குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையுடன் நான்கு திட்டங்களை அறிமுகம் செய்த பிஎஸ்என்எல்.!
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து சிறப்பான சேவைகள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவங்களை விட குறைவான விலையில் திட்டங்களை அறிமுகம் செய்து சிறப்பான சலுகைகளை வழங்கி வருகிறது இந்நிறுவனம். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களை விட சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்குகிறது இந்நிறுவனம்.

தற்சமயம் பிஎஸ்என்எல் நான்கு புத்தம் புதிய பிராட்பேண்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த நான்கு திட்டங்களின் வலை ரூ.449, ரூ.799, ரூ.999 மற்றும் ரூ.1,499 -ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு மற்றும் அதிகவேக டேட்டா நன்மை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவந்த தகவலின்படி இந்த திட்டங்களை அக்டோபர் 1 முதல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும், பின்பு இந்த புதிய பிராட்பேண்ட் திட்டங்கள் அனைத்தும் அக்டோபர் 1 முதல் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்றும், அதன்பிறகு நிறுவனம் அவற்றை அதன் தளத்திலிருந்து அகற்ற முடியும். குறிப்பாக இந்த திட்டங்களை விளம்பர அடிப்படையில் அறிவத்துள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம். மேலும் இந்த புதிய திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.499-பிராட்பேண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499-பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒரு ஃபைபர் பேசிக் திட்டம் என்று கூறப்படுகிறது, இது பயனருக்கு 30 Mbps வேகத்தின் கீழ் 3.3 TB (3300GB) அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் FUP குறிப்பிட்ட வரம்பிற்கு பிறகு, இணைய வேகம் 2mbps ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த திட்டம் அந்தமான் மற்றும் நிக்கோபார் வட்டம் தவிர அனைத்து வட்டங்களிலும் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் ரூ.799-பிராட்பேண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.799-பிராட்பேண்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 100Mbps வேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் டேட்டாவின் வரம்பு முடிந்ததும், வேகம் 2 Mbps ஆக குறைகிறது.
நிறுவனம் எந்த பதிவு கால திட்டங்களையும் வழங்கவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒரு பிரீமியம் திட்டம் ஆகும். இதில் பயனர்கள் 200Mbpsவேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டாவை பெறுகிறார்கள். குறிப்பாக டேட்டா வரம்பு முடிந்ததும், இதன் வேகம் 2 Mbps ஆக குறைகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும் இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனமும் இதேபோன்ற திட்டத்தை வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 300 Mbps வேகத்துடன் 4TB (4000GB) டேட்டாவை வழங்குகிறது. இருந்தபோதிலும் சில நகரங்களில் அதிகபட்ச வேகம் 200Mbps-உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்ததும், வேகம் 4Mbps ஆக குறைகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது. பயனர்கள் இந்த திட்டத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ரூ.999 மற்றும் ரூ.1499 திட்டங்களுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம்
சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications