Home
News

அசத்துறானே.. BSNL புதிய ஆபர்.. இனி 255GB டேட்டா.. 84 நாள் வேலிடிட்டி.. டெய்லி SMS.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்!

ஏற்கனவே புதிய கஸ்டமர்களின் வருகையால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமானது மேலும் பல புதிய கஸ்டமர்களை சுண்டி இழுக்கும்படியான பல வேலைகளை பார்த்து வருகிறது. கூடவே, ஏற்கனவே இருக்கும் விசுவாசமான கஸ்டமர்களை தக்கவைக்கும் ஆபர்களை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது.

சில தினங்களுக்கு முன்பு வரையிலாக (சரியாக கடந்த நவம்பர் 7 ஆம் தேதி வரையிலாக) தீபாவளி பண்டிகை கால சலுகையின் ஒரு பகுதியாக 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் பிஎஸ்என்எல்-ன் ரூ.1999 திட்டத்தின் விலை ரூ.100 குறைக்கப்பட்டு, ரூ.1899 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்தது. இந்த சலுகை முடிந்த வேகத்தில் இன்னொரு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அசத்துறானே.. BSNL புதிய ஆபர்.. இனி 255GB டேட்டா!

பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் ரூ.599 திட்டத்தின் மீது கூடுதல் டேட்டா சலுகையை அறிவித்துள்ளது. 84 நாட்கள் என்கிற வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இனிமேல் மொத்தம் 255ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது டெய்லி 3ஜிபி டேட்டா க்ஸ் 84 நாட்கள் = 252ஜிபி டேட்டா + 3ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா என மொத்தம் 255ஜிபி டேட்டா கிடைக்கும்.

டேட்டா நன்மையுடன் சேர்த்து ரூ.599 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்துடன் அன்லிமிடெட் லோக்கல் / எஸ்டிடி வாய்ஸ் கால்கள், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளும் கிடைக்கும். கூடுதலாக ஸிங் (Zing), பிஆர்பிடி (PRBT), ஆஸ்ட்ரோடெல் (Astrotell) மற்றும் கேம்ஆன் சேவைகள் (GameOn Services) போன்ற நன்மைகளும் கிடைக்கும்.

ரூ.599-ன் கீழ் கிடைக்கும் 3ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவை பெற பிஎஸ்என்எல் பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை ரீசார்ஜ் செய்ய பிஎஸ்என்எல்-ன் செல்ஃப்கேர் ஆப்பை (BSNL Self-care App) பயன்படுத்த வேண்டும். அதாவது வேறு மூன்றாம் தரப்பு ஆப்களின் (கூகுள் பே, போன்பே அல்லது பேடிஎம்) வழியாக ரூ.599 திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் 3ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்காது.

பிஎஸ்என்எல் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆப்ரேட்டர் டெல்லி வட்டத்தில் உள்ள 1,876 தளங்களில் உள்நாட்டு 5ஜி வணிக சேவைகளை (Indigenous 5G commercial services) வழங்க ஒரிஜினல் எக்யுப்மென்ட் மெனுஃபேக்சரர்களை (Original equipment manufacturers - OEMs) அழைக்கும் டெண்டரை வெளியிட்டு உள்ளது.

பிஎஸ்என்எல் அதன் 5ஜி கவரேஜிற்காக 900 மெகா ஹெர்ட்ஸ் லோ-பேண்ட்டையும் மற்றும் திறனுக்காக 3.5 ஜிகாஹெர்ட்ஸ் மிட்-பேண்ட்யும் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் பிஎஸ்என்எல் 5ஜி நெட்வொர்க் ஆனது மேம்படுத்தப்பட்ட மொபைல் பிராட்பேண்ட், மேம்படுத்தப்பட்ட வாய்ஸ், வீடியோ, டேட்டா, எஸ்எம்எஸ், அல்ட்ரா-ரிலையபிள் லோ-லேடன்சி கம்யூனிகேஷன்ஸ் நெட்வொர்க் ஸ்லைசிங் ஆகியவற்றை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனமானது சிம் கார்டு இல்லாமலே மெசேஜ் அனுப்ப உதவும் மற்றும் ஆடியோ / வீடியோ கால் செய்ய உதவும் டி2டி (D2D) என்கிற புதிய சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.
டி2டி என்பது டைரக்ட் டு டிவைஸ் (Direct to Device) என்பதன் சுருக்கமாகும். இதன்கீழ் பாரம்பரியமான மொபைல் நெட்வொர்க்குகளின் தேவைஇல்லாமல் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்கள் உள்ளிட்ட டிவைஸ்களை கனெக்ட் செய்யலாம்.

இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் வியாசாட் (Viasat) உடன் இணைந்து, டி2டி சேவை தொடர்பான சோதனைகளை வெற்றிகரமாக முடித்து உள்ளது. பிஎஸ்என்எல் இந்த டி2டி தொழில்நுட்பம் நிலம், காற்று மற்றும் கடலில் வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது அவசரகாலத்தின் போது அல்லது இயற்கை பேரழிவுகளின் போது 'கம்யூனிகேஷன்' செய்ய.. அதாவது ஒருவரோடு இன்னொருவர் தொடர்புகொள்ள.. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Best Mobiles in India

English summary
BSNL New Offer 3GB Extra Data With Rs 599 Plan But Recharge Need To Done Using BSNL Self Care App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X