Home
News

சிங்கிள் டீ-யை விட குறைந்த விலையில் BSNL பிளான்.. 300 நாள் சேவை.. தினமும் ரூ. 3 இருந்தா போதும்.. எந்த திட்டம்?

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) இப்போது இந்தியாவில் நம்ப முடியாத விலையில் 300 நாட்களுக்கு செல்லுபடியாகும் புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (BSNL Prepaid Plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை இந்திய மக்கள் அதிகமாக விரும்ப துவங்கியுள்ளனர். குறிப்பாக, பிஎஸ்என்எல் (BSNL) பயனர்கள் இந்த திட்டத்தின் செலவு மிகவும் குறைவாக இருக்கிறது, இது நாங்கள் ஒரு நாளில் குடிக்கும் சிங்கிள் டீ-யின் விலையை விட மிகவும் குறைவாக இருக்கிறது என்று புகழ்ந்து பேசி வருகின்றனர்.

அப்படி இந்த திட்டத்தில் என்ன இருக்கிறது? இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் எத்தகையது? இதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? உண்மையாகவே ஒரு நாளுக்கு ரூ. 3 என்ற மலிவான கட்டணத்தை விட குறைந்த கட்டணத்தை தான் இந்த திட்டம் வசூலிக்கிறதா? இந்த புதிய 300 நாள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டம் யாருக்கெல்லாம் சிறந்தது என்பது போன்ற முக்கிய தகவலை பார்க்கலாம்.

சிங்கிள் டீ-யை விட குறைந்த விலையில் BSNL பிளான்.. 300 நாள் சேவை..

நாம் இங்கு புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் புதிய பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டமானது, பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) என்ற பெயருடன் BSNL தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் சரியாக 10 மாதங்கள் (BSNL 10 month validity plan) வரை முழுமையாக செல்லுபடியாகும் வேலிடிட்டியை கொண்டுள்ளது. ஆம், நாம் முன்பே சொன்னது போல இந்த திட்டம் 300 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.

மலிவு விலையில் நீண்ட நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டத்தை தேடும் நபர்களுக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது. அதேபோல், பிஎஸ்என்எல் சிம் கார்டை (BSNL SIM card) இரண்டாம் நிலை சிம் (Secondary SIM) ஆக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் இந்த் திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டத்தின் நன்மைகளை பற்றி பேசுகையில், இது டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) மற்றும் தினசரி எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது.

ஆனால் இந்த நன்மைகள் அனைத்தும், பிஎஸ்என்எல் ரூ. 797 பிளான் (BSNL Rs 797 Plan) ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளில் இருந்து அடுத்த 60 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்த முதல் 60 நாளில் உங்களுக்கு தினசரி 2GB டேட்டா நன்மை கிடைக்கிறது. அதன் பிறகு, அன்லிமிடெட் டேட்டா நன்மை அடுத்த 240 நாட்களுக்கு 40Kbps வேகத்தில் (40Kbps unlimited data) வழங்கப்படும்.

முதல் 60 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளும் கிடைக்கிறது. மொத்தமாக 300 நாட்களுக்கு உங்களுக்கு இன்கமிங் அழைப்புகள் மற்றும் சிம் கார்ட் செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையை இந்த திட்டம் வழங்குகிறது. இதன் தினசரி கட்டணம் 3 ரூபாய்க்கும் குறைந்ததாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மலிவு விலையில் ஒரு பெஸ்டான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (best prepaid recharge plan) தேடுபவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ்.

Best Mobiles in India

English summary
BSNL New Plan Costs Less Than Single Tea Check BSNL Rs 797 Plan with 300 Days Validity 2GB Per Day Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X