600 நாட்கள் அன்லிமிட்டெட் கால்., BSNL அட்டகாச திட்டம் அறிமுகம்!

|

பிஎஸ்என்எல் ரூ.2399 என்ற விலையில் கிடைக்கும் திட்டமானது 600 நாட்கள் வேலிடிட்டி ஆகும். இந்த திட்டத்தின் காலம் முழுவதும் அன்லிமிடெட் குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

ரூ.2399 என்ற விலையில் அட்டகாச திட்டம்

ரூ.2399 என்ற விலையில் அட்டகாச திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.2399 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த திட்டம் 600 நாட்கள் வேலிடிட்டி ஆகும். இந்த திட்டத்தின் காலம் முழுவதும் அன்லிமிடெட் குரல் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

தினசரி 100 எஸ்எம்எஸ்

தினசரி 100 எஸ்எம்எஸ்

இந்த திட்டத்தின் காலம் முழுவதும் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது. அதேபோல் 60 நாட்களுக்கு பிஎஸ்என்எல் டியூன்ஸ்களும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் டேட்டா எதுவும் வழங்கப்படவில்லை. டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள் தனியாக வேறு திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

தினசரி 250 நிமிடங்கள் குரல் அழைப்பு

தினசரி 250 நிமிடங்கள் குரல் அழைப்பு

பிஎஸ்என்எல் இந்த திட்டமானது அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது என்றாலும் எஃப்யூபி வரம்பின்படி தினசரி 250 நிமிடங்கள் என குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் இணையம் வழங்கப்படவில்லை என்பது சிறு குறையாகவே காணப்படுகிறது.

ஜியோ ரூ.2399 திட்டம்

ஜியோ ரூ.2399 திட்டம்

ஜியோ வழங்கும் ரூ.2399 திட்டம் குறித்து பார்க்கையில், இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி ஆகும். தினசரி 2 ஜிபி இணையம் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டம் வேலிடிட்டி காலம் முழுவதும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. ஜியோ ஆப் போன்ற செயலிக்கான சந்தா சலுகையும் கிடைக்கிறது.

அமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் Jiomart: 200 பகுதிகளில் சேவை தொடக்கம்!அமேசான், பிளிப்கார்ட்டை ஓரம்கட்டும் Jiomart: 200 பகுதிகளில் சேவை தொடக்கம்!

பாரதி ஏர்டெல் ரூ.2398 திட்டம்

பாரதி ஏர்டெல் ரூ.2398 திட்டம்

பாரதி ஏர்டெல் வழங்கும் ரூ.2398 திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டமானது 365 நாட்கள் செல்லுபடியாகும். இதில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் காலம் முழுவதும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வழங்கப்படுகிறது. அதேபோல் ஜீ5 ப்ரீமியம் சந்தா சலுகையும் இலவசமாக வழங்கப்படுகிறது. இலவச காலர்டுயூன், பாஸ்டேக் ரூ.150 கேஷ்பேக், இலவச ஹலோ டியூன் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.

தினசரி 2 ஜிபி டேட்டா

தினசரி 2 ஜிபி டேட்டா

அதேபோல் பாரதி ஏர்டெல் ரூ.2498 திட்டமானது தினசரி 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஒரு வருடம் முழுவதும் இந்த திட்டம் செல்லுபடியாகும்.

வோடபோன் ரூ.2399 திட்டம்

வோடபோன் ரூ.2399 திட்டம்

வோடபோன் ரூ.2395 9 திட்டமானது தினசரி 1.5 ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டமானது அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வழங்குகிறது. அதேபோல் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்குகிறது. மேலும் ரூ.499 மதிப்புள்ள வோடபோன் ப்ளே சலுகை, ரூ.999 மதிப்புள்ள ஜீ5 ப்ரீமியம் சலுகை என அனைத்தும் வழங்குகிறது. இந்த திட்டம் ரீசார்ஜ் செய்த நாளில் இருந்து 365 நாட்கள் செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
BSNL new prepaid plan for Rs 2,399 offering unlimited calling facility for 600 days

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X