பிஎஸ்என்எல் புதிய திட்டங்கள் எந்தெந்த பகுதியில் கிடைக்கும் தெரியுமா?- இதோ பட்டியல்!

|

பிஎஸ்என்எல் சுரங்கப்பாதையில் 4 ஜி இணையம் வழங்கும் சேவை அறிமுகப்படுத்திய பின் இந்த சேவை எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது. அதேபோல் பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டங்கள் இந்த பகுதிகளில் மட்டும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டங்கள்

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டங்கள்

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள புதிய திட்டங்கள் குறித்து பார்க்கையில் ரூ.499, ரூ.799, ரூ.999, மற்றும் ரூ.1,499 ஆகிய விலையில் கிடைக்கிறது. இந்த திட்டங்கள் 90 நாட்களுக்கு கிடைக்கிறது. இந்த திட்டங்கள் கிடைக்கும் பகுதிகள் குறித்து பார்க்கலாம்.

ரூ.449 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.449 விலையில் கிடைக்கும் திட்டம்

பிராட்பேண்ட் திட்டங்களில் பேசிக் திட்டங்கள் என கூறப்படும் திட்டம் ரூ.449 விலையில் கிடைக்கிறது. இது 3300 ஜிபி டேட்டாவை 30 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்குகிறது. இந்த திட்டமானது வடக்கு, வட கிழக்கு பகுதி, தெற்கு மண்டலங்களில் கிடைக்கிறது. மாநிலங்கள் வாரியாக பார்க்கையில் திருப்பதி, விஜயவாடா, பெங்களூரு, ராஜமுந்திரி, மைசூர், தர்வாட், ஷிமோகா, லக்னோ, அலகாபாத், வாரணாசி, மிசோரம், நாகலாந்து, திரிபுரா மற்றும் பாண்டிச்சேரி போன்ற இடங்களில் கிடைக்கிறது.

ரூ.799 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.799 விலையில் கிடைக்கும் திட்டம்

மேலே குறிப்பிட்டுள்ள நகரங்களை தவிர மேலும் சில நகரங்களில் திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டமானது மீரட், நொய்டா மற்றும் காசியாபாத் பகுதியில் கிடைக்கிறது. மேலும் இரண்டாவது திட்டம் என்று கூறும்போது ரூ.799 விலையில் கிடைக்கிறது. இது 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 3300 ஜிபியோடு கிடைக்கிறது. இது பாகல்பூர், பாட்னா, முசாபர்பூர், கயா, மதுபானி, சாப்ரா போன்ற இடங்களில் கிடைக்கிறது.

ரூ.999 விலையில் கிடைக்கும் திட்டம்

ரூ.999 விலையில் கிடைக்கும் திட்டம்

ப்ரீமியம் பைபர் திட்டமானது ரூ.999 விலையில் கிடைக்கிறது. இதுவும் 3300 ஜிபி டேட்டாவை 200 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்குகிறது. இந்த திட்டம் துர்க், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், ராய்ப்பூர் போன்ற இடங்களில் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் வழங்கப்பட்டுள்ள வரம்பு டேட்டா முடிந்தவுடன் இணையம் 2 எம்பிபிஎஸ் வேகத்தில் வழங்கப்படும்.

மொபைல் செயலி மூலம் ஐபிஎல் சூதாட்டம்.! கட்டுக்கட்டாக பணம், செல்போன் பறிமுதல்.!

பிஎஸ்என்எல் நிறுவனம் நான்கு புதிய திட்டங்கள்

பிஎஸ்என்எல் நிறுவனம் நான்கு புதிய திட்டங்கள்

சமீபத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் நான்கு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.499-பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒரு ஃபைபர் பேசிக் திட்டம் என்று கூறப்படுகிறது, இது பயனருக்கு 30 Mbps வேகத்தின் கீழ் 3.3 TB (3300GB) அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் குருP குறிப்பிட்ட வரம்பிற்கு பிறகு, இணைய வேகம்2mbps ஆக குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.799 பிராட்பேண்ட் திட்டம்

ரூ.799 பிராட்பேண்ட் திட்டம்

பிஎஸ்என்எல் ரூ.799 பிராட்பேண்ட் திட்டம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.799-பிராட்பேண்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 100Mbps வேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் டேட்டாவின் வரம்பு முடிந்ததும், வேகம் 2 Mbps ஆக குறைகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்கள் இலவச லேண்ட்லைன் அழைப்பு நன்மையையும் பெறுவார்கள். குறிப்பாக மேலே நாம் பார்த்த பேசிக் திட்டம், இந்த வேல்யூ திட்டம் உட்பட புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட எந்த திட்டங்களுமே நீங்க கால செல்லுபடிகளை வழங்கவில்லை. மாறாக ஒவ்வொரு திட்டத்திற்கும் குறைந்தபட்ச வாடகை காலம் ஒரு மாதம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

200Mbps வேகத்துடன் 3.3TB டேட்டா

200Mbps வேகத்துடன் 3.3TB டேட்டா

பிஎஸ்என்எல் ரூ.999-பிராட்பேண்ட் திட்டம் ஆனது ஒரு பிரீமியம் திட்டம் ஆகும். இதில் பயனர்கள் 200Mbpsவேகத்துடன் 3.3TB (3300GB) டேட்டாவை பெறுகிறார்கள். குறிப்பாக டேட்டா வரம்பு முடிந்ததும்,இதன் வேகம் 2 Mbps ஆக குறைகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு வசதியும் இந்த திட்டத்துடன் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனமும் இதேபோன்ற திட்டத்தை வழங்குகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்கப்படுகிறது.

300 Mbps வேகத்துடன் 4TB டேட்டா

300 Mbps வேகத்துடன் 4TB டேட்டா

பிஎஸ்என்எல் ரூ.1499-பிராட்பேண்ட் திட்டம் ஆனது பயனர்களுக்கு 300 Mbps வேகத்துடன் 4TB (4000GB) டேட்டாவை வழங்குகிறது. இருந்த போதிலும் சில நகரங்களில் அதிகபட்ச வேகம் 200Mbps-உள்ளது. மேலும் இந்த திட்டத்தின் டேட்டா வரம்பு முடிந்ததும், வேகம்4Mbps ஆக குறைகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது. மேலும் இது டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தாவையும் இலவசமாக வழங்குகிறது பயனர்கள் இந்த திட்டத்தில் இருந்து விலகினால் அவர்களுக்கான ஒடிடி சந்தாவும் ரத்து செய்யப்படும். மாறாக அவர் நிறுவனத்தின் சூப்பர்ஸ்டார் 300 மற்றும் சூப்பர்ஸ்டார் 500 பிராட்பேண்ட் திட்டங்களுக்கு இடம்பெயர விரும்பினால் இது நடக்காது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
BSNL New Broadband Plans Available For these Areas Only: Here the List

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X