Home
News

டிச.31 உடன் முடியுது.. FREE ஆபர்னா இப்படி இருக்கனும்.. 60GB, வாய்ஸ், SMS.. BSNL-ன் அடேங்கப்பா ரீசார்ஜ்!

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் ஆனது இந்தியாவில் உள்ள பயனர்களுக்காக ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அது 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்றும் அறிவித்துள்ளது.

இது கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து "வெவ்வேறு பெயர்களில்" ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.1 ரீசார்ஜ் ஆகும். இப்போது இது பிஎஸ்என்எல் கிறிஸ்துமஸ் போனான்ஸா பிளான் (BSNL Christmas Bonanza Plan) என்கிற பெயரின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

BSNL.. டிச.31 உடன் முடியுது.. FREE ஆபர்னா இப்படி இருக்கனும்!

டிசம்பர் 31 ஆம் தேதி வாய் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் இந்த கிறிஸ்துமஸ் போனான்ஸா திட்டத்தின் விலை வெறும் ரூ. 1 மட்டுமே ஆகும் மற்றும் இது 30 நாட்கள் செல்லுபடியாகும். இந்த காலகட்டத்தில், சந்தாதாரர்கள் தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா என மொத்தம் 60ஜிபி அளவிலான டேட்டாவை பெறுவார்கள்.

கூடவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை பெறுவார்கள். 2ஜிபி என்கிற டெய்லி டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர், இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் ஆனது 40கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும். எல்லாவற்றை விட முக்கியமான இந்த கிறிஸ்துமஸ் போனான்ஸா திட்டத்தை பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு எந்த செலவும் இல்லாமல் இலவச 4ஜி சிம் கார்டும் வழங்கப்படும்

அதாவது இது ஒரு குறிப்பிட்ட கால சலுகை மட்டுமல்ல, பிஎஸ்என்எல் சேவையின் கீழ் இணையும் புதிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமான திட்டமும் கூட. டிசம்பர் 31 ஆம் தேத்திக்குள் இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள ரீடெயில் ஸ்டோர் ல்லது பிஎஸ்என்எல் பொது சேவை மையத்தை அணுகலாம்

சமீபத்தில் அறிமுகமான பிஎஸ்என்எல் ரூ.251 திட்டம்: இந்நிறுவனம் ரூ.251 திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இப்போது து 100ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இதுமட்டுமல்ல இது இன்னும் நிறைய நன்மைகளை வழங்குகிறது பிஎஸ்என்எல்-ன் ரூ.251 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு பிஐடிவி (BiTV) அணுகலையும் வழங்குகிறது.

இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஓடிடி (ஓவர்-தி-டாப்) தளமாகும்; இதன்கீழ் 450 க்கும் மேற்ப்பட்ட டிவி சேனல்களும் அணுக கிடைக்கும். கூடவே இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளையும் வழங்குகிறது பிஎஸ்என்எல்-ன் ரூ.251 திட்டம் ஆனது 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வருகிறது.

முடிவுக்கு வரும் பிஎஸ்என்எல் 3ஜி நெட்வொர்க்? பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 3ஜி சேவையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக பிஎஸ்என்எல் நெட்வொர்க்கின் அடிப்படை ஆக - 3ஜி உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் பல பகுதிகளில் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியது, இப்போது இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் நேரடி தளங்களை கொண்டுள்ளது.

இதற்கிடையில் லைவ்மின்ட்டின் (LiveMint) ஒரு சமீபத்திய அறிக்கையின்படி, நோக்கியா (NOKIA) மற்றும் சீன உபகரண தயாரிப்பாளர் ஆன இஸட்டிஇ (ZTE) போன்ற விற்பனையாளர்களுடனான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தங்களை (AMC - Annual maintenance contracts) நிறுத்த பிஎஸ்என்எல் திட்டமிட்டு உள்ளது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது அதன் 3ஜி சேவையை நிறுத்துவதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்டது என்று அர்த்தம்.

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆனது சீன சேவைகளை தங்கள் நெட்வொர்க்குகளிலிருந்து படிப்படியாக அகற்றுமாறு அரசாங்கம் கேட்டு கொண்ட நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஒரு பெரிய வளர்ச்சியாகும், மேலும் இது கடுமையான கேள்விகளையும் எழுப்புகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL New Offer Ends December 31 Get Free 4G SIM along with Other Benefits Before 2026 Starts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X