Home
News

கஸ்டமர்களுக்கு நன்றி கூறும் விதமாக BSNL ரூ.225 அறிமுகம்.. டெய்லி 2.5GB உடன் ஆடிப்போகும் வேலிடிட்டி!

நாம் எல்லோரும் 2025 தீபாவளி பண்டிகை கால கொண்டாட்டத்தில் "பிஸியாக இருந்த நேரத்தில்" பிஎஸ்என்எல் நிறுவனமானது, அதன் 25 ஆண்டு கால கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக.. இத்தனை ஆண்டுகளாக ஆதரவு கொடுத்து வரும் கஸ்டமர்களுக்கு நன்றி கூறும் விதமாக.. ரூ.225 க்கு ஒரு ஸ்பெஷல் பிளானை அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் நிருவனமானது ரூ.225 திட்டத்தை சில்வர் ஜூப்லி பிளான் என்கிற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். நன்மைகளை பொறுத்தவரை இதன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டெய்லி 2.5ஜிபி டேட்டா மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது.

கஸ்டமர்களுக்கு நன்றி கூறும் விதமாக BSNL ரூ.225 அறிமுகம்!

இந்த திட்டத்தையும் சேர்த்து கொண்டால் - 2025 தீபாவளி பண்டிகைக்காக பிஎஸ்என்எல் அறிவித்த மொத்தம் ஆபர்களின் எண்ணிக்கை 4 ஆக உயரும். 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான இந்த டெலிகாம் ஆபரேட்டர் ரூ.1 க்கு 4ஜி பிளான், ரூ.499 ஃபைபர் பேஸிக் பிளான் மீது ரூ.100 தள்ளுபடி மற்றும் இலவச 10 கிராம் வெள்ளி நாணயம் உள்ளிட்ட 3 ஆபர்களை அறிவித்து இருந்தது.

இவைகளில் - பிஎஸ்என்எல் வலைத்தளம் அல்லது பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் மூலம் ரூ.100 அல்லது அதற்கு மேலாக உள்ள திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் 10 அதிர்ஷ்டசாலிகளுக்கு தினமும் 10 கிராம் வெள்ளி நாணயத்தை இலவசமாக வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்ட ஆபர் அக்டோபர் 20 உடன் முடிந்தது. மீதமுள்ள 2 ஆபர்களும் இன்னும் கிடைக்கிறது

பிஎஸ்என்எல்-ன் ரூ.499 மீதான ரூ.100 தள்ளுபடி குறித்த விவரங்கள்: ரூ.1 ரீசார்ஜை தொடர்ந்து ரூ.499 மீது 3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது. ரூ.499 என்பது பிஎஸ்என்எல் ஃபைபர் பேஸிக் பிளான் ஆகும். இந்த திட்டத்தின் அசல் விலை ரூ.499 ஆகும். ஆனால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இது ரூ.100 தள்ளுபடியை பெற்று ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று பிஎஸ்என்எல் அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளம் வழியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்த எக்ஸ் தள பதிவில் "ரூ.399 க்கு 3300 ஜிபி டேட்டாவை அனுபவிக்கவும் (3 மாதங்களுக்கு ரூ.100 தள்ளுபடி) - இந்தியா முழுவதும் அதிவேக 60 எம்பிபிஎஸ் இணையம்! அனைத்து வட்டங்களிலும் இந்த சலுகை செல்லுபடியாகும்" என்று பிஎஸ்என்எல் நிறுவனம் கூறியுள்ளது.

பிஎஸ்என்எல் குறிப்பிடுவது போலவே ரூ.399 (தள்ளுபடி செய்யப்பட்ட விலை) திட்டத்தின் கீழ் 3.3டிபி அல்லது 3300ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 60 எம்பிபிஎஸ் ஆகும். டேட்டா லிமிட்டை தாண்டிய பின்னர் இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீடா ஆனது 4 எம்பிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

பிஎஸ்என்எல்-ன் முதல் தீபாவளி ஆபர் ஆன ரூ.1 திட்டம் குறித்த விவரங்கள்: 2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசாங்கத்திற்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அருமையான புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை அக்டோபர் 15 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை ஒரு மாத காலத்திற்கு "வெறும் ரூ.1 க்கு" 4ஜி சேவையை வழங்குகிறது.

இந்த ரூ.1 திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த திட்டம் பயனர்கள் பிஎஸ்என்எல்-ன் 4ஜி நெட்வொர்க் கவரேஜ் மற்றும் சேவைகளை முழுமையாக அனுபவிக்க அனுமதிக்கும் ஒரு விரிவான தொகுப்பை வழங்குகிறது. இதன் கீழ் இந்தியாவிற்குள் வரம்பற்ற வாய்ஸ் கால்கள், டெய்லி 2ஜிபி அதிவேக டேட்டா, டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் 1 இலவச சிம் கார்டு ஆகியவைகள் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL New 30 Days Recharge Silver Jubilee Plan For Rs 225 To Celebrate 25 Years of Customers Trust
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X