சாரே.. ஆட்டம் வேற மாறி இருக்கே.. BSNL புதிய ஆபர்.. ரூ.333 போதும்.. 3600GB டேட்டா.. 3 மாதம் வேலிடிட்டி!
பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) நிறுவனமானது, ஒட்டுமொத்த டெலிகாம் துறையும் வாய் பிளக்கும்படியான ஒரு புதிய ஆபரை அறிவித்துள்ளது. அதென்ன ஆபர்? என்ன விலை? என்னென்ன நன்மைகள்? இதோ விவரங்கள்:
பிஎஸ்என்எல் நிறுவனம், 25எம்பிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீட்டை வழங்கும் திட்டத்தை 3 மாதங்களுக்கு வெறும் வெறும் ரூ.999 க்கு வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதாவது இந்த ஆபர் மாதாந்திர ரூ.333 என்கிற செலவில் அணுக கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் 1200ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். அதாவது 3 மாதங்களுக்கு மொத்தம் 3600ஜிபி டேட்டா கிடைக்கும்.

இந்த சலுகையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் வழியாக 1800-4444 என்கிற எண்ணிற்கு ஹாய் என்று மெசேஜ் அனுப்பினால் போதும். மாதம் வெறும் ரூ.333 செலவில் ஏராளமான டேட்டாவை (1200ஜிபி டேட்டா) வழங்கும் இந்த ஆபர் குறித்த விவரங்கள் பிஎஸ்என்எல் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. ஆனால் இந்த சலுகை எல்லா பகுதிகளிலும் கிடைக்காது என்பது போல் தெரிகிறது.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனமானது நாட்டின் முதல் ஃபைபர் அடிப்படையிலான இன்டர்நெட் புரோட்டோகால் டிவி சேவையை அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதன்கீழ் செட்-டாப் பாக்ஸ் இல்லாமலேயே, பிராட்பேண்ட் பயனர்கள் இப்போது 500 க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் மற்றும் பல்வேறு ஆப்களை உள்ளடக்கிய சந்தாவை அனுபவிக்க முடியும்
ஆரம்பத்தில் பிஎஸ்என்எல்-ன் இந்த இன்டர்நெட் புரோட்டோகால் டிவி சேவையானது மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் அறிமுகமானது. இப்போது இது பஞ்சாபில் உள்ள பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. கூடிய விரைவில் இது இந்தியா முழுவதும் உள்ள பாரத் ஃபைபர் பயனர்களுக்கு அணுக கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் உள்நாட்டு 4ஜி கோர் (Indigenous 4G core) நெட்வொர்க்கை தெலுங்கானாவில் அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அதாவது தற்போது தெலுங்கானாவில், பிஎஸ்என்எல்-ன் 4ஜி கோர் நெட்வொர்க் இயங்குகிறது மற்றும் அந்த பிராந்தியத்தில் உள்ள கஸ்டமர்களால் தற்போது ஹை-ஸ்பீட் இண்டர்நெட்டை பெறலாம் என்று அர்த்தம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த வளர்ச்சியானது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைமையிலான கூட்டமைப்பின் கீழ் சாத்தியமாகி உள்ளது. இந்த கூட்டமைப்பில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் மற்றும் டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் ஆகியவைகளும் உள்ளன. இந்த வளர்ச்சிக்கான கோர்-ஐ (Core) சி-டாட் வழங்குகிறது. ரான்-ஐ (RAN) தேஜாஸ் நெட்வொர்க் வழங்குகிறது.
மேலும் டிசிஎஸ் நிறுவனமானது எஸ்ஐ (SI) ஆகவும், அதாவது சிஸ்டம்ஸ் இன்டக்ரேட்டர் (Systems integrator) ஆக செயல்படும்; பிஎஸ்என்எல் 4ஜி நெட்வொர்க்குகளை பராமரிப்பதற்குமான பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்.
இதற்கிடையில் குஜராத் மாநிலத்தில் உள்ள 2,910 இடங்களில் உள்ள 2ஜி / 3ஜி பிஎஸ்என்எல் டவரக்ள் ஆனது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 4ஜி தொழில்நுட்பத்தை கொண்டு மாற்றி அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது
மாநில தகவல் தொடர்பு அமைச்சர் ஆன பெம்மசானி சந்திர சேகரின் கூற்றுப்படி, இந்த வளர்ச்சி மத்திய அமைச்சரவை யால் ஒப்புதல் அளிக்கப்பட்ட 4ஜி செறிவூட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக (நாடு முழுவதும் உள்ள கவர் செய்யப்படாத கிராமங்களில் 4ஜி மொபைல் சேவைகளை வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும். இதன்கீழ் குஜராத்தின் 949 கிராமங்களுக்கு பிஎஸ்என்எல் 4ஜி சேவை கொண்டு செல்லப்படும்.
இதுதவிர்த்து, பாரத்நெட் (BhartNet) திட்டத்துடன், நாட்டில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகள் மற்றும் கிராமங்களுக்கு, பிராட்பேண்ட் இணைப்பு கிடைப்பதாகவும் பெம்மசானி சந்திர சேகர் உறுதிப்படுத்தினார். இதுபோன்ற நடவடிக்கைகளின் விளைவாகவே ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், பலர் தங்கள் மொபைல் எண்களை பிஎஸ்என்எல்-க்கு மாற்றியுள்ளனர். டிராய்-ன் (TRAI) சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த நான்கு மாதங்களில் பிஎஸ்என்எல் அதிக எண்ணிக்கையிலான பயனர்களை சேர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications








