BSNL புதிய ஆஃபர்.. இனி 425 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. தினமும் 2ஜிபி டேட்டா.. உற்சாகத்தில் பயனர்கள்..
பிஎன்என்எல் (BSNL) நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இப்போதும் கம்மி விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது பிஎஸ்என்எல். இந்நிலையில் இரண்டு திட்டங்களில் மீண்டும் சலுகையை வழங்கி அசத்தி உள்ளது பிஎன்என்எல் நிறுவனம்.
அதாவது பிஎஸ்ன்எஎல் நிறுவனம் தனது ரூ.2399 மற்றும் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டங்களில் தான் தற்போது சலுகையை வழங்கி உள்ளது. இப்போது இந்த இந்த திட்டங்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் நன்மைகளை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 2399 Prepaid Plan) ஆனது முன்பு 395 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு வழங்கப்பட்ட சலுகை மூலம் 425 நாள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக தற்போது இந்த திட்டத்தில் 425 நாள் வேலிடிட்டி கிடைப்பதால் பல பயனர்கள் இதில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
குறிப்பாக பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 850ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.
இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.2399 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் கூடுதல் நன்மைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.
பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (BSNL Rs 1499 Prepaid Plan) ஆனது முன்பு 336 நாட்கள் வரை வேலிடிட்டி வழங்கியது. ஆனால் தற்போது இந்த திட்டத்திற்கு தற்போது வழங்கப்பட்ட சலுகை மூலம் 365 நாள் வேலிடிட்டி கிடைக்கும். தற்போது இந்த திட்டத்தில் 365 நாள் வேலிடிட்டி கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.

மேலும் பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தமாக 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகை பிஎஸ்என்எல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. குறிப்பான அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை விரும்பும் பயனர்கள் இதை தேர்வு செய்வது நல்லது.
பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தியாவில் சில பகுதிகளில் 4ஜி (4G) சேவையை வழங்கி உள்ளது. இனி வரும் மாதங்களில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது இந்நிறுவனம். மேலும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி (5G) சேவையை இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர லைவ் டிவி சேனல் உட்பட பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது பிஎஸ்என்எல்.


Click it and Unblock the Notifications








