Home
News

இனி கம்மி விலையில் மாதந்தோறும் 5000GB டேட்டா.. அசரடிக்கும் ஆபர் விலையில் BSNL Superstar பிளான்!

இந்திய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் ஆனது மிகவும் சமீபத்தில் தான் அதன் புதிய பாரத் கனெக்ட் ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்து லாங் வேலிடிட்டி பிரிவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் மற்ற நிறுவனங்களின் திட்டங்களை துவம்சம் செய்து இருந்தது.

இதோடு சேர்த்து பிராட்பேண்ட் பிரிவின் கீழ் உள்ள மற்ற டெலிகாம் ஆப்ரேட்டர்களின் திட்டங்களையும் காலி செய்யும் ஒரு ஆபரை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்நிறுவனம் தனது சூப்பர் ஸ்டார் பிரீமியம் திட்டத்தின் (BSNL Super Star Premium Plan) விலையை ரூ.200 குறைத்து உள்ளது.

அசரடிக்கும் ஆபர் விலையில் BSNL-ன் Superstar பிளான்!

இந்த சூப்பர் ஸ்டார் பிரீமியம் திட்டத்தின் நன்மையை பொறுத்தவரை இது 200 எம்பிபிஎஸ் ஹை ஸ்பீட் இண்டர்நெட் ஸ்பீடின் (200Mbps High Speed Internet ) கீழ் 5000ஜிபி அளவிலான மாதாந்திர டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக இது ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களையும் வழங்குகிறது.

சூப்பர் ஸ்டார் பிரீமியம் பிராட்பேண்ட் திட்டத்தில் Sony LIV, Lionsgate, JioHotstar, Epic On, Hungama, மற்றும் Shemaroo போன்ற பல ஓடிடி தளங்களுக்கான தொகுக்கப்பட்ட அணுகல்கள் உள்ளன. மேற்கண்ட எல்லா நன்மைகளும் இப்போது ரூ.999 க்கு பதிலாக ரூ.799 க்கு கிடைக்கிறது.

மேலும் இந்த திட்டத்தை 12 மாதத்திற்கு முன்பணம் செலுத்தினால் கூடுதலாக 20% தள்ளுபடியும் கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சலுகை 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் வழியாக 1800 4444 என்கிற எண்ணிற்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம் இந்த திட்டத்தை அணுகலாம்.

புதிய பாரத் கனெக்ட் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள்: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பாரத் கனெக்ட் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ.2,626 ஆகும். இது 365 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ், முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் ஒரு நாளைக்கு 2.6ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்தவுடன், பிஎஸ்என்எல்-ன் கொள்கையின்படி டேட்டா வேகம் குறைக்கப்படும்

டேட்டா நன்மையை தவிர்த்து, இந்த திட்டத்தின் கீழ் - இந்தியா முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். பாரத் கனெக்ட் திட்டம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது. இது பிப்ரவரி 24 ஆம் தேதி வாய் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்

பட்ஜெட் 2026: பிப்ரவரி 1, 2026 அன்று அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட் 2026 (Budget 2026) மூலம், அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டெலிகாம் ஆபரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு ரூ.28,473 கோடியை பெற முன்மொழியப்பட்டு உள்ளது. இது தவிர, நிதியாண்டு 27க்கான பட்ஜெட்டில் தொலைத்தொடர்பு துறைக்கு (Telecom sector) ரூ.73,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த நிதியாண்டு 26 பட்ஜெட்டில், அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆன பிஎஸ்என்எல் ரூ.6,885 கோடியை பெற்றது. அதாவது நிதியாண்டு 27 இல், இந்த தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய அளவிலான பட்ஜெட்டை அரசாங்கம் ஒதுக்கி உள்ளது; கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகம் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL New Offer Valid Till March 31 Rs 200 Price Cut in Superstar Premium 200 Mbps 5000GB Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X