Home
News

10 நாட்களுக்கு இலவசம்.. இன்ப அதிர்ச்சியில் BSNL கஸ்டமர்ஸ்.. அடுத்த 1 மாசத்துக்கு கிடைக்கும் புது ஆஃபர்!

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் முடிந்த கையோடு, அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆப்ரேட்டர் ஆன பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது, தனது ஃபைபர்-டு-தி-ஹோம் பிராட்பேண்ட் கஸ்டமர்களுக்கு (Fiber-to-the-Home Broadband Customers) 10 நாட்களுக்கு அணுக கிடைக்கும் இலவச சலுகை ஒன்றை அறிவித்து உள்ளது.

பாரத் ஃபைபர் அம்ரித் உத்சவ் (Bharat Fiber Amrit Utsav) என்கிற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகையின் கீழ் கிடைக்கும் இலவச நன்மை என்ன? இதை பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆப் வழியாக அணுகுவது எப்படி? இது யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதோ விவரங்கள்:

10 நாட்களுக்கு இலவசம்.. இன்ப அதிர்ச்சியில் BSNL கஸ்டமர்ஸ்!

பிஎஸ்என்எல்-ன் இந்த புதிய சலுகையை அணுகும் எஃப்டிடிஎச் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 10 நாட்களுக்கு 100எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீட் (100Mbps Internet Speed) முற்றிலும் இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை ஆகஸ்ட் 15, 2023 முதல் செப்டம்பர் 15, 2023 வரை செல்லுபடியாகும் என்றும் பிஎஸ்என்எல் கூறுகிறது.

அதாவது பிஎஸ்என்எல்-ன் இந்த சலுகை அடுத்த 1 மாத காலத்திற்கு அணுக கிடைக்கும். இதை நீங்கள் எப்போது அணுகினாலும் சரி, உங்களுக்கு அடுத்த 10 நாட்களுக்கு 100எம்பிபிஎஸ் வரையிலான இண்டர்நெட் ஸ்பீட் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி, இந்த சலுகை "மை பிஎஸ்என்எல் ஆப்" (My BSNL App) வழியாக அணுக கிடைக்கும்.

இந்த இலவச சலுகையை பெற விரும்புபவர்கள் அவர்கள் மொபைல் போனில் உள்ள மை பிஎஸ்என்எல் ஆப்பை திறக்கவும். முடிந்தால் குறிப்பிட்ட ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை அப்டேட் செய்துகொள்ளவும். ஒருவேளை இந்த ஆப் உங்களிடம் இல்லை என்றால் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக குறிப்பிட்ட ஆப்பை இன்ஸ்டால் செய்து, உங்களுக்கான அக்கவுண்ட்டை ரிஜிஸ்டர் செய்யவும்.

அதன் பின்னர் உங்கள் அக்கவுண்ட்டில் ஃபைபர்-டு-தி-ஹோம் (FTTH) நம்பரை சேர்க்கவும். அதை தொடர்ந்து பிஎஸ்என்எல் ஸ்பீட் பூஸ்டர் திட்டத்தின் (Speed Booster scheme) கீழ் தகுதி பெற வேண்டுமென்றால், அதற்காக நீங்கள் பதிவு செய்ய வேண்டும் என்கிற அலெர்ட் (Alert) உங்களுக்கு கிடைக்கும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் நம்பரின் அடையாளத்தை சரிபார்க்க, ஒடிபி (OTP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் சரிபார்ப்பு (One Time Password Verification) நடத்தப்படும்.

ஸ்பீட் பூஸ்டருக்கான உங்களுடைய பதிவு வெற்றிகரமாக இருந்தால், 48 மணி நேரத்திற்குள் உங்களுடைய ஃபைபர்-டு-தி-ஹோம் கனெக்ஷனின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 100எம்பிபிஎஸ் வரையிலாக மேம்படுத்தப்படும். முன்னரே குறிப்பிட்டபடி, மேம்படுத்தப்பட்ட இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 10 நாட்களுக்கு மட்டுமே ஆக்டிவ் ஆக இருக்கும்.

இந்த சலுகைக்கான தகுதி மற்றும் விதிமுறைகளை (Eligibility and Terms) பொறுத்தவரை, ரூ.449, ரூ.499, ரூ.599 அல்லது ரூ.666 ஆகிய பிக்ஸடு மன்த்லி சார்ஜஸ் (Fixed Monthly Charges - FMC) கொண்ட திட்டங்களில், பதிவு செய்யப்பட்ட மற்றும் ஆக்டிவ் ஆக உள்ள பிஎஸ்என்எல் ஃபைபர்-டு-தி-ஹோம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த வரையறுக்கப்பட்ட கால சலுகை கிடைக்கும்.

இந்த ஆஃபர் காலத்தின் போது பணம் செலுத்தாததால், வாடிக்கையாளரின் ஸ்டேட்டஸ் (Customer Status) துண்டிக்கப்பட்டால், இந்த சலுகை காலாவதியாகிவிடும் என்பதையையும் வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இலவச சலுகையின் மூலம், பிஎஸ்என்எல் அதன் பயனர்கள் ஹை-குவாலிட்டி கனெக்டிவிட்டியை (High-quality Connection) முயற்சிக்க வழிவகுக்குகிறது. இதன் மூலம் பலரும் அவர்களின் பிராட்பேண்ட் பிளான்களை அப்கிரேட் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL New Offer FTTH Customers Can Get Up To 100Mbps Internet Speed For 10 Days For Free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X