அம்பானி சார் இதை பார்த்து கத்துக்கோங்க.. பேஸிக் ரீசார்ஜில் ரூ.100 விலை குறைப்பு.. BSNL அதிரடி!
வாழ்க்கை ஒரு வட்டம்டா என்கிற வசனத்திற்கு ஏற்ப ஒரு காலத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பிஎஸ்என்எல் (BSNL), தற்போது பெரும்பாலான மக்களால் போற்றப்படுகிறது. அதேபோல "ஜியோ போல வருமா", "ஏர்டெல் தான் பெஸ்ட்டு" என்று போற்றப்பட்ட தனியார் டெலிகாம் (Jio, Airtel) நிறுவனங்களானது, கடந்த 1 மாத காலமாக, சொந்த வாடிக்கையாளர்களாலேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதற்கு - திடீரென அமலுக்கு வந்த 25% வரையிலான விலை உயர்வு தான் காரணம். ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் எந்த விதமான விலை உயர்வையும் அறிவிக்கவில்லை.
இதன்விளைவாக பெரும்பாலான பட்ஜெட்-வாசிகள் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு இடம்பெயர தொடங்கி உள்ளனர். நாளுக்கு நாள் பிஎஸ்என்எல் சேவையின் கீழ் இணையும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. இதற்கிடையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது பேஸிக் ரீசார்ஜ் ஒன்றின் மீது ரூ.100 விலை குறைப்பை அறிவித்து அதிரடி காட்டியுள்ளது. அது என்ன திட்டம்? அதன் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

பிஎஸ்என்எல் நிறுவனமானது மான்சூன் டபுள் போனான்ஸா ஆபர் (Monsoon Double Bonanza offer) என்கிற லிமிடெட் டைம் ஆபரை (Limited time offer) வழங்குகிறது. இதன்கீழ் முன்னதாக ரூ.499 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த ஒரு திட்டம் ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்யும் கிடைக்கும். அதாவது ரூ.100 குறைக்கப்பட்ட விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
அந்த திட்டம் பாரத் ஃபைபர் பிராட்பேண்ட்டின் (Bharat Fibre broadband) கீழ் கிடைக்கும் ஃபைபர் பேஸிக் பிளான் (Fibre Basic Plan) ஆகும். இருப்பினும் இந்த விலை குறைப்பு முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதன் பின்னர் ரூ.399 திட்டம் அதன் வழக்கமான விலையான ரூ.499 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்.
ரூ.100 விலை குறைப்போடு சேர்த்து முதல் முறை சந்தாதாரர்களுக்கு ஒரு மாத கால இலவச சேவையும் கிடைக்கும். புதிய பாரத் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பை பெற விரும்பும் பயனர்கள் 1800-4444 என்கிற எண்ணுக்கு வாட்ஸ்அப் வழியாக ஹாய் (Hi) என்று மெசேஜ் அனுப்புவதன் மூலம் முன்பதிவு செய்யலாம்.
இந்த ஃபைபர் பேஸிக் திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, இது 60 எம்பிபிஎஸ் என்கிற ஸ்பீட்டின் கீழ் 3300ஜிபி ஹை -ஸ்பீட் டேட்டாவை வழங்கும். டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும். டேட்டாவை தவிர, இந்த பிராட்பேண்ட் திட்டமானது எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிட்ட் லோக்கல் மற்றும் எஸ்டிடி அழைப்புகளையும் வழங்குகிறது.
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவும் கூட புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க ஃப்ரீடம் ஆஃபர் (Jio Freedom Offer 2024) என்கிற புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையின் கீழ் ஜியோ நிறுவனத்தின் ஏர்ஃபைபர் சேவையின் கீழ் சேரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு 30% தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டிற்கு ஜியோ ஏர்ஃபைபர் சேவையின் கீழ் கிடைக்கும் ஸ்டாண்டர்ட் 3 மாத திட்டத்தின் விலை ரூ.2,121 ஆகும் . மேலும் இதற்கான நிறுவல் கட்டணம் ரூ.1,000 ஆகும். ஆகமொத்தம் எந்த சலுகையும் இல்லாமல் ரூ.3,121 செலவாகும். ஆனால் ஜியோ ஃப்ரீடம் ஆஃபரின்கீழ். நிறுவல் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுகிறது, எனவே புதிய வாடிக்கையாளர்கள் ரூ.2,121 செலுத்தினால் போதும்!
அதாவது இந்த சலுகையின் கீழ் புதிய ஏர்ஃபைபர் பயனர்களுக்கு நிறுவல் கட்டணமான ரூ.1,000 தள்ளுபடி செய்யப்படுவதே 30% தள்ளுபடியாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஜியோவின் இந்த ஃப்ரீடம் ஆஃபர் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மட்டுமே அணுக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இந்த சலுகையை பெறுவது எப்படி? புதிய ஜியோ ஏர்ஃபைபர் கனெக்ஷனை பெற, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (Jio Website) சென்று உங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இல்லை என்றால் 60008 60008 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் (Missed call) கொடுக்கவும்.


Click it and Unblock the Notifications








