24 மணி நேரத்துக்குள்ள ரீசார்ஜ் பண்றவங்களுக்கு லக்கு.. மார்ச் 31 உடன் முடியும் 72 நாள் BSNL ரீசார்ஜ் ஆபர்!
பிஎஸ்என்எல் (BSNL) தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றில் விலையை மாற்றாமல், அதன் கீழ் கிடைக்கும் டெய்லி டேட்டா நன்மையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பயனர்களுக்கு கூடுதல் செலவின்றி அதிக நன்மையை வழங்குகிறது. இது குறிப்பிட்ட காலதிற்கு மட்டுமே கிடைக்கும் ஒரு போனஸ் டேட்டா ஆபர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எந்த திட்டத்தில்? எப்போது வரை கிடைக்கும்?
எந்த திட்டத்தில்? பிஎஸ்என்எல் அறிவித்து உள்ள இந்த போனஸ் டேட்டா ஆபர் ஆனது ரூ.485 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் கிடைக்கிறது. முன்னதாக இந்த திட்டத்தின் கீழ் தினசரி 2ஜிபி டேட்டா கிடைத்தது. இப்போது அது டெய்லி 2.5ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த திருத்தம் ஒவ்வொரு நாளும் கூடுதலாக 0.5ஜிபி டேட்டாவை சேர்க்கிறது. இது பயனர்கள் கூடுதல் டாப்-அப்கள் தேவையின்றி அதிக கன்டென்ட்களை அணுக அனுமதிக்கிறது. டேட்டா நன்மையை தவிர்த்து இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மையுடன் சேர்த்து ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது.
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 72 நாட்கள் ஆகும். இதனால் பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் நீண்ட காலத்திற்கு இந்த திட்டத்தை தொடர்ந்து அனுபவிக்க முடியும். டேட்டா பலன்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும், பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்திற்கான விலையை ரூ. 485 என்ற அதே அளவில் தக்கவைத்துள்ளது. இது இந்த திருத்தத்தை மதிப்பு சார்ந்த ஒரு மேம்படுத்தலாக ஆக்குகிறது, பயனருக்கு எந்தக் கூடுதல் செலவும் இல்லாமல் அதிக டேட்டாவை வழங்குகிறது.
எப்போது வரை கிடைக்கும்? முன்னரே குறிப்பிட்டபடி இந்த போனஸ் டேட்டா ஆபர் ஆனது ஒரு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்று பிஎஸ்என்எல் தெளிவுபடுத்தியுள்ளது. இந்த சலுகை மார்ச் 31, 2026 வரை மட்டுமே செல்லுபடியாகும். இந்த காலத்திற்குள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்கள், திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் முழுவதும் அதிகரிக்கப்பட்ட தினசரி டேட்டா பலனை பெறுவார்கள்.
OPINION: இதுபோன்ற நடவடிக்கைகள், ஒரு திட்டத்தின் மதிப்பை மேம்படுத்துவதன் மூலம் ஏற்கனவே உள்ள பயனர்களை தக்கவைத்துக்கொள்வதற்கும், புதிய சந்தாதாரர்களை ஈர்ப்பதற்கும் ஒரு நல்ல உத்தி ஆகும். பண்ல்டு ஆபர்கள் அல்லது சர்வீஸ் ஆட் ஆன்களை போலல்லாமல், தினசரி டேட்டாவில் நேரடி அதிகரிப்பு என்பது பயனர்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு பலனாகும்.
ஐபிஎல் சீசனுக்கு ஏற்ற 90 ன்னால் ரீசார்ஜ்: போனஸ் டேட்டா ஆபர் ஒருபக்கம் இருக்க பிஎஸ்என்எல் அதன் ரூ.499 எண்டர்டெயின்மென்ட் பேக்கை படுதீவிரமாக விளம்பரப்படுத்தி வருகிறது. இது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரு தரமான ஓடிடி புலனாகும். இதன் கீழ் ஐபிஎல் 2026 போட்டிகளை லைவ் ஸ்ட்ரீமிங் செய்யும் ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கிடைக்கிறது. கூடவே சோனி லைவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் பிஎஸ்என்எல் இந்தியா எக்ஸ் பக்கம் வழியாக பகிர்ந்துள்ள விவரங்களின் படி, ரூ.499 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 3 ஓடிடி தளங்களையும் 2 ஸ்க்ரீன்களில் காண முடியும். இந்த திட்டம் 90 நாட்கள் என்கிற வேலிடிட்டியை கொண்டுள்ளது. அதாவது மாதாந்திரம் ரூ.166 என்கிற செலவின் கீழ் 3 மாதங்களுக்கு இந்த திட்டத்தை பயன்படுத்தலாம் என்று அர்த்தம்.


Click it and Unblock the Notifications








