும். குறிப்பாக இந்த திட்டத்தின் தற்போதையசெல்லுபடியாகும் காலம் ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 365நாட்கள் ஆகும். முன்னதாக (நவம்பர் 30) இது கூடுதலாக
60நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கியது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆண்டு திட்டமான ரூ.1,699ஆனது மொத்தம் 1095ஜிபி அளவிலான டேட்டா நன்மைகளை வழங்குகிறது.

2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்2019-ஐ கலக்கிய நிகழ்வுகள்: கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியல்கள்

 250 நிமிடங்கள்

முன்பு தெரிவித்தபடி பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1,699 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டமானது 1095ஜிபி அளவிலான மொத்த டேட்டா நன்மையுடன் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் ரூ.365நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் 250 நிமிடங்கள் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் வழங்கப்படுகிறது.இது தவிர இந்த அருமையான திட்டத்தில் இரண்டு மாதங்களுக்கு பெர்சனலைஸ்டு ரிங்பேக் டோன் நன்மையையும் வழங்குகிறது.

3ஜிபி அளவிலான டேட்டா

3ஜிபி அளவிலான டேட்டா

டேட்டா பயன்பாட்டை பற்றி விரவிவாக பேசுகையில், 1,699 ஆனது ஒரு நாளைக்கு 3ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது, முன்னதாக பிஎஸ்என்எல் இந்த திட்டத்தில் வெறும் 2ஜிபி அளவிலான தினசரி டேட்டாவை மட்டும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் எக்ஸ்ட்ரா டேட்டா ஆபரின் ஒரு பகுதியாக தற்போது இந்த திட்டம் 1ஜிபி கூடுதல் டேட்டா சலுகையுன் வருகிறது.

டிசம்பர் 31-ம்

மொத்தம் 1095ஜிபி டேட்டாவை இந்த ரூ1,699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தற்போது பிரபலமடைந்து வருகிறது. ஆனால் இதுவருகிற டிசம்பர் 31-ம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,999 திட்டமும் இருக்கிறது

ரூ.1,999 திட்டமும் இருக்கிறது

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.1,699 ப்ரீபெய்ட் திட்டத்தை தவிர ரூ.1,999 திட்டமும் இருக்கிறது. இது சென்னை மற்றும்தமிழ்நாடு தொலைத் தொடர்பு வட்டங்களில் மட்டுமே அணுக கிடைக்கும் ஒரு திட்டமாக இருக்கிறது.

100எஸ்எம்எஸ்கள்

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த ரூ.1,999 திட்டம் ஆனது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா, ஒவ்வொரு நாளும் 250நிமிட குரல்அழைப்புகள் மற்றும் 365நாட்கள் வேலிடிட்டி அம்சத்துடன் வருகிறது. குறிப்பாக தினசரி 100எஸ்எம்எஸ்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL New Prepaid Plan Offers 1095 GB Data and 365 days Validity : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X