BSNL-ன் பாச மழை.. அக்.15 வரை புதிய ஆபர்.. ரூ.199 உட்பட 3 திட்டங்கள் மீது விலை குறைப்பு!
அட இவ்ளோ பாசக்கார பயலா நீ.. என்று பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தை பார்த்து கேட்கும்படியாக, அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆப்ரேட்டர் ஆனது "கொஞ்சம் கூட கேப்பு விடாமல்" தொடர்ச்சியான முறையில் ஏதாவது ஒரு சலுகையை வழங்கி கொண்டே இருக்கிறது!
கடந்த செப்.13 ஆம் தேதியுடன் 1ஜிபிபிஎஸ் பிளானின் மீது கிடைத்த ரூ.6000 டிஸ்கவுண்ட் முடிவுக்கு வந்தது. பின்னர் செப்.15 ஆம் தேதியுடன் ரூ.1 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த 4ஜி பிளானும் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து பிஎஸ்என்எல் நிறுவனமானது இன்னொரு புதிய ஆபரை அறிவித்துள்ளது.

இதன் கீழ் 3 பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டங்கள் மீது இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் (Instant Discount) அறிவிக்கப்பட்டு உள்ளது,. அதாவது உடனடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதென்ன திட்டங்கள்? அவைகளின் அசல் விலை என்ன? டிஸ்கவுன்ட்டிற்கு பிறகான விலை என்ன? இதோ விவரங்கள்:
புதிய விளம்பர சலுகையின் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் நிறுவனமானது தேர்ந்தெடுக்கப்பட்ட 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் 2% தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. மேலும் இந்த 2% டிஸ்கவுண்ட் ஆனது பிஎஸ்என்எல் வலைத்தளம் மற்றும் பிஎஸ்என்எல் மொபைல் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த சலுகை ஏற்கனவே (செப்டம்பர் 15, 2025 முதல்) தொடங்கி விட்டது மற்றும் இது வருகிற அக்டோபர் 15, 2025 அன்று முடிவடையும். இதன்கீழ் 2% உடனடி தள்ளுபடியை பெறும் 3 திட்டங்கள் - ரூ.199, ரூ.485 மற்றும் ரூ.1999 ஆகும்.
ரூ.1999 திட்டத்தில் 2% தள்ளுபடி என்றால் உங்களுக்கு ரூ.38 விலை குறைப்பு கிடைக்கும். இதேபோல ரூ.199 திட்டத்தில் 2% தள்ளுபடி என்றால் உங்களுக்கு ரூ.3.8 விலை குறைப்பு கிடைக்கும் மற்றும் ரூ.485 திட்டத்தில் 2% தள்ளுபடி என்றால் உங்களுக்கு ரூ.9.6 விலை குறைப்பு கிடைக்கும்.
நிச்சயம் இது பெரிய தள்ளுபடி அல்ல. ஆனால் பேஸிக் ரீசார்ஜ் திட்டங்களை நீக்கி பட்ஜெட் வாசிகளின் வயிற்றில் அடிக்கும் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது, பிஎஸ்என்எல்-ன் இந்த டிஸ்கவுண்ட் சிறந்தது தான். ஏனென்றால் "ஒன்றுமே இல்லாததை விட ஏதோ ஒன்று" எப்போதும் சிறந்தது!
4ஜி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு நெட்வொர்க் அனுபவத்தை மேம்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதன் கவரேஜ் பகுதியை அதிகரிக்க முயற்சிக்கிறது. இதனொரு பகுதியாகவே பிஎஸ்என்எல் ரூ.1க்கு 4ஜி திட்டம் மற்றும் இலவச சிம் கார்டு சலுகையை வழங்கியது. முன்னரே குறிப்பிட்டபடி இப்போது அந்த சலுகை இல்லை, ஆனால் அது பலரையும் பிஎஸ்என்எல் சேவையை முயற்சிக்க ஈர்த்தது.
செப்.30 வரை கிடைக்கும் பிராட்பேண்ட் டிஸ்கவுண்ட் ஆபர் ஒன்றும் உள்ளது: புதிய 2% டிஸ்கவுண்ட் ஒருபக்கம் இருக்க, பிஎஸ்என்எல் ஆனது அதன் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கான ஒரு சிறப்பு பிராட்பேண்ட் சலுகையையும் (Special Broadband Offer) வழங்கி வருகிறது. இதன்கீழ் ரூ.499 மற்றும் ரூ.449 திட்டங்கள் மீது ரூ.100 வரையிலான டிஸ்கவுண்ட் கிடைக்கும் .
இதன்கீழ் ரூ.499 திட்டம் ஆனது ரூ.100 தள்ளுபடியின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இதேபோல ரூ.449 திட்டம் ஆனது ரூ.50 தள்ளுபடியின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த சிறப்பு பிராட்பேண்ட் சலுகை ஆனது இந்தியா முழுவதும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் சில வட்டங்களில், மேற்குறிப்பிட்ட 2 திட்டங்களுக்கும் கிடைக்காமல் போகலாம்.
ரூ.499 மதிப்புள்ள திட்டம் பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் பிளான் என்று அழைக்கப்படுகிறது மற்றும் ரூ.449 மதிப்புள்ள திட்டம் பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் நியோ பிளான் என்று அழைக்கப்படுகிறது. ஃபைபர் பேசிக் திட்டம் 60எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வருகிறது. மறுகையில் உள்ள ஃபைபர் பேசிக் நியோ திட்டம் 50எம்பிபிஎஸ் என்கிற ஸ்பீட் உடன் வருகிறது. இரண்டு திட்டங்களுமே 3.3 டிபி (அதாவது 3300 ஜிபி) வரையிலான டேட்டாவை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications








